‘ஒற்றைப்பனைமரம்’ திரைப்பட விமர்சனம்.

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

நடிகர் & நடிகைகள் :- புதியவன் ராசையா, நவயுகா குகராஜா, அஜாதிக புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன், ஜெகன் மாணிக்கம்,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- புதியவன் ராசையா,

ஒளிப்பதிவாளர் :- மஹிந்த அபேசிங்க (இலங்கை) சி ஜே  ராஜ்குமார் (இந்தியா).

படத்தொகுப்பாளர் :- சுரேஷ் அர்ஸ்.

இசையமைப்பாளர் :- அஸ்வமித்ரா.

தயாரிப்பு நிறுவனம்:- ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- . எஸ் தணிகைவேல்.

ரேட்டிங் :- 2.25./5.

இறுதிப் போரில் பல தமிழர்கள் கொல்லப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கதைச் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டு மீதமுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த வீரர்கள் சைனட் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

அந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த வீரர்களில் ஒருவரான கதாநாயகி நவயுகாவை காப்பாற்றி, கதாநாயகன் புதியவன் இராசையா குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக நின்று கொண்டிருக்க சிறுமியை தனது மகளாக நினைத்து இருவருக்கும் அடைக்கலம் கொடுக்கிறார்.

கதாநாயகன் புதியவன் இராசையா மற்றும் கதாநாயகி நவயுகா அந்த சிறுமி மூவரும் போருக்குப் பின் தங்களது வாழ்க்கையின் எதிர்காலத்தை நோக்கி பயணப்படுகிறார்கள்.

போர் நடந்த பின்பு ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதை கண்டு வருந்தும் கதாநாயகன் புதியவன் இராசையா, அந்த ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் ஒன்றிணைத்து ஒரு சங்கத்தை தொடங்கி அதன் மூலம் ஈழப் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்கிறார்.

கதாநாயகன் புதியவன் இராசையாவின் முயற்சி வெற்றி பெற்றதா,? வெற்றி பெறவில்லையா,? என்பதுதான் இந்த’ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தில் கதையின் நாயகனாக புதியவன் இராசையா நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் இந்த ஒற்றைப் பணமரம், திரைப்படத்தை கதையின் நாயகன் புதியவன் இராசையா, இயக்கியும் இருக்கிறார்.

இந்த ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நவயுகா நடித்திருக்கிறார்.

கதையின் நாயகி நவயுகா, பேசும் வசனங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை கேவலப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த ஒற்றைப் பனை மரம் திரைப்படத்தில் குகராஜா, அஜாதிக புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன் ஜெகன் மாணிக்கம், மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் மஹிந்த அபேசிங்க சி ஜே ராஜ்குமார் இருவரும் ஒளிப்பதிவு மூலம் கதாபாத்திரங்களை இயல்பாக காண்பித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதிற்கு நெருக்கமாக வில்லை என்றாலும், கதைக்களத்தில் இருந்து விலகாமல்  பயணித்திருக்கிறார்.

சிங்கள ராணுவத்திற்கு ஜால்ரா அடிக்கும் விதமாக காட்சியில் மட்டும் சிறிய அளவில் காண்பிக்கும் அதன் பிறகு தமிழகர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பது போல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசையா.

மொத்தத்தில், இந்த ‘ஒற்றைப்பனைமரம்’ படம் ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் எதிரான ஒரு திரைப்படம்.

error: Content is protected !!