‘சட்டமும் நீதியும் 2’ இனையத்தொடர் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, பிரேம்குமார், கல்லூரி வினோத், கவிதா பாரதி, ஆறு பாலா, பீட்டர் ஜே. சந்திரன், ஷிவின், பருல் சாம்பரியா, பவன், அக்ஷயா வி., பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா சுந்தர்ராமன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலாஜி செல்வராஜ்.

ஒளிப்பதிவாளர் :- எஸ். கோகுலகிருஷ்ணன்.

படத்தொகுப்பாளர் :- ஆத்தியீஸ்வரன் ஆர்.

இசையமைப்பாளர் :- விபின் பாஸ்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- 18 கிரியேட்டர்ஸ்.

தயாரிப்பாளர் – சசிகலா பிரபாகரன்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)

வெளியீட்டு தேதி :- 23 அக்டோபர் 2026.

ரேட்டிங் :-  3./5.

தன்னுடைய மகளுக்காக  நீதிமன்ற வளாகத்தில் நீதி கேட்டு நீதி மறுக்கப்படவே தற்கொலை செய்து கொண்ட ஒரு ஏழை தந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்தும் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரான கதாநாயகன் சரவணன், தனது வாதத்திறமையாலும், தீவிர விசாரணை மூலம் அந்த வழக்கில் புதைந்து கிடந்த பல மர்மங்களை எப்படி வெளிக்கொண்டு வருகிறார்  என்பது தான் ‘சட்டமும் நீதியும்’ முதல் பாகத்தின தொடர்ச்சியாக தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக ‘சட்டமும் நீதியும் 2’

பார்ட்டி நடக்கும் ஒரு பங்களாவில் காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரை துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்து விடுகிறார்.

காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரை யாராவது கொன்று இருக்கலாம் என  நான்கு காவல்துறை அதிகாரிகளை  காவல்துறையினர் கைது செய்கிறார்கள்.

நாங்கள் காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரை நாங்கள் நால்வரும் கொலை செய்யவில்லை என உறுதியாக இருக்கிறார்கள்.

நான்கு காவல்துறை அதிகாரிகள் வழக்கை எந்த ஒரு வழக்கறிஞரும் எடுக்கக் கூடாது என வழக்கறிஞர் கவுன்சில் அறிவுறுத்துகிறது.

வழக்கறிஞர் கவுன்சில் கூறியதை மீறி சாதாரண ஒரு வழக்கறிஞர் கதாநாயகன் சரவணன் அந்த வழக்கை கையில் எடுக்கிறார்.

கொலை செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரின் மனைவி வரலட்சுமி சரத்குமார் ஒரு பிரபலமான வழக்கறிஞர் வழக்கறிஞர்கள் கவுன்சில் பிரசிடெண்ட் ஆகவும் இருக்கிறார்.

தனது கணவர் காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரை இந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் தான் கொலை செய்திருக்கிறார்கள் என நம்புகிறார்.

தன்னுடைய கணவர் காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரை கொலை செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என பிரபலமான வழக்கறிஞர் வரலட்சுமி சரத்குமார் அந்த வழக்கில் நுழைகிறார்.

கொலை குற்றம் செலுத்தப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகளை வழக்கறிஞர் கதாநாயகன் சரவணன் தண்டனையிலிருந்து  காப்பாற்றினாரா? இல்லை  காப்பாற்றவில்லையா?

தன்னுடைய கணவர் காவல்துறை ஆய்வாளர் பிரேம்குமாரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா?, தண்டனை வாங்கி கொடுக்க வில்லையா?, என்பதுதான் சட்டமும் நீதியும் இணையத் தொடரின் மீதிக்கதை.

இந்த இனையத்தொடரில் கதையின் நாயகனாக சரவணன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கதாநாயகன் சரவணன்  சாதாரணமான நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரான  தனது அனுபவம் மற்றும் ஒரு வழக்கை எப்படி எல்லாம் ஆதாரங்கள் மூலம் திறமையான முறையின் மூலம் எதிர் தரப்பை தடுமாற வைக்கும் அளவிற்கு கதாநாயகன் சரவணன், தனது அலட்டல் இல்லாத நடிப்பு மூலம் தொடருக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இறந்த காவல்துறை ஆய்வாளரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், மிகப்பெரிய வழக்கறிஞர் என்பதால், கைதான நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுப்பதில் வரலட்சுமி சரத்குமார், தீவிரம் காட்டுகிறார்.

தன்னுடைய கணவரை கொலை செய்தவர்கள் மீது கொலை வெறி கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் நீதிமன்றத்தில் மிகவும் திறமையான வழக்கறிஞராக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாலமாக அமைந்துள்ளது.

வரலட்சுமி சரத்குமாரின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்குமார், கதையின் நாயகன்  சரவணனின் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லாவண்யா, குற்றவாளி காவல்துறை அதிகாரிகளாக  நடித்திருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் தொடருக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  எஸ். கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் ஒரு தனித்துவமான காட்சி மொழியை  ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும நீதிமன்ற வாதங்களை மிகவும் நேர்த்தியாக தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறார.

ஒரு கொலை, அதன் பின்னணியில் நடந்தது என்ன ?, என்ற ஒருவரிக்கதை என்றாலும், ஒவ்வொரு தொடர் முடியும் போது இறுதிக்கட்ட காட்சியில்,  அடுத்தடுத்து என்ன நடக்கும் ? என்ற கேள்வி இனையத்தொடர் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் எழும்படி காட்சிகளை மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ்.

மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும் 2’ முதல் சீசனைப் போல் இரண்டாம் சீசனும பரபரப்பாக இருக்கிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!