‘சீதா பயணம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நிரஞ்சன் சுதீந்திரா, ஐஸ்வர்யா அர்ஜுன், அர்ஜுன், துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, சரண் சிரி ஹனுமந்த், நியா, மணிசந்தனா, சௌமித்ரா, நர்ரா ஸ்ரீனு, சஹஸ்ரா, ராஜ் குமார், சஞ்சய், நாக மகேஷ், போசானி, சுமத்ரா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அர்ஜுன்.
ஒளிப்பதிவாளர் :- ஜி.பாலமுருகன்.
படத்தொகுப்பாளர் :- அயூப் கான்
இசையமைப்பாளர் :- அனுப் ரூபன்ஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.
தயாரிப்பாளர் :- அர்ஜுன்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் AIM.
ரேட்டிங் :- 2.5./5.
கதாநாயகி ஐஷ்வர்யா அர்ஜுன் தாயை சிறு வயதிலெயே இழந்து தனது தந்தை சத்யராஜ் வளர்ப்பில் நன்றாக படித்து சமையல் கலை வல்லுனராக இருக்கிறார்.
கதாநாயகி ஐஷ்வர்யா அர்ஜுன் ஒரு நாள் பிரபல சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு செல்கிறார்.
கதாநாயகி ஐஷ்வர்யா அர்ஜுன் மதுரை நோக்கி செல்லும் வழியில் கதாநாயகன் நிரஞ்சன் சுதீந்திரா தனது ஊருக்கு செல்வதற்காக லிப்ட் கேட்க, லிப்ட் கொடுத்து இருவரும் பயணிக்கிறார்.
அப்படி செல்லும் வகையில் டீக்கடை, ஸ்கூல் குழந்தைகள், மற்றும் ரோட்டில் பழம் விற்கும் பெண் என அனைவரையும் சந்தித்து கதாநாயகன் நிரஞ்சன் சுதீந்திரா அவர் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் ஹோட்டலுக்கு கதாநாயகி ஐஷ்வர்யா அர்ஜுன் செல்லும் நிலையில், ஒர்க் ஷாப் நடந்த ஹோட்டலில் அருகில் வரும் போது கேஸ் லீக்கெஜால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, கதாநாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் 20 நொடி பொழுதில் உயிர் தப்பிக்கிறார்.
இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததால் ஒரு முடிவுக்கு கதாநாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் வருகிறார், அது என்னவென்றால் தான் 20 நொடி தாமதமாக வர, பலரும் தன்னை தடுத்து நிறுத்தினார்கள், அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டு கதாநாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் பயணத்தை தொடங்குகிறார்.
தன் உயிரை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி கூறினாரா?, நன்றி கூறவில்லையா?, என்பதுதான் இந்த சீதா பயணம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சீதா பயணம் திரைப்படத்தில் கதாநாயகனாக நிரஞ்சன் சுதீந்திரா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நிரஞ்சன் சுதீந்திரா வேறு யாரும் இல்லை கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திராவின் மருமகன் இந்த சீதா பயணம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமாகிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நிரஞ்சன் சுதீந்திரா மிக மிக அருமையான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இந்த சீதா பயணம் திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றும் ‘சீதா’ என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அர்ஜுன் சிறப்பு தோற்றத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது.
பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்
துருவா சர்ஜா அர்ஜுனின் மருமகன் மற்றும் ஆக்ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா, இதில் ‘பவன்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது திரைப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பு.
இந்த சீதா பயணம் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற பித்திரி சதி, சரண் சிரி ஹனுமந்த், நியா, மணிசந்தனா, சௌமித்ரா, நர்ரா ஸ்ரீனு, சஹஸ்ரா, ராஜ் குமார், சஞ்சய், நாக மகேஷ், போசானி, சுமத்ரா, அனைத்து கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் எதுவும் ஈர்க்கவில்லை, மற்றும் பின்னணி இசை நன்றாகவே உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இந்த சீதா பயணம் திரைப்படம் தமிழ் திரைப்படமா அல்லது தெலுங்கு திரைப்படமா என்ற குழப்பம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது,
பல காட்சிகளில் பின்னணி குரல் லிப் சிங்-கே இல்லாமல், தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்திருப்பார்கள் போல, அதுனாலேயே கதாநாயகன் நடிப்பு எதோ டப்பிங் திரைப்படம் பார்ப்பது போலவே உள்ளது.
மொத்தத்தில், இந்த ‘சீதா பயணம்’ இந்த ஜெனரேஷனில் ஈடுகொடுக்க முடியாத கொஞ்சம் சுமாரான பயணமாகவே உள்ளது.











