‘ஹைக்கூ’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- யுவராஜ் சின்னசாமி.
ஒளிப்பதிவாளர் :- பிரியேஷ் குருசாமி.
படத்தொகுப்பாளர் :- சக்தி பிரணேஷ் பி.
இசையமைப்பாளர் :- சித்து குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- விஷன் சினிமா ஹவுஸ்.
தயாரிப்பாளர்கள் :- டாக்டர் டி. அருளானந்து, மாத்யூ அருளானந்து
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா (D ONE)
வெளியீட்டு தேதி :- 23 அக்டோபர் 2026.
ரேட்டிங் :- 3./5.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது நண்பர்களின் பேச்சைக் கேட்டு பெண்கள் கழிப்பறைக்குத் தவறுதலாகச் சென்றதால் கதாநாயகன் எகன் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்.
வேறு ஒரு கல்லூரியில் சேரலாம் என பல கல்லூரிகளில் ஏறி இறங்கி அட்மிஷன் கிடைக்காமல் வேறு வழியின்றி புதிதாக இருபாலர் கல்லூரியாக மாறிய பெண்கள் கல்லூரியில் சேர்கிறார்.
கதாநாயகன் எகன் சேரும் அந்தக் கல்லூரியில் பெண்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒரே ஆண் மாணவராக சேருகிறார்.
அதே கல்லூரியில் அதே வகுப்பில், படிக்கும் கதாநாயகி ஸ்ரீதேவி அப்பாலாவுக்கும் காதல் மலர்கிறது.
ஆனால், சாதி வெறி பிடித்த கதாநாயகி ஸ்ரீதேவி அப்பாலாவின் தந்தை இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
வேலை இல்லாமலும் சந்தேகம், ஜாதி பிரச்சனை என கருத்து வேறுபாடுகள் எனப் பல பிரச்சினைகளால் கதாநாயகி ஸ்ரீதேவி அப்பாலா கதாநாயகன் எகன் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
கதாநாயகி ஸ்ரீதேவி அப்பாலா மற்றும் கதாநாயகி ஸ்ரீதேவி அப்பாலா கதாநாயகன் எகன் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
கதாநாயகன் எகன் கருத்து வேறுபாடு காரணமாக கதாநாயகி ஸ்ரீதேவி அப்பாலா வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் குழுத் தலைவராகப் பணிபுரியும் கதாநாயகன் ஏகன், அங்கு புதிதாக வேலைக்குச் சேரும் மற்றொரு கதாநாயகி ஃபெமினா ஜார்ஜுக்கு காதலன் மூலம் ஏற்படும் தொல்லைகளில் இருந்து கதாநாயகன் ஏகன் காப்பாற்றுகிறார்.
கதாநாயகன் ஏகன், மற்றொரு கதாநாயகி ஃபெமினா ஜார்ஜு இருவருக்குள் காதல் மலர்கிறது.
இந்த நிலையில், தனது முதல் காதலியைப் போலவே தன்னையும் நடத்துவதை உணரும் கதாநாயகி ஃபெமினா ஜார்ஜு, தான் தனித்துவமற்ற காதலியாக நடத்தப்படுவதாக வேதனைப்படுகிறார்.
கதாநாயகன் ஏகனின் முதல் காதல் வாழ்க்கையும் இந்த காதல் வாழ்க்கையும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
இதையடுத்து கதாநாயகன் ஏகன், மற்றொரு கதாநாயகி ஃபெமினா ஜார்ஜு இருவருக்கும் இடையே காதலில் பிரிவு ஏற்பட காதலில் ஒன்று சேர்ந்தார்களா சேரவில்லையா என்பதுதான் இந்த ஹைக்கூ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் கதாநாயகனாக எகன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் எகன் தாழ்வு மனப்பான்மை கொண்ட இளைஞனாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘ஹைக்கூ’ கதாநாயகிகளாக ஸ்ரீதேவி அப்பாலாவும் ஃபெமினா ஜார்ஜும் இருவரும் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி அப்பாலாவும் ஃபெமினா ஜார்ஜும் இருவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி அப்பாலாவின் முகபாவனைகளும், ஃபெமினா ஜார்ஜின் புன்னகையும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
காதலில் நம்பிக்கை, தனித்துவம், சுயமரியாதை ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை ஆனால், இந்த அம்சங்களை ஆழமாகப் பேசுவதற்கான வாய்ப்பு இருந்தும் திரைக்கதை அதைச் சரியாகப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னசாமி.
மொத்தத்தில், ‘ஹைக்கூ’ திரைப்படம் நல்ல கருத்து இருந்தும் திரைக்கதைத் தொய்வால் முழுமையாகக் கவரத் தவறிய காதல் திரைப்படம்!













