பேய காணோம் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25./5.

நடிகர் நடிகைகள் :- செல்வ அன்பரசன், தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், மீரா மிதுன், கௌசிக் சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- செல்வ அன்பரசன்..

ஒளிப்பதிவு :- ராஜ்.O.S, கௌபாசு, பிரகாஷ்.

படத்தொகுப்பு :- A.K.நாகராஜ்.

இசை :- மிஸ்டர் கோளாறு-காதர் மஸ்தான்.

தயாரிப்பு :-  குளோபல் எண்டர் டெயின்மெண்ட்.

தயாரிப்பாளர் :- தேனி பாரத் R. சுருளிவேல்.

ரேட்டிங் :- 2 / 5

திரைப்படத்தில் ஒரு இயக்குனர் எப்படியாவது பெரிய நடிகரை வைத்து திரைப்படத்தை இயக்கி விட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார் அந்த இயக்குனர் பற்றிய திரைப்படம் தான் அந்த பெயரைபேய காணோம்

வாழ்க்கையில் எப்படியாவது பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்று துடிக்கிறான் கதையின் நாயகன் செல்வ அன்பரசன் , ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும், இவர் மீது நம்பிக்கை வைத்து திரைப்படத்தை தயாரிக்க முன் வரவில்லை, அதனால் சிறிய நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க ஆரம்பிக்கிறார் செல்வ அன்பரசன்.

இயக்குநர் செல்வ அன்பரசன், கதாநாயகன் கெளசிக், கதாநாயகி சந்தியா ராமச்சந்திரன், இணை இயக்குநர் கோதண்டம் உள்ளிட்ட படக்குழுவினர் பேய் திரைப்படம் எடுப்பதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்குகிறார்கள்.

அங்கு இருந்து கொண்டு சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது அங்கு பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் படம் பிடிப்பு நடத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கும் போது அங்கு
மீரா மிதுன் வருகிறார்.

மீரா மிதுன் படக்குழுவினருக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

இதற்கிடையே, அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களால் கதாநாயகி சந்தியா ராமச்சந்திரன் பயந்து போக, படக்குழுவினர் ஒரங சாமியாரை அழைத்து வந்து பார்க்க சொல்கிறார்.

அந்த இடத்திற்கு வரும் சாமியார், படக்குழுவினருடன் இங்கு இருக்கும் மீரா மிதுன் ஒரு பெண் அல்ல பேய் என்ற உண்மையை கூறிவிடுகிறார்.

அங்கிருந்து சென்றுவிடும்படி சொல்லிவிட்டு, அவரும் அங்கிருந்து சென்று விடுகிறார்.

பேய் திரைபபடம் எடுக்க சென்று மீரா மிதுன் என்ற பேயிடம் சிக்கிக்கொண்ட படக்குழுவினர் திரைப்படத்தை எடுத்தார்களா? எடுக்கவில்லையா? பேயிடம் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இநத ‘பேய காணோம்’ திரைப்படத்தின் மீதிகதை.

இநத பேய காணோம் திரைப்படத்தை இயக்கியிருக்கும் செல்வ அன்பரசன், திரைப்படத்தில் த.க.தெ.ம.கி என்ற இயக்குநர் கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்பினால் கவர்கிறார்.

திரைப்பட துறையில் இருக்கும் சிலர் திரைப்பட துறையை எப்படி எல்லாம் பார்க்கிறார்கள், என்பதை மிக நேர்த்தியாக சொல்பவர் திரைப்படத் துறையினரையும் சில இடங்களில் கலாய்த்திருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கெளசிக் எப்போதும் போல் நடனம், சண்டைக்காட்சிகள் என இரண்டிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

அவருக்காகவே சண்டைக்காட்சி வைத்தது போல் இருந்தாலும் அது திரைப்படத்திற்கும் பலம் சேர்க்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் சந்தியா ராமச்சந்திரன் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

காமெடி ஏரியாவை தன் வசம் வைத்துக்கொண்ட விஜய் டிவி கோதண்டம், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. இணை இயக்குநராக அவர் செய்யும் அட்டகாசங்கள் இயக்குநருக்கு தொல்லையாக இருந்தாலும் திரைப்படம் பார்ப்பவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

பத்திரிகையாளர்கள் ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய்சங்கர், துரை ஆனந்த், ரவி, விக்கி என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மிஸ்டர் கோளாறு இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகமாக இருக்கிறது.

காதர் மஸ்தானின் பின்னணி இசை பேய் திரைப்படத்திற்கான ஏற்றவாறு இருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ராஜ்.ஓ.எஸ், கௌபாஸு, பிரகாஷ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

மூன்றுபேரும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்கள்.

பேய் திரைப்படத்தை காமெடியாக சொல்வதோடு, திரைப்பட துறையில் உள்ள கலைஞர்களின் வாழ்க்கையை குறிப்பாக முதல் திரைப்படம் இயக்குபவர்களின் வலிகளை சிரித்தபடியே சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்வ அன்பரசு.

தனது படத்தில் இருக்கும் குறைகளையே கலாய்த்து காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், பல இடங்களில் சினிமாவையே கலாய்த்து நக்கல் செய்து ரசிக்க வைக்கிறார்.

மொத்தத்தில், ‘பேய காணோம்’ திரைப்படம் பயம் இல்லை.