‘418’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்யா ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கீர்த்தன் நாகௌடா.

ஒளிப்பதிவாளர் :-  தினேஷ் திவாகரன்.

படத்தொகுப்பாளர் :- அகுல் அவினாஷ்.

இசையமைப்பாளர் :- வெங்கி ஜி.ஜி.

தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ரவி சங்கர்,  யாலமஞ்சிலி, நவீன் யெர்னேனி. பிரசாந்த் நீல்.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா (D one).

வெளியீட்டு தேதி :- 23, அக்டோபர்  2026.

ரேட்டிங் :-  3.5./5.

கர்நாடகாவின் வேதிகிரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் தங்கும் இந்த விடுதிக்கு முந்தைய காலத்தில்  மனநலக் காப்பகமாக இருந்தது.

அங்கே உள்ள 418-வது 15 ஆண்டுகளாக மனித நடமாட்டம் இல்லாமல், பூட்டிக் கிடக்கும் விம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையைச் சுற்றி மர்மமான அமானுஷ்ய நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது.

அந்த 418 அறையின் பின்னணியில் உள்ள அறையில் கொடூரமான கொலைகளுக்குக் களமாக மாறிய இக்கட்டிடத்தின் 418-வது அறையில் அதிர்ச்சிகரமான ரகசியமும், உள்ள நிலையில் பெண்கள் ​உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு​ உள்ள 418  அறையில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா ராஜ் வீரபத்தினி  தங்களுடைய படிப்புக்காக இக்கல்லூரியில் சேர்ந்து, அமானுஷ்ய சக்தி இருக்கும் அறை அருகில் உள்ள 417-வது அறையில் தங்குகிறார்.

விடுதியில் உள்ள 417 வது  அறைக்கு வந்த சில நாட்களிலேயே அவன் விவரிக்க முடியாத பயங்கரமான அமானுஷ்ய அனுபவங்கள் எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுடன் இணைந்து  படிக்கும் சரண் லக்கராஜு  ஆரம்பத்தில் அதை மறுத்தாலும், கதாநாயகி சைத்ரா ஆச்சார்  என்ற கர்ப்பிணிப் பெண்ணான தேவிகா தொடர்பான சம்பவங்களும்தான்‌.

417வது அறையில் இருந்தவர்கள் அமானுஷ்ய சக்தியும் 417 ஆவது அறையில் தங்கியிருந்த மற்றவர்களின் நிலை என்ன ஆனது என்பதுதான் இந்த 418 திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த 418 திரைப்படத்தில் கதாநாயகியாக சைத்ரா ஆச்சார் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சைத்ரா ஆச்சார் தனது முதன்மை கதாபாத்திரத்தில் தாயாக மாற துடிக்கும் மனநிலையிலும், பின்னர் வெறித்தனமான கோபத்திலும் அவர் காட்டிய தீவிரமான முகபாவனைகள் திரைக்கதைக்கு ஆழமான பலம் சேர்க்கும் வகையில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

சரண் லக்கராஜு நண்பர் கதாபாத்திரத்தில் வரும் காட்சிகளில் தனது இளமைத் துடிப்புடன் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

பிரீதி பகடாலா தமக்குக் கிடைத்த சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் மிகவும் துடிப்புடன் பங்களிப்பை அளித்துள்ளார்.

சூர்யா ராஜ் வீரபத்தினி நடுத்தர குடும்ப மாணவனின் பதற்றத்தைத் திரையில் கொண்டு வர மேற்கொண்ட கடினமான முயற்சி பாராட்டுக்குரியது.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து நடிகர் நடிகைகளும் மிக மிக சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் வெங்கி ஜி.ஜி.யின் இசை, கதையின் உணர்வுகளுக்கு உயிரூட்டும் வகையில் காட்சிகளின் பரபரப்பையும், உணர்ச்சிகளின் ஆழத்தையும் தனது பின்னணி இசையால் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு புதிய களத்தை தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற அமானுஷ்ய சூழலைச் செதுக்கிய விதம் பாராட்டுக்குரியது. மேலும், மெதுவாக மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, சஸ்பென்ஸை இறுதிவரை உடைக்காமல் கையாண்ட விதம் பார்வையாளர்களை தன் வசப்படுத்திய அவரின் தொலைநோக்குச் சிந்தனை, திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் அருமையாக இயக்கியிருக்கிறார்  இயக்குநர் கீர்த்தன் நடகௌடா.

மொத்தத்தில், 418 திரைப்படம் பூட்டப்பட்ட அந்த அறையின் பயங்கர மர்மங்களை அவிழ்க்கத் துணியும் ஒவ்வொரு நொடியும், உங்களை அறியாமலே உங்கள் முதுகுத்தண்டை நடுங்க வைக்கும் திகில் அனுபவம்!

CLOSE
CLOSE
error: Content is protected !!