காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5/5.
நடிகர் & நடிகைகள் :- ஆர்யா, பிரபு, பாக்யராஜ், சித்தி இத்னானி, நரேன், சிங்கம் புலி இயக்குனர் தமிழ், ஆர்.கே. விஜய் முருகன், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் மோசகுட்டி, விஜி சந்திரசேகர், ரேணுகா, மீனாள், இந்துமதி, ஸ்ரீலேகா, அத்வைதா, ஹேமா, பேபி ஆஃபியா, பேபி ஷண்மதி, பேபி மோனிகா, மாஸ்டர் மகேந்திரன், மதுசூதன ராவ், கேஜிஎஃப் அவினாஷ், ராஜேஷ், நந்தா சரவணன், பாலா ஹசன், அர்ஜெய், ஸ்ரீஜித் ரவி, விஜய் முத்தையா, திலீபன் சரவணன், ரிஷி, பிஎல் தேனப்பன், அர்ஜுன் தேவ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- முத்தையா.
ஒளிப்பதிவு :- ஆர்.வேல்ராஜ் ISC.
படத்தொகுப்பு :- வெங்கட் ராஜன்.
இசை :- ஜி.வி பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜி ஸ்டுடியோஸ் – டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்.
ரேட்டிங் :- 3.5./ 5.
தாய், தந்தையை இழந்த கதாநாயகி சித்தி இதானி, தனது அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார்.
கதாநாயகி சித்தி இதானியின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது அண்ணன் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் திட்டமிடுகிறார்கள்.
கதாநாயகி சித்தி இதானியின் சொத்து பறிபோய் விடக்கூடாது என்பதால் யார் திருமணத்திற்கு பெண் கேட்டு அந்த ஊருக்கு வந்தாலும் அவர்களை வெட்டி விரட்டியடிக்கிறார்கள்.
இதனிடையே கதாநாயகி சித்தி இதானி ஜெயிலில் இருக்கும் கதாநாயகன் ஆர்யாவை, கதாநாயகி சித்தி இதானி பல ஊர்களில் உள்ள ஜெயிலில் நேரில் சந்திக்க முயற்சி செய்கிறார்.
ஒரு சில காரணங்களால் கதாநாயகன் ஆர்யாவை, கதாநாயகி சித்தி இத்னானியால் ஜெயிலில் சந்திக்க முடியவில்லை.
தன்னை ஜெயிலில் சந்திக்க வந்த பெண் யார் என்று தெரிந்து கொள்ள கதாநாயகன் ஆர்யா முயற்சி செய்கிறார்.
அதன்பின்னர் கதாநாயகி சித்தி இத்னானியை சந்திக்க, அவர் இருக்கும் ஊருக்கே வந்துவிட அங்கு இவருக்கும் கதாநாயகி சித்தி இதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்க, மிகப்பெரிய மோதல் வெடிக்கிறது.
இறுதியில் கதாநாயகன் ஆர்யாவுக்கும் கதாநாயகி சித்தி இத்னானிக்கும் என்ன உறவு? என்பது தான் இந்த ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரியா நடித்திருக்கிறார்.
கிராமத்து முரட்டு இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்யா கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியுள்ளார்.
சணடை காட்சிகளில் கதாநாயகன் ஆர்யாவின் உழைப்பு மிக அதிகமாக தெரிகிறது.
கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் கதாநாயகி சித்தி இதானி மிக அழகாக நடித்துள்ளார்.
கதாநாயகி சித்தி இதானியை சுற்றியே கதை நகர்கிறது.
திரைப்படத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக கொடுத்து கவனம் பெறுகிறார்.
திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, அவரின் முதிர்ச்சியான நடிப்பால் கவர்கிறார்.
ஆடுகளம் நரேன் மற்றும் தமிழ் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம்.
பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் ஒளிப்பதிவு நம்மை கதைக்களத்திற்கு அழைத்து செல்கிறது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு அதனை மிக அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் முத்தையா.
இடைவேளைக்கு முன் திரைக்கதை மெதுவாக நகர்கிறது.
இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர். முத்தையா.
பிளாஷ் பேக் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
இயக்குனர் இமயத்திற்கு பிறகு கிராமத்தில் உள்ள சொந்த பந்தங்களை வைத்து மண் மணம் மாறாமல் திரைப்படம் இயக்கி வரும் இயக்குனர் முத்தையாவை பாராட்டிய தீர வேண்டும்.
மொத்தத்தில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – திரைப்படம் ஆர்யாவின் அடிதடியான திரைப்படம்.











