ஸ்டாலின் ஐயா.. தமிழக அரசின் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சித்த மருத்துவத் துறையை பயன்படுத்துங்கள் நடிகர் மன்சூர் அலிகான்.

சென்னை 26 மே 2021

ஸ்டாலின் ஐயா..
தமிழக அரசின் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சித்த மருத்துவத் துறையை பயன்படுத்துங்கள் நடிகர் மன்சூர் அலிகான்.

ஐயா மாண்புகு தமிழக முதலமைச்சர்
முத்தமிழறிஞரின் வித்தக புத்திரன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஜயா அவர்களுக்கு நடிகர் மன்சூரலிகானின் மிகத்தாழ்மையான வேண்டுகோள்.

ஐயா என்னை நீங்கள் பணயக்கைதியாக வைத்துக் கொண்டு இன்னும் பல்லாயிரக்கணக்கில் வருவார்கள் ஒரே ஒரு உத்தரவு இடுங்கள் இன்று முதல் கொரானா இல்லாத
தமிழகம்.

யாரும் முகக் கவசம் அணிய வேண்டாம்.

எல்லா மருந்துகள் ஊசிகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி எந்த நாட்டுக்காவது அனுப்பி விடுங்கள்.

மக்கள் விருப்பப்படி முன்புபோல் வாழலாம்.

வெளிநாடுகளிலிருந்து யாரும் வரலாம்.

எந்த ஈபாஸ் எறும்பு பாஸ் தேவையில்லை என்று உத்தரவு போடுங்கள்.

T.V.பத்திரிக்கை எல்லா ஊடகங்களிலும் எந்த கொரானா செய்தியும் போடாதீர்கள்

முக்கியமாக இந்த செல்போனில் எடுத்தவுடன் ஒரு அறு அறுக்கறாங்களே அதை முதலில் தயவுசெய்து நிறுத்தச் சொல்லுங்கள்.

அந்த வசனத்தை கேட்டே பல பேர் செத்துட்டான் ஐயா.

ஐயா சென்ற முறை கொரானா வில் எந்த மருந்து ஊசியில்லாது கோடிக்கணக்காணோர் குணமானார்களா?

இல்லையா வெறும் கபசுரக்குடிநீர் சிற்றரத்தை அதிமதுரம் திப்பிலி இஞ்சி சுக்கு பனங்கற்கண்டுடன் காய்ச்சி குடித்து மக்கள் மகிழ்ச்சியாக வென்றார்கள்.

தமிழ்நாடு அரசின் கலைஞர் கொண்டுவந்த சித்த மருத்துவத் துறையை பயன்படுத்துங்கள்.

நாம் வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யலாம்.

ஐயா உண்மையில் உலகமே உங்களை திரும்பி பார்க்கும் உச்சிமுகர்ந்து பாராட்டும்.

ஒரு மரணம் கூட சம்பவிக்காது.

அப்படி நிகழ்ந்தால் என்னை தூக்கிலிடுங்கள்.

தாங்கள் மிசா காலத்தில் சிறையில் கடுமையாக கொடுமை செய்யப்பட்டு உயிர் பிழைத்து எதையும் தாங்கும் மாமனிதராய் இன்று துளிர்க்கிறீர்கள்.

மாமன்னன் அக்பர் 9 வயதில் அரியணை ஏறியவர் பல பேரிடம் ஆலோசனை கேட்பாராம். ஆனால் சரியாக சுயமுடிவெடுப்பாராம்.

அதுபோன்று தாங்கள் நிச்சயம் தமிழ்நாட்டை ஏன் உலகத்தையே காக்க இந்த உத்தரவு போடுங்கள்.

மக்கள் வெந்து மடிகிறர்கள்.. மருந்து மாபியாக்களும் பல நாட்டு முக்கியஸ்தர்களும் சேர்ந்து திட்டமிட்ட சதியில் இந்தியா பிணக்காடாகிக் கொண்டிருக்கிறது.

தடுங்கள் ப்ளீஸ்.

இந்த மருந்துகள் உட்கொண்டபிறகுதான் கரும் பூஞ்சை நோய் மக்களை பீடித்திருக்கிறது.

தமிழகத்தில் பல நாடுகளிலிருந்து வந்து முதலீடு செய்ய பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

கொரானா இல்லாத தமிழகம்.

கொத்துக் கொத்தாய் மக்கள் கையில் பணம்.

இதில் தவறிருந்தால் என்னை மன்னியுங்கள்.

மக்கள் இதை ஆதரித்தால் iSupport MAN Sooralikhan என hastake செய்யுங்கள்.

ஐயா கடைசியாக ஒரு முக்கியமான வேண்டுகோள்.

இந்த ராதாகிருஸ்ணனை (சுகாதாரத் துறை செயலாளர்) மட்டும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

உரிமையுடன்…

உவகையுடன் தமிழக மக்கள்.

இந்திய மக்கள் மீண்டெழ முதலமைச்சரின் உத்தரவை மக்கள் எதிர்பார்க்கிறர்கள்.

மேலும் ஆலயங்களை
இறைவனின் இல்லங்களை பூட்டி வைக்காதீர்கள்.

கோயில் மணியோசை கேட்கட்டும்..

பெரியாரின் பெயரன் ஸ்டாலின் நீண்ட நல்லாட்சி தரட்டும்.

உண்மையுடன்…

நடிகர் இயக்குனர் மன்சூரலிகான்

கூடுதல் தகவல்…

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து, அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டார்.

அந்த மனு தள்ளுபடி ஆனது.

இதன் பின்னர் இது தொடர்பான கோர்ட் விசாரணையில்.

“நிபந்தனை அடிப்படையில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்குகிறேன்.

அவர் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் ரூ.2 லட்சம் காசோலை எடுத்து வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!