சலார் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3./5.
நடிகர் & நடிகைகள் :- பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி, சம்பத் ராம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரசாந்த் நீல்.
ஒளிப்பதிவாளர் :- புவன் கவுடா.
படத்தொகுப்பாளர் :- உஜ்வல் குல்கர்னி.
இசையமைப்பாளர் :- ரவி பஸ்ரூர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஹோம்பாலே பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- விஜய் கிரகந்தூர்.
ரேட்டிங் :- 3./ 5.
கதாநாயகி ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது ஸ்ருதிஹாசனின்
தந்தையை ஏழு வருடமாக ஒரு மிகப்பெரிய கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது.
கதாநாயகி ஸ்ருதிஹாசன் திடீரென்று வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார்.
அப்போது ஸ்ரேயா ரெட்டி தன்னிடமுள்ள ரவுடி கும்பலிடம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் கதாநாயகி ஸ்ருதிஹாசனை எங்கிருந்தாலும் கடத்தி வரச்சொல்கிறார்.
இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து தன் மகள் இந்தியா வருவதாகவும் நீங்கள் தயவுசெய்து தன் மகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.
கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு வெளிநாட்டில் இருந்து போன் செய்து நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது என கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து கதாநாயகி ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் பிரபாஸ் களமிறங்குகிறார்.
இறுதியில் கதாநாயகி ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா ரெட்டி கடத்துவதற்கான காரணம் என்ன? மைம் கோபியிடம் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபியிடம் என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதுதான் இந்த சலார் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படத்தில் கதாநாயகனாக ரெபில் ஸ்டார் பிரபாஸ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் பிரபாஸ் சண்டை காட்சிகளில் அமர்க்களம் படுத்திருக்கிறார்.
கதாநாயகன் பிரபாஸ் தனது உயிர் நண்பனுக்காக உருகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்.
ஆரம்பக் காட்சிகளில் மிகவும் சாந்தமாகவும் இறுதிக் காட்சிகளில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகவும் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
கதாநாயகன் பிரபாஸின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
பிருத்விராஜ் சுகுமாரன் உயிர்
நண்பனாகவும், நம்பிக்கை துரோகியாகவும் அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பின் மூலம் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடித்திருக்கிறார்.
கதாநாயகி ஸ்ருதிஹாசன் தன் கதாபாத்திரத்தை வந்து உணர்ந்து மிகவும் சிறப்பாக அடித்திருக்கிறார்.
மைம் கோபி தனது அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
சம்பத்ராம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்தை மிரட்டி வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை மற்றும் பாடல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு திரைப்படத்தை ரசிக்க வைத்துள்ளது.
இந்த சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படத்தின் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
சில காட்சிகளை தன்னுடைய திரைக்கதையில் மூலம் புல்லரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
மொத்தத்தில் சலார் பார்ட் 1 சீஸ் ஃபயர் திரைப்படம் கேஜிஎப் சாயலில் இருப்பது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.











