விடுதலை பாகம்-1 திரைவிமர்சனம் ரேட்டிங் :- 4.5 / 5.

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி சூரி, பவானி ஸ்ரீ, தமிழ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், மூணார் ரமேஷ், சேத்தன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெற்றி மாறன்.

ஒளிப்பதிவு :- ஆர்.வேல்ராஜ்.

படத்தொகுப்பு :-  ஆர்.ராமர்.

இசை :- இசை ஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :-  ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- எல்ரெட் குமார் – வி.மணிகண்டன்.

ரேட்டிங் :- 4.5 / 5

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை மைய்யமாக வைத்து விடுதலை திரைப்படத்தை உருவாக்கி மீண்டும் தன்னை தரமான இயக்குனர் என்று நிருபித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

வெளிநாட்டை கார்ப்பரேட் கம்பெனியை சேர்ந்த சுரங்க அமைக்கும் நிறுவனம் ஒன்றிருக்கு மலையை அழித்து கனிம வளத்தை எடுக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து விடுகிறது.

இதை அறிந்த அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராட தொடங்கி விடுகிறார்கள்.

கிராம மக்களுடன் சேர்ந்து மக்கள் படை என்ற அமைப்பு சேர்ந்து மக்களோடு சேர்ந்து போராடுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் படை என்ற அமைப்பு ரயில்வே பாலத்தில் வெடிகுண்டு வைத்து ரயிலை தகர்த்து விடுகிறார்கள்.

அதன் பிறகு மலைப்பகுதியில் தமிழக காவல்துறையினர் முகாம் அமைத்து மக்கள் படையினர் நடமாட்டத்தை காவல்துறை கண்காணித்து வருகிறார்கள்.

மலை மற்றும் அடர்ந்த காடு பகுதியில் இருக்கும் அந்த காவல்துறை முகாமிற்குப் புதியதாக ஓட்டுநர் பணிக்கு சேருகிறார் கதையின் நாயகன் சூரி.

இந்த மக்களின் புரட்சியை தடுக்கவும் இதற்கு தலைமை வகிக்கும் மக்கள் போராளியான மக்கள் படையை சேர்ந்த தலைவர் வாத்தியார் விஜய் சேதுபதியை பிடிக்கவும் காவல்துறையினர் ஆப்ரேஷன் கோஸ்ட் ஹண்ட் என்ற தேடுதல் வேட்டையை காவல்துறையினர் ஆரம்பிக்கின்றனர்.

மக்கள் போராளியாக இருக்கும் மக்கள் படையை சேர்ந்த தலைவர் வாத்தியார் விஜய் சேதுபதியை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்ட, அப்பொழுது அந்த மக்களை காவல்துறையினர் ஆண்கள் அடிப்பதும் பெண்களை நிர்வாணப்படுத்தி விசாரிப்பதும் அதிகளவில் சித்ரவதை செய்கிறது.

இது ஒரு புறம் இருக்க ஓட்டுனர் பணியில் இருக்கும் கதையின் நாயகன் சூரி, இந்த மக்களை துன்புறுத்தும் காவல்துறை எதிர்த்தும், தேடப்பட்டு வரும் மக்கள் படையை சேர்ந்த தலைவர் வாத்தியார் விஜய் சேதுபதியை காவல்துறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும் என மேல் அதிகாரிகளின் துன்புறுத்தலில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரியுடன் கதையின் நாயகன் சூரிக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

அந்த கிராமத்தில் வசிக்கும் கதையின் நாயகி பவானி ஸ்ரீயுடன் கதையின் நாயகன் சூரிக்கு காதல் ஏற்படுகிறது.

இறுதியில் காவல்துறையினர் மக்கள் போராளியாக இருக்கும் மக்கள் படையை சேர்ந்த தலைவர் வாத்தியார் விஜய் சேதுபதியை கண்டுபிடித்ததார்களா? கண்டுபிடிக்கவில்லையா? மக்களை துன்புறுத்தும் காவல்துறையை மக்கள் படையை சேர்ந்த தலைவர் வாத்தியார் விஜய் சேதுபதி எப்படி தடுத்தாரா? என்பதுதான் இந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விடுதலை பாகம்-1 திரைப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

அப்பாவி காவல்துறையை சேர்ந்த ஜீப் ஓட்டுநராக வரும் சூரி திரைப்படத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அந்த குமரேசன் கதாப்பாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார்.

மக்கள் போராளியாக வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, எதார்த்த நடிப்பால் அசத்திருக்கிறார்.

வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

மக்களின் பிரச்சனைகளை அவரின் உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் கவுதம் வாசுதேவ் மேனனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் அனைவரையும் கவர்கிறது.

கதையின் நாயகி பவானி ஸ்ரீயின் அழகான நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கட்டிப்போடுகிறது.

இந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தி நடித்திருக்கும் இயக்குனர்கள் ராஜிவ் மேனன், தமிழ், சரவண சுப்பையா மூணார் ரமேஷ், இளவரசு, சேத்தன் உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை மிகவும் சரியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் ஒளிப்பதிவு அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

மலை அருவி மற்றும் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை இயற்கையோடு இணைந்து ஒளிப்பதிவாளர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையாராஜாவின் பின்னணி இசை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

பாடல்கள் திரைப்படம் முடிந்த பிறகும் முணுமுணுக்க வைக்கிறது.

விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதை, அடுத்த என்ன என்ற தேடல் உள்ளிட்டவைகளை சிறப்பாக கையாண்டு சுவாரசியப்படுத்தியுள்ளார் இயக்குனர் வெற்றி மாறன்.

இந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் திரைக்கதையின் வடிவத்திற்கு ஏற்றவாறு மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

மொத்தத்தில் விடுதலை பாகம் 01 திரைப்படம் தமிழ் திரைப்பட உலகின் பொக்கிஷம்.