ரங்கோலி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75./5.
நடிகர் & நடிகைகள் :- ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, பிரார்த்தனா சந்தீப், அமித் பார்கவ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வாலி மோகன் தாஸ்.
ஒளிப்பதிவு :- மருதநாயகம்.
படத்தொகுப்பு :- ஆர் சத்தியநாராயணன்.
இசையமைப்பாளர் :- கே எஸ் சுந்தரமூர்த்தி.
தயாரிப்பு நிறுவனம் :- கோபுரம் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- ஜி சதீஷ் குமார், கே பாபு ரெட்டி.
ரேட்டிங் :- 2.75/ 5.
சலவை தொழிலாளியாக இருக்கும் முருகதாஸ், மனைவி சாய்ஸ்ரீ மகள் அக்ஷயா மற்றும் கதாநாயகன் ஹமரேஷ் சலவைத் தொழில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
முருகதாஸ் மகன் கதாநாயகன் ஹமரேஷ் ராயப்பேட்டை கார்பரேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது மகனை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்.
ராயப்பேட்டை கார்பரேஷன் பள்ளியில் படிக்கும் தன் மகன் கதாநாயகன் ஹமரேஷ், பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தந்தை முருகதாஸ் ஆசைப்படுகிறார்.
ஹமரேஷ் பள்ளியில் நடக்கும் பிரச்சினைகளில் அதிகம் தலையிடுவதால் பள்ளியை மாற்றினாள் மகன் குணம் மாறிவிடும் என்று எண்ணி தந்தை முருகதாஸ் அவரை அதிகம் செலவு செய்து சி.பி.எஸ்.சி. பள்ளியில் சேர்த்து விடுகிறார்..
ஆனால், கதாநாயகன் ஹமரேஷ் பள்ளி மாற்றி படிப்பதற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், இருந்தாலும் தன் தந்தை முருகதாஸ் ஆசைக்காக தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்,
கார்பரேஷன் பள்ளியில் நன்றாக படித்த கதாநாயகன் ஹமரேஷ்க்கு சி.பி.எஸ்.சி பள்ளியில் பாடம் மிகவும் கடினமாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அங்குள்ள சக மாணவர்கள் கதாநாயகன் ஹமரேஷை லோக்கலான இடத்தில் இருந்து வந்தவன் என்று கேலி செய்து அவனை லோக்கல் என்று சொல்லி சண்டையிடுகிறார்கள்.
இது ஒருபக்கம் இருந்தாலும் கதாநாயகன் ஹமரேஷ் அவனுக்கு பிடித்த கதாநாயகி பிரார்த்தனா அந்த பள்ளியில் படிப்பதால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அங்கேயே படிப்பை தொடர்கிறார்.
இதனை தெரிந்து கொண்ட சண்டையிடும் சக மாணவர்கள் கதாநாயகன் ஹமரேஷ் மீது இருக்கும் கோபத்தால் கதாநாயகன் ஹமரேஷ் கதாநாயகி பிரார்த்தனா இருவரும் காதலிப்பதாக பள்ளியில் உள்ள பாத்ரூம் சுவற்றில் எழுதி வைத்துவிடுகின்றனர்.
பள்ளியில் உள்ள பாத்ரூம் சுவற்றில் எழுதி வைத்த விஷயம்
மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்கிறது.
இதனால் பள்ளியில் இருந்து மாணவன் கதாநாயகன் ஹமரேஷ் நீக்கும் அளவிற்கு நிர்வாகம் சென்றுவிடுகிறது.
இறுதியில் கதாநாயகன் ஹமரேஷ் பள்ளியில் இருந்து நீக்கி விட்டார்களா? நீக்க வில்லையா? என்பதுதான் இந்த ரங்கோலி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ரங்கோலி திரைப்படத்தில் கதாநாயகனாக ஹமரேஷ் நடித்திருக்கிறார்.
ஹமரேஷ் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.
தன் குடும்பத்தினர் வற்புறுத்தலால் தற்போது படிக்கும் பள்ளியை விட்டு தனது நண்பர்களை விட்டு வேறொரு பள்ளிக்கு செல்லும் மாணவன் என்ன கஷ்டப்படுவான் என்பதை தன் நடிப்பின் மூலம் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகன் ஹமரேஷ். காதல், எமோஷன் தாய் தந்தை அக்கா உள்ள பாசம் என நடிப்பில் அசத்தியுள்ளார்.
இந்த ரங்கோலி திரைப்படத்தில் கதாநாயகியாக பிரார்த்தனா நடித்திருக்கிறார்.
கதாநாயகியான பிரார்த்தனா அழகாக வந்து அளவான நடிப்பை அருமையாக கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.
கதாநாயகன் ஹமரேஷ் தந்தையாக வரும் ஆடுகளம் முருகதாஸ் எப்படியாவது தனது மகனை படிக்க வைக்க வேண்டும் என கஷ்டப்பட்டு பணம் சேர்க்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார்.
கதாநாயகன் ஹமரேஷ் தாயாக வரும் சாய்ஸ்ரீ இளம் வயதில் இந்த இரண்டு குழந்தைகளுக்கு தாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
மிகவும் சுலபமாக சென்னை பெண்ணாகவே நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளார்.
தன் மகனுக்காக கஷ்டப்படும் இடங்களில் நடிப்பால் மனதை கவர்ந்துள்ளார்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராஜ் மிகவும் அருமையாக இந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
கடன் கொடுத்தவனுக்கு வேலை வாங்கி கொடுத்து என் பணத்தை எப்படியாவது கொடுத்து விடு என்று கூறும் காட்சிகளில் ஜெயராஜ் அருமையாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம் திரைப்படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை மிகவும் அருமையாக கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தர மூர்த்தி இசையில் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் சுமாராக உள்ளது.
பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக கல்வி செலவிற்காக நடுத்தர குடும்பங்கள் படும் கஷ்டங்களை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் வாலி மோகன்தாஸ்.
மொத்தத்தில் ரங்கோலி திரைப்படம் சற்று வர்ணங்களும் குறைவாக உள்ளது.











