மர்மர் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – ஹேம்நாத் நாராயணன்.
ஒளிப்பதிவாளர் – ஜேசன் வில்லியம்ஸ் .
படத்தொகுப்பாளர் – ரோஹித் .
இசையமைப்பாளர் – கேவ்ய்ன் பிரெடெரிக்.
தயாரிப்பு நிறுவனம் – எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் association with ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்.
தயாரிப்பாளர் – பிரபாகரன்.
ரேட்டிங் – 2.75./5.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை கிராமப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏழு கண்ணிமார் தெய்வங்கள் இருப்பதாகவும், அந்த ஏழு கண்ணிமார் தெய்வங்களும் பெளணர்மி அன்று அங்குள்ள கோவில் குளத்தில் குளிப்பதாகவும், அந்த கண்ணிமார் தெய்வங்களுக்கு பல வருடம் செய்ய வேண்டிய பூஜையை செய்யவிடாமல், அங்கு இருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
பல குழந்தைகளை பலி கொடுத்த அந்த சூனியக்காரி அமானுஷ்யமாக காட்டில் அலைவதாகவும், அதனால் அந்த காட்டுக்குள் சென்றவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை, என்றும் கிராம மக்கள் அனைவரும் கூறுகிறார்கள்.
இதுபோன்ற வித்தியாசமான கதைகள் சொல்லப்படும் கிராமங்களுக்கு சென்று அது உண்மையா ? என்பதை ஆய்வு செய்து அதை ஆவணப்படமாக எடுக்கும் நான்கு பேருக்கு வழிகாட்டும் கிராமத்து பெண் என ஐந்து பேர் அந்த காட்டுக்குள் புறப்பட்டு செல்கிறார்கள்.
இதனை அடுத்து ஊர் மக்கள் சொன்னது போல் அங்குள்ள சூனியக்காரியின் அமானுஷ்யம் காட்டுக்குள் இருக்கிறதா?, சூனியக்காரியின் அமானுஷ்யம் காட்டுக்குள் இல்லையா?
உண்மை அறிய காட்டுக்குள் சென்ற ஐந்து பேரின் நிலை என்ன ஆனது? அந்த சூனியக்காரியிடம் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘மர்மர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதா பத்திரங்களும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு காட்டுக்குள் அமானுஷ்ய சக்தியிடம் சிக்கிக்கொண்டு பயத்தில் உரைந்து போகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பதற வைக்கும் அளவுக்கு தங்களுக்குள் இருக்கும் பயத்தை மிக அருமையாக நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை அனைத்தையும் திரைப்படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமான ஒளிப்பதிவு மூலம் பயணித்திருக்கிறார்.
ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக் சவுண்ட் வைத்து மட்டும் இசையமைப்பாளரின் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை இல்லை என்ற உணர்வே ஏற்படாத வகையில் மிகவும் நேர்த்தியாக பணிபுரிந்து இருக்கிறார்கள்.
முதல் பாதி முதல் இறுதிக் காட்சிவரை, இருள் சூழ்ந்த திரையில், ”எந்த பக்கம் இருந்து, என்ன வருமோ…” என்ற பயத்துடன் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை பயத்துடன் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்.
மொத்தத்தில், ‘மர்மர்’ திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் புதுமையான முயற்சி.











