நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி,
தமிழ்செல்வி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரசாத் ராமர்.

ஒளிப்பதிவாளர் :- உதய் தங்கவேல்.

படத்தொகுப்பாளர் :- ராதாகிருஷ்ணன் தனபால்.

இசையமைப்பாளர் :- பிரதீப் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- பூர்வா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- பிரதீப் குமார்.

 

 

மதுரையை சேர்ந்த கதாநாயகன் தான் செந்தூர் பாண்டியன்.தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் கொண்டு வேலை வெட்டிக்குச் செல்லாமல் ஊதாரி தனமாக ஊரை சுற்றிக்கொண்டு பொழுதை கழித்துக் கொண்டு வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் இருக்கும் இளம் பெண்களைக் குறிவைத்து மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது இவரது வழக்கமான வேலை இவருடைய வலையில் விழுந்த இளம் பெண்களை திரையரங்கிற்கு அழைத்துக் சென்று கட்டி அணைத்து சல்லாபத்தில் ஈடுபடுவது கதாநாயகன் தான் செந்தூர் பாண்டியன் இது ஒரு வேலையாக இருந்து வருகிறான்

அப்படியாக மாயவரத்தில் இருக்கும் கதாநாயகி ப்ரீத்தி கரணுடன் சோசியல் மீடியா மூலமாக நட்பு ஏற்பட்டு பழகி வருகிறார்கள்..

கதாநாயகி ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்டு கதாநாயகன் செந்தூரப்பாண்டியன் கதாநாயகி ப்ரீத்தி கரண் நேரில் சந்தித்து பிறந்தநாள் கிப்ட் கொடுப்பதற்காக தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்கு கிளம்பி செல்கிறார்கள்.

கதாநாயகி ப்ரீத்தி கரணுடன் எப்படியாவது உல்லாசம் அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறார் கதாநாயகன் செந்தூர் பாண்டியன்.

கதாநாயகி ப்ரீத்தி கரணை சந்திக்க சென்ற இடத்தில் என்ன நடந்தது கதாநாயகி ப்ரீத்தி கரணை உல்லாசம் அனுபவித்தாரா? அனுபவிக்கவில்லையா?

என்பதுதான் இந்த நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படத்தில் கதாநாயகனாக செந்தூரப் பாண்டியன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் செந்தூர் பாண்டியன் மதுரை மண்ணின் உடல் மொழியை தனது நடிப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்

ஒரு சில காட்சிகளில் மூக்குடைக்கப்பட்டு நிற்கும் காட்சியாக இருக்கட்டும், தனது நண்பனுடன் யதார்த்தமாக வசனம் பேசுவதாக இருக்கட்டும் என பல காட்சிகளில் நன்றாகவே நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துள்ளார்.

இந்த நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி கரண் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ப்ரீத்தி கரண், பார்ப்பதற்கு மிக அழகாகவும் காட்சிகளில் அளவாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் செந்தூர் பாண்டியனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வந்த சுரேஷ் மதியழகன், ஆங்காங்கே யதார்த்தமாக அடிக்கும் காமெடிகள் நன்றாகவே உள்ளது.

மற்றபடி திரைப்படத்தில் நடித்த மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக பொருத்தமாகவே நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு மூலம் நிறைய காட்சிகள் சிங்கிள் ஷாட்களாக நகர்வது திரைப்படத்திற்குள் நம்மை எளிதில் அழைத்து சென்று விடுகிறார்.

இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் இசை பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கேற்றவாறு பயணிக்க உறுதுணையாக அமைந்திருக்கிறது.

கிராம இளைஞர்கள் மத்தியில் நிகழ்காலத்தில் நடக்கும் கடந்த காலத்தின் நினைவுகளை பல காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் நினைவிற்கு கொண்டு வந்து சென்றிருக்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.

மொத்தத்தில் இந்த நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!