மாவீரன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 4.25./ 5.

நடிகர் & நடிகைகள் :- சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின், சுனில், மோனிஷா பிளெஸ்ஸி, அருவி மதன, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மடோன் அஸ்வின்.

ஒளிப்பதிவு :- விது அய்யன்னா.

படத்தொகுப்பு :- பிலோமின் ராஜ்.

இசை :- பரத் சங்கர்.

தயாரிப்பு நிறுவனம் :-  சாந்தி டாக்கீஸ்.

தயாரிப்பாளர் :- அருண் விஸ்வா.

ரேட்டிங் :- 4.25./ 5.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் தனது தாய் மற்றும் தங்கையுடன் ஒரு குப்பத்தில் வசித்து வருகிறார்.

மிகவும் பயந்த சுபாவம் கொண்டகார்ட்டூனிஸ்ட் ஓவிய கலைஞராக இருக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் ஒதுங்கிப் போவதே சரியான, தீர்வு என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் வசித்து வரும் குப்பத்தை காலி செய்து தரும்படி அரசாங்கத்திடம் இருந்து முன் அறிவிப்பு நோட்டீஸ் ஓட்டப்படுகிறது.

குப்பத்தை காலி செய்த மக்கள் குடிசை மாற்று வாரியம் அரசாங்கம் கட்டி மக்களுக்கு கொடுக்க பட்டுள்ள ஹவுசிங் போர்டு வீட்டிற்கு கும்பத்தை விட்டு செல்ல மனசே இல்லாமல் செல்கிறார்கள்.

கதாநாயகன், சிவகார்த்திகேயனின் தாய் தங்கை மற்றும், மக்களும் அரசு கட்டிக்கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள்.

அந்த குப்பத்து மக்களுக்கு அந்த அடுக்குமாடி ஹவுசிங் போர்டு சொர்க்கமாக மாறிவிடுகிறது.

ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வீடு தரம் இல்லாமல் கட்டிருப்பதை உணர்ந்த கதாநாயகன் சிவகார்த்திகேயன் இதன் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

கார்ட்டூனிஸ்ட் வேலையில் சேருவதற்கான முயற்சியில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன் சிவா கார்த்திகேயனுக்கு, கதாநாயகி அதிதி ஷங்கர் மூலம் தினத்தீ பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் வேலை கிடைக்கிறது.

ஆனால், ஹவுசிங் போர்டுக்கு சென்ற பிறகு அந்த மக்கள் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

மக்களுக்கு ஹவுசிங் போர்டில்  எற்படும் பல்வேறு பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், அதை தனது கார்ட்டூன் கதையின் காட்சிகளாக சித்தரித்து கதை எழுதி வரும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்றதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.

அப்போது அவருடைய காதலி ஒரு குரல் கேட்கிறது.

அந்த குரல் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு மொத்தமாக வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.

அந்த சக்தி மூலம் தான் எழுதும் கதையில் வரும் மாவீரனாக மாறுகிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

இறுதியில், கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஹவுசிங் போர்டில் வாசிக்கும் மக்கள் பிரச்சினைகளை சரி செய்தாரா? செய்யவில்லையா? மாவீரனாக மாற்றிய குரல் யாருடையது? அந்த குரலுக்கு கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்பந்தம்? என்பதுதான் இந்த மாவீரன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

குப்பத்து இளைஞராக நடித்திருக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இதுவரை நடித்து வந்த பாணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோழையாக இருக்கும் ஒருவன் மாவீரனாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

தோற்றம், உடல் மொழி, நடிப்பு என அனைத்திலும் சத்யா என்ற கதாபாத்திரமாக வலம் வரும் கதாநாயகன் சிவகார்த்திகேயன்,  பயந்துக்கொண்டே எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுடைய கைதட்டல் பெறுகிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர், தினத்தீ தினசரி பத்திரிகையில் துணை ஆசிரியர் கதாபாத்திரத்தில் அளவாக நடித்திருக்கிறார்.

கதாநாயகிஅதிதி சங்கர் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

யோகிபாபு தன் நகைச்சுவையினால் அதகளம் செய்துள்ளார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன், யோகிபாபு காமெடி ஒவ்வொன்றும் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார்.

வில்லனாக வரும் மிஷ்கின் திரைப்படம் முழுவதும் குறைவான வசனங்கள் மட்டுமே பேசி நடித்தாலும்  கண்களின் மூலமாகவே உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருப்பவர்,

இறுதிக் காட்சியில் இயக்குநர் மிஷ்கின் ஆக்ரோஷமான நடிப்பு மூலம் அப்ளாஷ் பெறுகிறார்.

மிஷ்கினின் உதவியாளராக நடித்திருக்கும், தெலுங்கு நடிகர் சுனில் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயனின் தாயாக நடித்திருக்கும் சரிதா, தங்கையாக நடித்திருக்கும் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோரும் தங்களது வேலையை மிகவும் சரியாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான விஜய் சேதுபதி தன் குரல் மூலம் மொத்த படத்தையும் முன்னோக்கி எடுத்துச்செல்கிறார்.

விஜய் சேதுபதியின் பின்னணி குரல் மாவீரன் கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி இந்த திரைப்படத்திற்கே பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களை காட்டிய விதமும், திரைப்படத்தின் முக்கிய கதைக்களங்களான சென்னை பகுதியில் உள்ள குப்பம் மற்றும் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் கட்டிக் கொடுக்கப்படும் ஹவுசிங் ஃபோர்ட் இரண்டையும் மிக இயல்பாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளை ரசிக்கும்படி அமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

பின்னணி இசை திரைப்படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் முணு முணுக்க வைப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கதையை சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் நகர்கிறது.

ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை அனைத்து காமெடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின்.

மாவீரன்’ திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.

தன் முதல் திரைப்படமான யோகிபாபு நடிப்பில் வெளிவந்த ‘மண்டேலா’- திரைப்படத்தில் சுவாரஸ்யமான நல்ல கதையை அமைத்து திரைக்கதை மூலம் சமூக பிரச்சினையை கூறிய இயக்குநர் மடோன் அஷ்வின்.

இந்த மாவீரன் திரைப்படத்திலும் சமூக பிரச்சனையை சுவாரஸ்யமான நல்ல கதையை அமைத்து வித்தியாசமான திரைக்கதை மூலம் ஃபேண்டஸி ஜானரை, கமர்ஷியல் ஆக்‌ஷன் கதைக்களத்தோடு சொல்லியிருப்பதோடு கனகச்சிதமாக பொருத்தி நல்ல திரைப்படத்தை இயக்கியிருப்பது இயக்குநர் மடோன் அஷ்வின் மிக பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மாவீரன் திரைப்படம் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம்.

error: Content is protected !!