‘ஃப்ரைடே’ (Friday) திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் சித்து குமரேசன் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஹரி வெங்கடேஷ்.
ஒளிப்பதிவாளர் :- ஜானி நாஷ்.
படத்தொகுப்பாளர் :- பிரவீன் M.
இசையமைப்பாளர் :- டுமே.
தயாரிப்பு நிறுவனம் :- டக்டம் மோஷன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- அனிஷ் மசிலாமணி.
ரேட்டிங் – 1.5./5.
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் துப்பாக்கி எடுத்தவர்க்கு துப்பாக்கியால் தான் சாவு” என்பதை இந்த ஃப்ரைடே’ (Friday) திரைப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
அரசியல்வாதியான அதிகார பலம் கொண்ட மைம்கோபி தனக்கு எதிரான ஒருவரை போட்டு தள்ள வேண்டும் என கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி கூறுகிறார்
கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா இனைந்து கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அந்த கொலை முயற்சியில் கே.பி.ஒய் தீனா எதிர்பாராத விதமாக முதுகில் இந்தி குத்து தாக்குதலுக்கு ஆளாக, கே.பி.ஒய் தீனாவை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி கே.பி.ஒய் தீனாவுடன ஒரு பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்கிறார்.
கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி கே.பி.ஒய் தீனாவுடன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தவர், கூட்டத்தில் உள்ள ஆட்களுடன் கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி கே.பி.ஒய் தீனா கொலை செய்ய முயற்சியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம், கே.பி.ஒய் தீனா கதாநாயகன் அனிஷ் மாசிலாமணியுடன இருந்துக் கொண்டே அவரை கொலை செய்ய முயற்சியில் தேடிக் கொண்டிருக்கும் அந்த கூட்டத்திற்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி யாரை, எதற்காக கொலை செய்ய முயற்சி செய்கிறார் ?, கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி இருக்கும் கே.பி.ஒய்.தீனா எதற்காக கதாநாயகன் அனிஷ் மாசிலாமணியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்?, கதாநாயகன் அனிஷ் மாசிலாமணி தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா ?, என்பதுதான் இந்த ’ஃப்ரைடே’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஃப்ரைடே’ திரைப்படத்தில் கதாநாயகனாக அனிஷ் மாசிலாமணி, நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அனிஷ் மாசிலாமணி, எளிமையான தோற்றம், அளவான நடிப்பு மூலம் மணி என்ற ரவுடி கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
ரவுடியாக்கப்பட்ட சூழலை நினைத்து வருந்துவதோடு, மட்டுமல்லாமல் தனது தம்பியை அத்தகைய ரவுடி கும்பலுக்கு வர விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது, என ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு மூலம் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறது.
விஜய் டிவி கே.பி.ஒய் தீனா, ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமான கதாபாத்திரமாக இருந்தாலும், திடீரென்று வில்லன் விஸ்வரூபம் எடுப்பது போல எடுத்து திரைக்கதையில் மிகப்பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
மைம் கோபி தனது அனுபவம் நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்து கொடுத்திருக்கிறார்.
ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகியோர் சில காட்சிகளில் தோன்றும் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும், திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், ஒளிப்பதிவு மூலம் கதைக்களத்தின் பயங்கரத்தை ரசிகர்கள் கண்முன் நிறுத்தி மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் டுமே, இசையில் பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல காட்சிகளில் தன் பின்னணி இசையால் திரைக்கதைக்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறார்
ஒரு சாதாரண கதையை, கையில் எடுத்து சிறப்பான திரைக்கதையை அமைத்து விவரிக்கும் விதம் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சுவாரஸ்யமான திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி வெங்கடேஷ்.
மொத்தத்தில், ‘ஃப்ரைடே’ சுமாரான திரைப்படம்.











