ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.
நடிகர் & நடிகைகள் :- ரியோ ராஜ், ஜோ ஜியோவானி சிங், ஜெய்னேஷ் ஏ.எஸ்.அமரன், குணாளன் நபிசா ஜுல்லாலுதீன், மூனிலா மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜோ ஜியோவானி சிங்.
ஒளிப்பதிவு :- சலீம் பிலால் ஜித்தேஷ்.
படத்தொகுப்பு :- ராம் மணிகண்டன்.
இசை :- பிரவீன் விஸ்வா மாலிக்.
தயாரிப்பு நிறுவனம்:- ஸ்ட்ரீட்லைட் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- ஜியோவானி சிங்.
ரேட்டிங் :- 2.5/ 5.
கதாநாயகி சிங்கப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய டிராவல் ஏஜென்சியில் பணிபுரிகிறார்.
டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்து வரும் கதாநாயகிக்கு வருடத்திற்கு ஒரு முறை இலவச விமான டிக்கெட் டிராவல் ஏஜென்சி வழங்குகிறது.
கதாநாயகிக்கு சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் கிடைக்கிறது,
சென்னை வந்த கதாநாயகி மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தன் நண்பரை சந்திக்கிறார்.
அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் கதாநாயகியை பற்றி விசாரிக்கிறார்.
சில நாட்கள் கழித்து சிங்கப்பூர் செல்லும் அந்த நபர், கதாநாயகி பணிபுரியும் டிராவல் ஏஜென்சியில் நேரில் சந்திக்கிறார்.
இந்த நிலையில் உடல் உறுப்பு திருட்டு குறித்து சில சம்பவங்கள் நடக்கிறது.
கதாநாயகியின் தந்தை வேலை இழந்து கஷ்டப்படும் நேரத்தில். கதாநாயகியும், அவருடைய தம்பியும் ஆளுக்கொரு வீட்டில் சென்று திருடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
அப்படி இவர்கள் போட்ட திட்டத்தின்படி, வீட்டில் திருடிவிட்டு தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த புரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்படத்தின் மீதி கதை.
ஜோ ஜியோவானி சிங் பன்முகப் பாத்திரத்தில் ஈர்க்கிறார்.
ரியோ ராஜ் நடிப்பு திருடப்போன வீட்டில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை மிகவும் அற்புதமாக காண்பித்திருக்கிறார்.
திரைப்படத்தில் மூனிலா, ஜெய்னீஷ், குணாளன் மற்றும் பலர் உட்பட பலர் உள்ளனர்,
ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களும் கதையின் ஒட்டுமொத்த திரைக்கதைக்கு பங்களிக்கின்றன.
ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு சிங்கப்பூரின் சாராம்சத்தை அழகாக படம்பிடித்து, பார்வையாளர்களை வசீகரிக்கும் காட்சியை கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் பாடல் இசை மற்றும் பின்னணி இசை சுமார்.
யார் மனதையும் புண்படுத்தாமல் எந்த ஒரு தயாரிப்பாளர் தலையிலும் கை வைக்காமல் தனக்குத் தோன்றியதை செய்து முடித்த இயக்குனர் ஜோ ஜியோவானி சிங் தன்னம்பிக்கையும் பாராட்டலாம்.
மொத்தத்தில் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்படம் சுமாராக இருக்கிறது.











