மியூசிக் ஸ்கூல் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75./ 5.

நடிகர் நடிகைகள் :- ஷர்மன் ஜோஷி, ஸ்ரேயா சரண், ஷான், கிரேசி கோஸ்வாமி, ஓசு பருவா, பிரகாஷ் ராஜ், பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, பக்ஸ் பார்கவா, லீலா சாம்சன், மோனா அம்பேகோன்கர், ஸ்ரீகாந்த் ஐயங்கார், வினய் வர்மா, ஃபானி எகோன், வக்கார்ட் ஷேக், கார்த்திகேய ஷேக், விவான் ஜெயின் முனோத், ஒலிவியா சரண், ஜி ரோஹன் ராய்,ஆதியா பண்டிதரத்யுலா, சித்திக்ஷா, குஷி சோனி மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாப்பராவ் பியாலா.

ஒளிப்பதிவு :- கிரண் தியோஹன்ஸ்.

படத்தொகுப்பு :-  அமோல் திலீப் குஞ்சால்.

இசை :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :-  யாமினி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- பாப்பாராவ் பிய்யாலா.

ரேட்டிங் :- 2.75./ 5.

ஐதராபாத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் இசைப்பயிற்சி அளிக்கும் ஆசிரியையாக பணியில் வந்து சேருகிறார் கதாநாயகி ஸ்ரேயா சரண்.

அதே பள்ளியில் நாடக ஆசிரியராக பணியாற்றி வரும் சர்மன் ஜோஷியுடன் சேர்ந்து அவர்கள் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டில் இசை பள்ளி மற்றும் நாடக பள்ளி ஒன்றை ஆரம்பிக்கிறார்கள்.

அந்த இசை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை இசை மற்றும் நாடக பயிற்சி அளிப்பதோடு, இவர்களை அனைவரையும் வைத்துக் கொண்டு ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்கிற நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்யும் ஸ்ரேயா சரண் மற்றும் சர்மன் ஜோஷி, இசை மற்றும் நாடக பயிற்சிக்காக மாணவ, மாணவிகளை கோவாவிற்கு அழைத்து செல்கிறார்கள்.

கோவாவில் மாணவ, மாணவிகள் இசை மற்றும் நாடக பயிற்சியை முடித்துவிட்டு ஐதராபாத் திரும்பும் நேரத்தில், கமிஷ்னர் பிரகாஷ்ராஜின் மகள் காணாமல் போய்விடுகிறார்.

இந்த தகவல் கமிஷனர் பிரகாஷ் ராஜுக்கு தெரியவர, தனது மகளை தேடுவதோடு, ஐதராபாத்தில் அரங்கேர இருக்கும் நாடக நிகழ்ச்சியை நிறுத்தி ஸ்ரேயா சரணை மற்றும் சர்மன் ஜோஷியை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப் படுத்துகிறார்.

மாயமான கமிஷனர் பிரகாஷ்ராஜின் காணாமல் போன மகள் கிடைத்தாரா? கிடைக்கவில்லையா? ஸ்ரேயா சரண் மற்றும் சர்மன் ஜோஷியின் நாடகம் அரங்கேறியதா? அரங்கரவில்லையா? ஸ்ரேயா சரண் மற்றும் சர்மன் ஜோஷி இருவரையும் கமிஷனர் பிரகாஷ்ராஜ் கைது செய்தாரா? கைதுசெய்யவில்லையா? என்பதுதான் இந்த மியூசிக் ஸ்கூல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மியூசிக் ஸ்கூல் திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஸ்ரேயா சரண் நடித்திருக்கிறார்.

இசைப்பயிற்சி அளிக்கும் ஆசிரியை கதாபாத்திரத்தில், ஸ்ரேயா சரண் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த மியூசிக் ஃபுல் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சர்மன் ஜோஷி நடித்திருக்கிறார்.

நாடகப் பயிற்சி ஆசிரியராக வரும் சர்மன் ஜோஷிக்கு திரைப்படத்தில் பெரியதாக வேலை ஒன்றும் இல்லை என்றாலும் அவருடைய அளவான நடிப்பை கொடுத்து தனது கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார்.

ஐதராபாத் சிட்டி கமிஷ்னராக வரும், பிரகாஷ்ராஜின் அனுபவமான நடிப்பு திரைப்படத்திற்கு பெரிய அளவில் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஸ்ரேயா சரணை ஒருதலையாக காதலிக்கும் பிரபல பின்னணி பாடகரும், இசைகலைஞருமான ஷான், சில காட்சிகள் வந்தாலும் தனது காதலை ஸ்ரேயா சரணிடம் வெளிப்படுத்திவிட்டு மிகப்பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி செல்லும் காட்சியின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.

இசைப் பள்ளி மற்றும் நாடக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளாக வரும் இளம் வயதினரும், சிறு வயதினரும் எந்தவித தயக்கமும் இன்றி நடிப்பிலும், நடனத்திலும் மிக அருமையாக அசத்தியுள்ளார்கள்.

கிரேசி கோஸ்வாமி, ஓசு பருவா, பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, பக்ஸ் பார்கவா, லீலா சாம்சன், மோனா அம்பேகோன்கர், ஸ்ரீகாந்த் ஐயங்கார், வினய் வர்மா, ஃபானி எகோன், வக்கார்ட் ஷேக், கார்த்திகேய ஷேக், விவான் ஜெயின் முனோத், ஒலிவியா சரண், ஜி ரோஹன் ராய்,ஆதியா பண்டிதரத்யுலா, சித்திக்ஷா, குஷி சோனி என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிரண் டியோஹன்ஸ் இவருடைய ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சென்றும் பிரமாண்டமாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.

கோவாலில் உள்ள காட்சிகள், இசைப் பள்ளி மற்றும் மாணவர்கள் குடியிருப்பு என அனைத்து ஏரியாக்களையும் அருமையாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் டியோஹன்ஸ்.

இசைஞானி இளையராஜா, முற்றிலும் வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதோடு, இசை மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம்
அதிலும் மேற்கத்திய இசையில் புகுந்து விளையாடியிருக்கும் இசை அருமையாக இருக்கிறது

இயக்குநர் பாப்பா ராவ் பிய்யாலாவின் முயற்சியை பாராட்டினாலும், அதை சொல்லிய விதம் புரியாமலும், திரைப்படத்தை தொய்வடையவும் செய்கிறது.

ஆனால், படத்தின் மேக்கிங், நடிகர்களை வேலை வாங்கிய விதம், இசை, ஒளிப்பதிவு போன்றவற்றுக்காக திரைப்படத்தில் இருக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் மியூசிக் ஸ்கூல் அருமையாக இருக்கும்.

மொத்தத்தில் மியூசிக் ஸ்கூல் திரைப்படம் ஏமாற்றம் அளிக்கிறது.