ஏழு திரைப்படங்கள் ஆன்லைன் (OTT) வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டு இரண்டு மாதங்களாகிறது.

இதனால் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால்
பல தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படத்தை ஆன்லைன் (OTT) வெளியீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தற்போது ஆன்லைன் OTTயில் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதில்…

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள இந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஜோதிகாவுடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்க ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 96 படப்புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளனர்.

இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Ponmagal Vandhal and Penguin OTT release dates here

#PonMagalVandhal – May 29
#GulaboSitabo – June 12
#Penguin – June 19
#Law – June 26
#FrenchBriyani – July 24
#ShakuntalaDevi – DTBA
#SufiyumSujatavum – DTBA

மேலே சொல்லப்பட்ட இரு தமிழ் திரைப்படங்களும் மற்ற மொழி திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!