கண்ணகி திரைவிமர்சனம் ரேட்டிங்:-3.75/5.

நடிகர் & நடிகைகள் :- கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- யஷ்வந்த் கிஷோர்.

ஒளிப்பதிவாளர் :- ராம்ஜி.

படத்தொகுப்பாளர் :- கே. சரத்குமார்.

இசையமைப்பாளர் :- ஷான் ரஹ்மான் & அரவிந்த் சுந்தர்.

தயாரிப்பு நிறுவனம்:- ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட்  மற்றும்  E5 என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்கள் :- எம் கணேஷ், ஜே தனுஷ்.

ரேட்டிங் :- 3.75/ 5.

கதாநாயகி அம்மு அபிராமியின் கதை.

திருமண வயது ஆகியும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் கதாநாயகி அம்மு அபிராமிக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தலை போட்டுக் கொண்டே வருகிறது.

கதாநாயகி ஷாலின் ஜோயாவின் கதை.

காதல் மற்றும் திருமணத்தின் மீது தனது வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் கதாநாயகி ஷாலின் ஜோயா, திருமணமே ஆகாமல் லிவிங் டூ கெதர் முறையில் ஓரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகி கீர்த்தி பாண்டியனின் கதை.

தான் காதலித்த காதலனால் கர்ப்பமடைந்த கதாநாயகி கீர்த்தி பாண்டியன், தனது வயிற்றில் வளரும் குழந்தையின் கருவை பல மருத்துவமனைகளுக்கு சென்று கலைக்க முடியாமல் இருவரும் கஷ்ட்டப்பட்டு வருகிறார்.

கதாநாயகி வித்யா பிரதீபின் கதை.

தான் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவரின் கட்டாயத்தால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் கதாநாயகி வித்யா பிரதீப் தன் கணவருக்கு விவாகரத்து தர முடியாது கனவுருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

இப்படி கதாநாயகி கீர்த்தி பாண்டியன், கதாநாயகி அம்மு அபிராமி, கதாநாயகி வித்யா பிரதீப், கதாநாயகி ஷாலின் ஜோயா, இப்படி நான்கு பெண்களும் பிரச்சனைகளோடு வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் பிரச்சனைகளை எப்படி எல்லாம் சமாளித்தார்களா? பிரச்சனைகளை சமாளிக்க வில்லையா?. என்பதுதான் இந்த கண்ணகி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தக் கண்ணகி திரைப்படத்தில் நான்கு கதாநாயகிகள் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகி அம்மு அபிராமி கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி பாண்டியன் அனைத்து காட்சிகளிலும் பதுங்கி இருந்துவிட்டு எதுவும் பேசாமல் கடைசியில் புலி போல் பாய்ந்து நடிப்பை மிகவும் அற்புதமாக நான்கு கதாபாத்திரத்தில் இணைத்து ஒரே கதாபத்திரமாக மிகவும் அருமையாக கதையாக கொடுத்திருக்கிறார்.

கதாநாயகி வித்யா பிரதீப் தனது அப்பாவியான கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

நான்கு கதாநாயகிகளும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகி அம்மு அபிராமியின் தந்தையாக வரும் மயில்சாமி தனக்கு அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகி அம்மு அபிராமியின் தாயாக வரும் மௌனிகா மிகவும் அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

யஷ்வந்த் கிஷோர், வெற்றி ஆதேஷ் சுதாகர், என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் காட்சிகளை அருமையாக திரைப்படமாகி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஷான் ரகுமானின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை என்ற ரீதியில் கதை நகர்ந்தாலும், அப்பெண்களின் பிரச்சனைகளை திரைக்கதையின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக கடந்து செல்லும் வகையில் நான்கு கதாநாயகிகளை அடிக்க வைத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்.

திரக்கதை மற்றும் காட்சிகளை மிக இயல்பாக வடிவமைத்து ரசிக்க வைத்திருப்பதோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார் அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்.

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் கண்ணகி என்ற கிழிந்த நாவலை முழுமையாக ஒட்டவைத்து படித்தது போல் ஒரு நல்ல ஒரு அனுபவம் கிடைத்தது.

குறிப்பு:- பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் கண்ணகி.

error: Content is protected !!