வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./5.
நடிகர் & நடிகைகள் :- சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபெராஸ், ஆறுமுகவேல், ஆர்ஜே பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், எச் எம் மகேஷ், சிவசக்தி, சுதா பிரசாத், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெயராஜ் பழனி.
ஒளிப்பதிவு :- எஸ் கோகுலகிருஷ்ணன்.
படத்தொகுப்பு :- விக்னேஷ் R.L.
இசையமைப்பாளர் :- தர்ஷன் ரவிக்குமார்.
தயாரிப்பு நிறுவனம்:- இசை பிக்சர்ஸ் .
தயாரிப்பாளர்கள் :- இசை, அதிதி இசை, அத்வைதா இசை நீலிமா இசை.
ரேட்டிங் :- 3./ 5.
இந்தியாவில் தன் பாலின ஈர்ப்பு என்பது தவறான ஒன்று இல்லை
இவர்களுக்கும் நம்மை போல் வாழ உரிமை உள்ளது என நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் நம் சமூகம் தன் பாலின ஈர்ப்பாளர்களை முழுமையாக இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த தன் பாலின ஈர்ப்பாளர்களை கருத்தை மைய்யமாக வைத்து வந்துள்ள திரைப்படம்தான் ’வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி உள்ளது.
தரங்கம்பாடியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் தந்தை தாய் மகள் நிரஞ்சனா நெய்தியார் வாழ்ந்து வருகின்றனர்.
தரங்கம்பாடியில் இருக்கும் தொழிலாளர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக திருச்சியிலிருந்து வரும் (வினோதா) சுருதி பெரியசாமி (ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார்வின் தந்தையை சந்தித்து தங்குவதற்கு ஏதேனும் இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என கூற தனது வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள் என (ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார்வின் தந்தை கூறிவிடுகிறார்.
(ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார் மற்றும் (வினோதா) சுருதி பெரியசாமி இருவரும் நட்பாக பழகி இரவு நேரங்களில் வெளியில் சுற்றுவதுமாக இருக்கிறார்கள்.
(ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார் மற்றும் (வினோதா) சுருதி பெரியசாமி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள்.
இந்த விஷயம் (ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார்வின் தந்தைக்கு தெரிய வர உடனடியாக இரவோடு இரவாக இர்பான் என்ற இஸ்லாமிய இளைஞனை (ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார்வுக்கு திருமணம் செய்து வைக்க அவசரமாக முடிவு செய்கிறார்கள்.
(ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார் இர்பானை அணுகி (வினோதா) சுருதி பெரியசாமியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என எங்கள் இருவரையும் சேர்த்து வைக்குமாறு உதவி கேட்கிறார்.
இர்பானும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு ஒத்து கொள்கிறார்.
ஷீகிரா) நிரஞ்சனா நெய்தியார் (வினோதா) சுருதி பெரியசாமி இருாவரும் காதலிப்பது திருமணம் செய்து கொள்வதையும் இவர்களின் உறவை சமூகமும், இஸ்லாமிய மதமும் ஏற்றுக்கொண்டதா? ஏற்றுக்கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்படத்தின் மீதி கதை.
இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்படத்தில் கதாநாயகிகளாக சுருதி பெரியசாமி, வினோதா கதாபாத்திரத்திலும் நிரஞ்சனா நெய்தியார், ஷீகிரா கதாபாத்திரத்திலும் இருவரும் நடித்திருக்கிறார்கள்.
தன் பாலின ஈர்ப்பாளர்களாக வரும் நிராஞ்சனா நெய்தியார் சுருதி பெரியசாமியும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இர்ஃபானாக நடித்திருக்கும் அர்ஷத் ஃபெராஸ் தன் கட்டிக்க போகும் பெண்ணுக்கு இன்னொரு காதல் இருப்பது தெரிந்து அதிர்ச்சியில் அடைகின்றார்
இர்ஃபானாக நடித்திருக்கும் அர்ஷத் ஃபெராஸ் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்
வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்படத்தில் நடித்திருக்கும் ஆறுமுகவேல், ஆர்ஜே பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், எச் எம் மகேஷ், சிவசக்தி, சுதா பிரசாத், அனைவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் தர்ஷன் ரவிக்குமார் இசை மற்றும் பின்னணி இசை அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
துளி கூட ஆபாசம் இல்லாமல்,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் நேர்மையாக உணர்வுகளை சொல்லி உள்ளது இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்படத்தை மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.
காதலுக்கு ஜாதி, மதம் பேதம் மட்டும் இல்லை பாலின பேதமும் கிடையாது என்கிறது வாழ்வு தொடங்கும் இடம் நீதானே திரைப்படத்தின் மூலம் மிக அருமையாக கூறியிருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.
மொத்தத்தில் இந்த வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்படம் சொல்லப்பட வேண்டிய கதை. பார்க்க வேண்டிய படைப்பு .











