‘ரெட் லேபில்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கே.ஆர். வினோத்.
ஒளிப்பதிவாளர் :- சதீஷ் மையப்பன்.
படத்தொகுப்பாளர் :- லாரன்ஸ் கிஷோர்.
இசையமைப்பாளர் :- கைலாஸ் மேனன்.
தயாரிப்பு நிறுவனம் :- ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர் :- லெனின்.
மக்கள் தொடர்பு :- ஸ்ரீதர் ராஜு, உதய குமார், ஹரி பாபு.
ரேட்டிங் :- 3.5./5.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளகல்லூரியில் படிக்கும் காலகட்டங்களில் அடிதடி மூலம் காவல்துறையில் நான்கு வழக்குகள் என இருந்த கதாநாயகன் லெனின், கல்லூரி படிப்புக்கு பிறகு அடிதடி சண்டை சச்சரவு என அனைத்தையும் விட்டுவிட்டு, தொழில், என அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் லெனின், படித்த அதே கல்லூரியில் நடக்கும் மாணவர்கள் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட ஈரோடு எம் எல் ஏவின் மகன் அடிதடி அடாவடி என ஈடுபடுகிறார்.
அதே கல்லூரியில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாணவன் எம்எல்ஏவின் மகனுக்கு எதிராக போட்டியிட எண்ணுகிறார்.
ஆனால் கல்லூரியில் அடிதடி அடாவடி செய்யும் எம்எல்ஏ மகன் மாணவர்களின் தலைவராக வரக்கூடாது என முன்னாள் மாணவர்களின் தலைவர் கதாநாயகன் லெனின் சென்று ஆதரவு கேட்கிறார்.
கதாநாயகன் லெனின் கல்லூரியில் நடக்கும் மாணவர்களின் தலைவர் தேர்தலுக்கு அதற்கு ஆதரவு தர சம்மதிக்கிறார்.
இந்த நிலையில், மீண்டும் தன் படித்த கல்லூரியில் நடைபெறும் மாணவர்கள் தலைவர் பதவி தேர்தலில் பயணிக்க கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.
கதாநாயகன் லெனின் அடிதடி அடாவடித்தனம் அனைத்தையும் தவிர்த்து விட்டு அமைதியான முறையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவுடன் கல்லூரிக்குள் வருகிறார் கதாநாயகன் லெனின்.
கல்லூரி வளாகத்திற்குள் வைத்து எம் எல் ஏ வின் மச்சானை கதாநாயகன் லெனின் கொலை செய்து விடுகிறார்.
இந்த நிலையில் ஏற்கனவே நான்கு வழக்குகள் கதாநாயகன் லெனின் மீது இருக்கும் நிலையில், கொலை குற்றத்திலும் சிக்கினால் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதால், குற்றத்தில் இருந்து தப்பிக்க, அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவிகளின் உதவியோடு கதாநாயகன் லெனின் ஒரு திட்டம் போடுகிறார்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏவின் மச்சானை தேடி கல்லூரி வளாகத்திற்குள் காவல்துறையினர் மற்றும் எம் எல் ஏ வின் ஆட்களும் கல்லூரி முழுவதும் தேட தொடங்குகிறார்கள்.
கதாநாயகன் லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி செய்த கொலையில் இருந்து தப்பித்தாரா?, தப்பிக்கவில்லையா?, எதற்காக எம் எல் ஏ வின் மச்சானை கொலை செய்தார்? என்பதுதான் ‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக லெனின் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்.
கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரியை முடித்த காலக்கட்டம் என்று தோற்றத்திலும், நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக அஸ்மின், நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அஸ்மின், கதாநாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்றாலும் அளவான நடிப்பு மூலம் தனது பணியை நிறைவாக செய்திருக்கும் அஸ்மின், திரைக்கதையில் முக்கியத்துவத்தோடு பயணித்து, இறுதியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் காமெடி கலந்த வில்லத்தனத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் கதாப்பாத்திரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், திரைப்படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா கதாபாத்திரங்களும் நடித்தவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு ஒரே லொக்கேஷனில் கதை நகர்ந்தாலும், வெவ்வேறு காட்சிகளும் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் கைலாஷ் மேனின் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.
கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், திரில்லர் கிரைம் சஸ்பென்ஸ் கதையில் பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன்.
ஒரு கல்லூரிக்குள் கதை நடந்தாலும், காட்சிகளின் வடிவமைப்பு மூலம் வெவ்வேறு கோணத்தில் எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பாதி முழுவதையும் படு சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று, திரைப்பட ரசிகர்களை ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார். இயக்குநர் கே.ஆர்.வினோத்.
கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக கதாநாயகன் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பான காட்சிகளை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சீட் நுணியில் அமர வைத்து விட்டார் இயக்குனர் கே ஆர் வினோத்.
மொத்தத்தில், ‘ரெட் லேபில்’ திரைப்படம் திரில்லர் கிரைம் சஸ்பென்ஸ் மற்றும் பல திருப்பங்கள் நிறைந்த தரமான சம்பவம்.











