சிங்கப்பெண்ணை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சமுத்திரகனி, ஷில்பா மஞ்சுநாத், ஆர்த்தி, தீபக் நம்பியார், பசங்க சிவகுமார், ஏ.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெ.எஸ்.பி சதீஷ்.
ஒளிப்பதிவாளர் :- என் ஏ ஏகாம்பரம்.
படத்தொகுப்பாளர் :- பிரவீன் கே எல்.
இசையமைப்பாளர் :- குமரன் சிவமணி.
தயாரிப்பு நிறுவனம் :- ஜெ.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- ஜெ.எஸ்.பி சதீஷ்.
சிறுவயதில் இருந்து நீச்சல் மீது ஆர்வம் உள்ள கதாநாயகி சில்பா மஞ்சுநாத் தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி நீச்சல் வீராங்கனையாகி சென்னையில் உள்ள நீச்சல் பயிற்சி பள்ளியில் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் சொந்த கிராமத்துக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை இயக்குனர் ஏ வெங்கடேஷ் முயற்சி செய்கிறார்.
அந்த திருமண பேச்சை முறியடித்து மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார்.
அதே கிராமத்தில் தன் சிறு வயதில் இருந்து கதாநாயகி சில்பா மஞ்சுநாத் வீட்டில் பணிபுரிந்து வரும் தன் உயிரையும் காப்பாற்றிய ஒரு பெண்மணியின் பேத்திக்கு நிஜ வீராங்கனை ஆர்த்தி அதே கிராமத்தில் உள்ள கிணற்றில் நீச்சல், அடிப்பது சைக்கிள் ஓட்டுதல் ஓட்டப்பந்தயம் என பல்வேறு திறமைகள் இருப்பதைப் கண்டு வியக்கிறாள்.
ஆனால் அந்தப் நிஜ வீராங்கனை ஆர்த்தியின் குடிகார முறைமாமன் சென்ராயன் ஆரத்தி எப்படியாவது திருமணம் செய்து கொள்ளத் திட்டம் தீட்டுகிறான்.
நிஜ வீராங்கனை ஆர்த்தியின் பாதுகாப்பாக இருந்த பாட்டியும் இறந்து விட , நிஜ வீராங்கனை ஆர்த்தியை கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் தன்னோடு சென்னைக்கு அழைத்து வந்து , நீச்சல் பயிற்சிகள் தருகிறாள்.
ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியான பிரேம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தன மகளுக்கு உயர்கல்வியில் முதல் இடம் வாங்குவதற்காக பயிற்சியாளர் கையில் போட்டுக் கொண்டு கோல்மால் செய்ய , அவருடைய மகள் வெற்றி பெறுகிறார..
மனம் தளராத நீச்சல் பயிற்சியாளர் கதாநாயகி சில்பா மஞ்சுநாத் நிஜ வீராங்கனை ஆர்த்திக்கு நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தய திறமைகள் மூன்றும் தேவைப்படும் அளவிற்கு போட்டிக்கு தயார் செய்கிறாள்.
இந்நிலையில் விபத்தில் சிக்கும் நிஜ வீராங்கனை ஆர்த்திக்கு சற்று அதிகமான சத்தம் கேட்டாலோ உடல் வறண்டு போனாலோ மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது.
அதன்பின் நிஜ வீராங்கனை ஆர்த்தி விபத்துக்குப் பின் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்தின் கனவு நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இந்த சிங்கப் பெண்ணே திரைப்படத்தின் மீதி கதை.
இந்த சிங்க பெண்ணே திரைப்படத்தில் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார்.
நீச்சல் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத் மிக சிறப்பாக நீச்சல் பயிற்சியாளராகவே மாறி நடித்துள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத். நீச்சல் பயிற்சியாளர் பாத்திரத்துக்கு மிகமிக பொருத்தமாக இருக்கிறார்.
தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஜ வீராங்கனை ஆர்த்தி தோற்றப் பொருத்தமும் முகத்தில் சூழ்ந்திருக்கும் அப்பாவித்தனமும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
தன்னம்பிக்கையோடு எழுந்து ஓடுவது என தேன்மொழி கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக பொருத்திக் கொண்டு, உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.
ஆரத்தி நிஜத்திலும் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த சிங்கப்பெண் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
சமுத்திரகனி ஒரேயொரு காட்சியில் வந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் தடைகளைச் தாண்டி சாதித்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி, மாற்றுத்திறனாளி சாதனைப் பெண்மணி மாதவி லதாவை அறிமுகப்படுத்திப் பேசியிருப்பது பலருக்குள்ளும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்துவது அருமை.
கதாநாயகி சில்பா மஞ்சுநாத்தின் தந்தையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் ஏ வெங்கடேஷ் ஐ ஏ ஏஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம், நிஜ வீராங்கனை ஆரத்தி என் தாய் மாமனாக நடித்திருக்கும் சென்ராயன் என் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என் ஏ ஏகாம்பரம் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியின் வாரிசான குமரேசன் சிவமணியின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பு தர பின்னணி இசை காட்சிகளின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது.
விளையாட்டு வீராங்கனை பற்றிய நீச்சல் விளையாட்டு பற்றி கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குநர் ஜெ.எஸ்.பி சதீஷ்.
மொத்தத்தில் இந்த சிங்கப்பெண்ணே திரைப்படம் விளையாட்டு பிடித்தவர்கள், இந்த சிங்க பெண்ணே திரைப்படத்தை ரசிக்கலாம்.











