சொப்பன சுந்தரி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75/ 5.

நடிகர் நடிகைகள் :- ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, தீபா ஷங்கர், கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி, ஷா ரா, சதிஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுரராவ், ஆகஸ்டின், Nakkalites தனம், அருவி பாலா மனிதன் வெங்கட், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- SG சார்லஸ்.

ஒளிப்பதிவு :- பாலமுருகன், விக்னேஷ்.

படத்தொகுப்பு :-  சரத், புவன் ஸ்ரீனிவாஸ்.

இசை :- அஜ்மல் தஹஸீன் & விஷால் சந்திரசேகர்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஹுய்பாக்ஸ் ஸ்டுடியோஸ் & ஹம்சினி எண்டெர்டைன்மெண்ட் & அஹிம்சா எண்டெர்டைன்மென்ட்.

தயாரிப்பாளர் :- பாலாஜி & விவேக் ரவிச்சந்திரன்.

ரேட்டிங் :- 3.75/ 5.

வறுமையின் எல்லைக்கோட்டின் கிழ் இருக்கும் தாய், வாய் பேச முடியாத சகோதரி படுத்த படுக்கையாக இருக்கும் தந்தை என அனைவரையும் தன் தலையில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கதாநாயகி ஜஸ்வர்யா ராஜேஷ். ஒரு குப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து தன் குடும்பத்தை சமாளித்து கதாநாயகி ஜஸ்வர்யா ராஜேஷ்.

அந்த நகைக்கைடை அதிக அளவில் நகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பம்பர் பரிசு கொடுக்க அந்த நகைக்கடையின் முதலாளி முடிவு செய்கிறார்.

ரூபாய்.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பம்பர் பரிசாக கதாநாயகி ஜஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கிறது.

கதாநாயகி ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரின் குடும்பத்துக்கும் இந்த கார் பம்பர் பரிசாக கிடைத்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏழ்மையின் காரணத்தால் வாய் பேச முடியாத தனது சகோதரிக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது.

பம்பர் பரிசாக கிடைத்த காரை சீதனமாக கொடுத்து தன் சகோதரியின் திருமணத்தை நடத்தி விடலாம் என முடிவு செய்கிறார் கதாநாயகி ஜஸ்வர்யா ராஜேஷ்.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் வாய்பேச முடியாத சகோதரியும் வருங்கால கணவருடன் ஒருநாள் இரவு அந்த காரை எடுத்துக்கொண்டு சுற்றி பார்க்க செல்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டில் நடந்து வந்த ஒருவரின் மீது காரை இடித்து விடுகிறார்.

விபத்தில் சிக்கிய அந்த நபரின் உடலை எடுத்து, கார் டிக்கியில் வைத்து மறைத்து விடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மறுநாள் அண்ணன் கருணாகரன் நான் வாங்கிய நகைக்கு கிடைத்த கூப்பனை கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து எழுதிப் போட்டதால் அவருக்கு அந்த பம்பர் பரிசு கிடைத்தது என அந்த கார் எனக்கு தான் சொந்தமானது என கூறி அண்ணன் கருணாகரன் வீட்டு வாசலில் நின்று கொண்டு அசிங்கப்படுத்துகிறார்.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரன் இந்த சண்டை விஷயம் காவல் நிலையம் வரை செல்கிறது.

காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து பேசி காவல்துறை ஆய்வாளர் நகை வாங்கிய ரசீதை காண்பித்துவிட்டு காரை எடுத்து செல்லும்படி கூறுகிறார்.

டெட் பாடியுடன் இருக்கும் கார், காவல் நிலையத்திலேயே நிற்கிறது.

அந்தக் காரில் டெட் பாடி இருப்பது கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றும் குடும்பத்திற்கு தெரியவர, எப்படியாவது காவல் நிலையத்தில் நிற்கும் காரில் இருக்கும் டெட் பாடியை அகற்றிவிட வேண்டும் என குடும்பத்துடன் போராடுகின்றனர்.

இவர்கள் ஒரு புறமிருக்க, கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் கருணாகரன் மற்றும் மைம் கோபி இருவரும் அந்த காரை அபகரிக்க பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார்கள்.

இறுதியில் அந்த கார் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்ததா? கிடைக்கவில்லையா? கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரிக்கு திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? அந்தக் காரை அபகரிக்க கருணாகரன் மற்றும் மெம் கோபிக்கு காரை அபகரிக்க கூட்டு சதிதிட்டம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இந்த சொப்பன சுந்தரி திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சொப்பன சுந்தரி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிடில் கிளாஸ் கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

தன் குடும்பத்தை காப்பாற்ற போராடும் இடத்திலும் மிக அற்புதமாக நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

சகோதரியாக நடித்திருக்கும் லஷ்மி பிரியா வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் மிக அருமையாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

தீபா ஷங்கர், கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி, ஷா ரா, சதிஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுரராவ், ஆகஸ்டின், Nakkalites தனம், அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ஒளிப்பதிவு திரைப்படத்தின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர் அஜ்மலின் பின்னணி இசை திரைப்படத்தை தாங்கி பிடித்துள்ளது.

பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

காரை வைத்து கதையை யோசித்த இயக்குனர் எப்போதும் போல் இல்லாமல் திரைக்கதையை கொஞ்சம் வித்தியாசமாக காமெடி ஜானரில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்.

மொத்தத்தில் சொப்பன சுந்தரி  திரைப்படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.