‘பியர் பிரேமா கல்யாணம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- இளன், சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், மாறன், டீப்ஸ்,  “ராஜா ராணி” பாண்டியன், ராஜாமணி, மோகன பிரியா, ஆருஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- இளன்.

ஒளிப்பதிவாளர் :- தினேஷ் கே பாபு.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்.

இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- நெட்ஃப்ளிக்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் .

தயாரிப்பாளர் :- ஸ்ரீநிதி சாகர்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  3/5.

தனது முதல் திரைப்படமான பியார் பிரேமா காதல்’,  திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு இயக்குனராக அறிமுகமான இயக்குநர்  இளன்  ‘ஸ்​டார்’​ திரைப்படத்தை இரண்டாவது திரைப்படமாக ​இயக்கினார்.

அதன் பின்னர் இயக்குநர் இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக
அறி​முகமாகிறார்.

இந்த ‘பியர் பிரேமா கல்யாணம் ‘திரைப்படம் இன்று நெட்ஃப்​ளிக்ஸ் தளத்​தில்  (ஆக.21) வெளியாகிறது.

துபாயில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கதாநாயகன் இளன் துபாயில் பணிபுரியும் வேலை பிடிக்காமல் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து விடுகிறார்.

கதாநாயகன் இளன்  திருமணத்திற்கு தந்தை எம்.எஸ். பாஸ்கர் பார்த்த பெண்ணை சந்திப்பதற்காக கதாநாயகன் இளனிடம் தொலைபேசி எண் கொடுத்து சந்திக்க சொல்கிறார்.

ஆனால், தந்தை எம் எஸ் பாஸ்கர் சொன்ன பெண்னை சந்திக்க செல்லும் கதாநாயகன் இளன் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் கதாநாயகி சான்வீ மேக்னாதான் தந்தை எம் எஸ் பாஸ்கர் சொன்ன பெண் என தவறாக நினைத்து கதாநாயகன் இளன் அவர் மீது காதலில் விழுகிறார்.

ஆனால், தந்தை எம்.எஸ். பாஸ்கர் சந்திக்க சொன்ன பெண் வேறு என்பது தெரிந்ததும், அந்த பெண்ணை அவாய்ட் பண்ண கதாநாயகன் இளன் அந்த பெண்ணிடம் பேசுவதை சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான கதாநாயகி சான்வீ மேக்னா வீடியோவாக எடுத்துப் போட்டு ரெட் ஃபிளாக் என கதாநாயகன் இளன் ஒரு ஆணாதிக்கவாதி என வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்து விடுகிறார்.

கதாநாயகன் இளன் சென்னை சோசியல் மீடியாவில் அசிங்கப்படுத்திய  கதாநாயகி சான்வீ மேக்னா தேடிப் பிடித்து, அவரை காதலிக்கும் விஷயத்தை கதாநாயகன் இளன் சொன்னதும் கதாநாயகி சான்வீ மேக்னாக்கு அவரை பிடித்து போகவே  இருவருக்கும் உடனடியாக  திருமணம் நடைபெறுகிறது.

இருவருக்கும் திருமணம் திருமணம் நடந்து முடியும் வரை அமைதியாக இருக்கும் கதாநாயகி சான்வீ மேக்னா மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்ததும், அவரது அம்மா ராதிகாவின் கண்ணீரை பார்த்ததும் மண்டபத்தை விட்டு தெறித்து ஓடுகிறார்.

இந்த நிலையில் திருமண  மண்டபத்திலிருந்து ஓடிய காரணத்தை கதாநாயகன் இளன் கேட்க, என்னால எங்க வீட்டை விட்டு வர முடியாது என சொல்லும், கதாநாயகி சான்வீ மேக்னா, நீ எங்க வீட்டுக்கு வா என கூறுகிறார்.

கதாநாயகி சான்வீ மேக்னா மீதான காதல் காரணமாக வேலை வெட்டி இல்லாத கதாநாயகன் இளன்  கதாநாயகி சான்வீ மேக்னா வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையாக சென்றாரா?,  செல்லவில்லையா?,
கதாநாயகன் இளனுக்கு புகுந்த வீட்டில் என்னென்ன கொடுமைகள் நடந்தது என்பதுதான் இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் இளன் நடித்திருக்கிறார்.

இயக்குநராக வெற்றி பெற்ற இயக்குநர் இளன் ஆனால் கதாநாயகனாக வெற்றி பெற்றுவிட்டார்.

காதல், மன உளைச்சல், குடும்ப அழுத்தம் போன்ற உணர்ச்சிகரமான தருணங்களில் நடிப்பை இயல்பாக நடித்திருக்கிறார்.

இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார்.

கதாநாயகியாக  நடித்திருக்கும் சான்வீ மேக்னா  காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், தனது தாயைப் பிரிய முடியாமல் தவிக்கும்,  மகளாகவும், தன் காதல் கணவரை நேசிக்கும் மனைவியாகவும், குடும்பத்துக்குள் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கும் பெண்ணாகவும் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் காட்சியில் வெவ்வேறு உணர்வுகளை மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் வழக்கமான நகைச்சுவையை சிறப்பாக வழங்கி இருக்கிறார்.

கதாநாயகி சான்வீ மேக்னா தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகி சான்வீ மேக்னா தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில், கதாநாயகி சான்வீ மேக்னா தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளங்கோ குமரவேல் கதாநாயகன் இளன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,  உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு மிக சிறந்த பங்களிப்பை இயல்பாக கொடுத்திருக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிக மிக கலர்ஃபுல்லாக அனைத்து காட்சிகளையும் திரைப்படம் ஆகியிருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது

பெண்களுக்கு திருமணத்திற்கு அப்புறம் நடக்கக்கூடிய விஷயத்தை ஆண்களுக்கான கதையை வைத்து சிறப்பான  திரைக்கதை மிகச் சிறப்பாகவும் விமோசனமாகவும் காமெடியாகவும் சிறப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் இளன்.

மொத்தத்தில், இந்த பியர் பிரேமா கல்யாணம் திரைப்படம் netflix ott தளத்தில் கண்டு களிக்கலாம்.

error: Content is protected !!