திரைப்பட தயாரிப்பு நிர்வாகியும் பிரபல வில்லன் நடிகருமான நடிகர் பாலாசிங் காலமானார்.
மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாலா சிங் அவர்கள் நாசரின் ‘அவதாரம்’ பட மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.
அதன்பின்னர் ’புதுப்பேட்டை’, ‘இந்தியன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘கிரீடம்’, ’உதயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து வேடங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான என்ஜிகே, மகாமுனி படங்களில் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் பாலாசிங்குக்கு தற்போது 67 வயதாகிறது. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆகும்.