ராஜா மகள் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5. / 5.
நடிகர் நடிகைகள் :- ஆடுகளம் முருகதாஸ், பிரித்க்ஷா, பிராங்க்ளின் பக்ஸ் அஸ் கணேசன், பகவதி பெருமாள், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஹென்றி.
ஒளிப்பதிவு :- நிக்கி கண்ணன்.
படத்தொகுப்பு :- சி எஸ் பிரேம் & அஜித் குமார்.
இசை :- ஷங்கர் ரங்கராஜன்.
தயாரிப்பு நிறுவனம் :- மூன் வாக் பிச்சர்ஸ்.
தயாரிப்பாளர்:- ஹசன் ஜகாரியா.
ரேட்டிங் :- 3.5. / 5.
நாம் பெற்ற குழந்தைகளுக்கு ஆசைப்பட்டு கேட்கும் பொருள்களை ஏழ்மையை காரணம் காட்டி முடியாதுன்னு கூறிவிடுகிறோம்.
ஏழ்மை நிலையை சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை ஏற்படுகிறது.
பணம் படைத்தவர்களின் குழந்தை எதை கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.
சாதாரண குடும்பத்தில் உள்ள தந்தையின் கருத்தை மையமாக வைத்து இந்த ராஜா மகள் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
அதே நேரம் தந்தைக்கும் செல்ல மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் இணைத்து, அழகான திரைப்படமாக உருவாகியிருக்கிறார் இயக்குனர் ஹென்றி.
பஜாரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் கதையின் நாயகன் முருகதாஸ், தன் மகள் பிரதிக்ஷா மீது கொண்ட அளவு கடந்த அன்பு பாசத்தால் தனது மகள் பிரதிக்ஷா எதைக் கேட்டாலும் அதை முடியாது எனக் சொல்லாமல் உடனடியாக வாங்கித் கொடுத்து விடுவார்.
பிரதிக்ஷா படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் பணக்கார சிறுவனுக்கும் பிரதிக்ஷாவுக்கு ஏட்டிக்குப் போட்டி சண்டையில், பணக்கார சிறுவனின் பிறந்த நாள் அன்று அவனது வீட்டுக்குப் போகும் பிரதிக்ஷா, திரும்பி வந்ததும் அவனுக்கு இருப்பதைப் போலவே என்க்கும வீடு வாங்க வேண்டும் என தன் தந்தையிடம் கூறுகிறாள் .
தனது செல்ல மகள் பிரதிக்ஷா பல கோடி ரூபாய் உள்ள பங்களா போன்ற வீட்டை கேட்கும் எனது செல்ல மகளிடம் அது முடியாது என்று சொல்ல மனம் வராமல் அதை கண்டிப்பாக வாங்கித் தருகிறேன் என கூறிவிடுகிறார்.
கதையின் நாயகன் முருகதாஸ் பொய்கள் சொல்ல, ஒரு நிலையில் தள்ளிப்போவது தாங்க முடியாமல் பிரதிக்ஷாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போக அதற்குப் பிறகு முடியாது என்ற வார்த்தையை தன் செல்ல மகள் பிரதிக்ஷாவிடம் சொல்லவும் முடியாமல் தனது மகள் கேட்டதையும் வாங்கி கொடுக்கவும் முடியாமல் தவித்து வருகிறார் கதையின் நாயகன் முருகதாஸ்
அதன் பிறகு, பிறந்தநாள் அன்று தன் பங்களாவிற்கு சென்று விடுவோம் என்ற கனவோடு இருக்கும் மகளின் கனவுகள் நிறைவேற்றப்பட்டதா? நிறைவேற்றப்படவில்லையா?
என்பதுதான் இந்த “ராஜாமகள்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராஜா மகள் திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
கதையின் நாயகன் முருகதாஸ் பாசமான தந்தையாக மிகவும் அருமையாக அசத்தலாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதையின் நாயகன் முருகதாஸ். பாசமான தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பில் முத்திரைப் பதித்து விட்டார்
இந்த ராஜா மகள் திரைப்படத்திலும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார்.
இந்த ராஜா மகள் திரைப்படத்தின் அடுத்த பெரிய துணாக இருப்பவர் மகளாக நடித்த ப்ரதிக்ஷா தான்.
பல திரைப்படங்களில் நடித்த அனுபவம் போல கண் பார்வையிலேயே ஆயிரம் விதமான நடிப்பை கொண்டு வந்து நிறுத்துகிறார். ப்ரதிக்ஷா.
உண்மையான தந்தை மகளுக்கான பாசத்தை காட்டுவது போன்ற ஒரு உணர்வை நடிப்பில் கொண்டு வந்து காண்பித்து விட்டார் ப்ரதிக்ஷா.
கன்னிமாடம் திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுனராக வந்து அனைவரின் பாராட்டைப் பெற்ற கதாநாயகி வெலினா, இந்த ராஜா மகள் திரைப்படத்திலும் ஒரு குடும்பப் பெண்ணாக வந்து தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்டதை கதாபாத்திரத்தை நச் என்று நடித்து கொடுத்திருக்கிறார் பகவதி பெருமாள்.
ப்ரதிக்ஷாவின் பள்ளி நண்பனாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் காட்சிக்கு அழகு சேர்க்கும் தனது அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் காட்சியை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறது.
இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனின் இசை பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது.
ஒரு தந்தை ம்கள் பாசத்தையும் எளிய குடும்பத்தில் நடக்கும் அந்தச் சூழலையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் ஹென்றி. .
ராஜா மகள் திரைப்படத்தின் கதையின் கரு சிறியதாக இருந்தாலும், அதன் வலி மிகவும் பெரியது போல கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை கொண்டு எடுக்கப்பட்ட இந்த “ராஜாமகள்” திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே கைதட்டல் பெறுகிறாள்.
மொத்தத்தில் ராஜா மகள் திரைப்படம் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த திரைப்படம்.