’சிறை’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விக்ரம் பிரபு, LK அக்‌ஷய் குமார், ஆனந்த தம்பிராஜா, அனிஷ்மா அனில்குமார், மூணார் ரமேஷ், பி எல் தேனப்பன், இசக்கி ரகு, தவமணி, சந்திரன் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுரேஷ் ராஜகுமாரி.

ஒளிப்பதிவாள :- மாதேஷ் மாணிக்கம்.

படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.

இசையமைப்பாளர் :- ஜஸ்டின் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம் :- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.

தயாரிப்பாளர் :- எஸ்.எஸ். லலித் குமார்.

ரேட்டிங் :- 4.5./5.

உண்மை சம்பவத்தை அடிப்படையை கொண்டு உருவான கதை மற்றும் திரைக்கதையையும் மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீப காலமாக, தமிழ் திரையுலகில் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனைத்து திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வரிசையில் இந்த “சிறை” திரைப்படமும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு  உருவாக்கப்பட்ட திரைப்படம்

ஒரு நேர்மையான காவலரையும் ஒரு விசாரணை கைதியையும் ஒன்றிணைத்து, அவர்களை மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நிறுத்தும் ஒரு சிறந்த காவல்துறை சார்ந்த திரைப்படமாக “சிறை” உருவாகி இருக்கிறத

வேலூர் மத்திய சிறையில் ஒரு கொலை வழக்கு  விசாரணை கைதியாக ஜந்து வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும்  எல்.கே.அக்‌ஷய் குமாரை,  சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு கதாநாயகன் விக்ரம் பிரபு மற்றும் இரண்டு காவலர்கள் தலைமையிலான குழுவுக்கு ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிலையில்  விசாரணை கைதி எல்.கே.அக்‌ஷய் குமாரை அழைத்துக் கொண்டு கதாநாயகன் விக்ரம் பிரபு மற்றும் இரண்டு காவலர்கள் சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்திற்கு பஸ்ஸில்
பயணம் செய்கிறார்கள்.

பஸ்ஸில் பயணம் செய்யும் போது வழியில் டீ  சாப்பிடுவதற்காக அனைவரும் இறங்க கதாநாயகன் விக்ரம் பிரபு உடன் வந்த காவலர்கள் இறங்கி டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காவலருக்கு வேறு ஒரு நபருக்கு அடிதடி தகராறு மிகப்பெரிய அளவில்  பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார்கள்.

இந்த நிலையில் விசாரணை கைதியான எல்.கே.அக்‌ஷய் குமார் அடிதடி பிரச்சனையை காரணமாக வைத்து காவல்துறையினரின் உடமைகள் மற்றும் துப்பாக்கியுடன்
தப்பி விடுகிறார்.
  
கொலை குற்றவாளியான எல்.கே.அக்‌ஷய் குமாரின் பின்னணி என்ன ?, இவர் யாரை  கொலை செய்தார்?
 
காவல்துறையினரின் உடமைகள் மற்றும் துப்பாக்கியுடன் தப்பி சென்ற விசாரணை கைதியான எல்.கே.அக்‌ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, பிடிப்படவில்லையா?, 
என்பதுதான் இந்த சிறை திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சிறை திரைப்படத்தில்
கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாநாயகன் விக்ரம் பிரபு கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார்

தனக்கு முக்கியத்துவம் உள்ள  கதையாக இல்லாமல் நல்ல ஒரு கதையில் தான்  இருக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த சிறை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நீதிமன்ற காட்சியில் நீதிபதியிடம்  பேசுவது என திரைப்படம் முழுவதும் வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி ஆகியவற்றின் மூலம் தான் நடிகன் என்பதை தாண்டி, ஒரு காவல்துறையில் பணிபுரியும்  காவலராக ரசிகர்கள் மனதுக்குள் கதாநாயகன் விக்ரம் பிரபு சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

இந்த சிறை திரைப்படத்தில் மற்றொரு அறிமுக இளம்  கதாநாயகனாக நடிகர் எல்.கே. அக்‌ஷய் குமார், நடித்திருக்கிறார்.

மற்றொரு அறிமுக இளம் கதாநாயகனாக  நடித்திருக்கும்  எல்.கே.அக்‌ஷய் குமார், ஒரு நடிகருக்கான பயிற்சியை மிக சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ‌

மற்றொரு அறிமுக இளம் கதாநாயகனாக  நடித்திருக்கும்  எல்.கே. அக்‌ஷய் குமார்,  கதாபாத்திரத்திற்கு தேவையான அருமையான நடிப்பை  வெளிக்காட்டியிருக்கிறார்.

பள்ளி பருவம், இளம் பருவம் மற்றும் விசாரணை சிறை கைதி என தன்னுடைய மூன்று தோற்றத்தில் மாற்றத்தை வெளிப்படுத்தி  தன்னுடைய நடிப்பு மூலம் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்து விடுகிறார்.

இரண்டாம் பாதி திரைப்படம் முழுவதையும் ஒற்றை மனிதனாக தோளில் சுமந்து எதார்த்தமான நடிப்பை கொடுத்து தாங்கிப் பிடித்திருக்கும் எல்.கே.அக்‌ஷய் குமாரின் நடிப்புக்கு திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இந்த சிறை திரைப்படத்தில் கதாநாயகியாக அனிஷ்மா அனில்குமார், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், எளிமையான அழகு மற்றும் குழந்தைத் தனமான சிரிப்போடு கவனம் ஈர்ப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தன்னுடைய ஸ்தாபத்திரத்திற்கு சிறப்பு  சேர்த்திருக்கிறார். 

கதாநாயகன் விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆனந்த தம்பிராஜாவின் நடிப்பு  திரைக்கதை கிடைக்குது ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கதாநாயகி அனிஷ்மா அனில்குமார், மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இசக்கி ரகு மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து கொடூரமான வில்லனை போல் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விக்ரம் பிரபு உடன் பயணிக்கும் இரண்டு காவலர்களும் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் மிகப்பெரிய வில்லனாக இருந்த எம் என் நம்பியார் அவர்களை மக்கள் எந்த அளவிற்கு கோவமாக இருந்தார்களோ அந்த அளவிற்கு இந்த இசக்கி ரகு மீது இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு கொலை வெறியில் இருப்பார்கள் என்பது உறுதி.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மூலம் மிகப்பெரிய அளவில்  திரைப்படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி  இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை கதாபாத்திரமாக பயணித்து திரைக்கதைக்கு மாபெரும் பலமாக அமைந்திருக்கிறது.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் நடிகர் தமிழ் எழுதிய கதையை மிகவும் சாதாரணமாக இருந்தாலும், அதை தன்னுடைய சிறப்பான  திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மூலம் மிகப்பெரிய வலிமையான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.

ஏழை எளிய மக்களின்  வாழ்வியலையும், நீதி துறையில் நடக்கும் அவலங்களும் சார்ந்த அரசியலையும் பேசும் ஒரு சிறந்த படைப்பாகவும் கொடுத்திருக்கும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியை தமிழ் திரைப்பட உலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது உறுதி.

மொத்தத்தில், ‘சிறை’ உலக  திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!