இயக்குனர் இமயத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குனர் இமயத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.கண்ணன் இன்று மதியம் காலமானார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் (69). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

இயக்குனர் இமயத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆவார்.

பழம்பெரும் இயக்குனர் பீம் சிங்கின் மகன் பி.கண்ணன். பிரபல ஒளிப்பதிவாளரான இவர், எடிட்டர் லெனினின் மூத்த சகோதரர் ஆவார்.

ஒரு சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று (ஜுன் 13) மதியம் காலமானார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜுன் 14) பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. கண்ணனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!