மால் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.25./5.

நடிகர் & நடிகைகள் :- கெஜராஜ், அஷ்ரப், தினேஷ் குமரன், சாய் கார்த்தி, கெளரி நந்தா, ஜெய், வி.ஜே.பப்பு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தினேஷ் குமரன்.

ஒளிப்பதிவு :- சிவராஜ்.இரா.

படத்தொகுப்பு :- சிவராஜ்.இரா.

இசையமைப்பாளர் :- பத்மயன் சிவனந்தம்

தயாரிப்பு நிறுவனம் :- கோவை பிலிம் போட்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- சிவராஜ் ஆர், கார்த்திக் எம், பி.

ரேட்டிங் :- 3.25/5.

தமிழ் திரைப்பட உலகில் சிலை கடத்தலை மையப்படுத்தி வரிசையாக திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வரிசையில், இந்த மால் கதையும் சிலை கடத்தலை மையப்படுத்தி வந்திருக்கு திரைப்படம் தான் மால்.

ராஜராஜ சோழன் வாழ்ந்த தஞ்சை மண்ணிலிருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான காணாமல் போன ராஜராஜ சோழன் பழங்காலத்தில் உள்ள சிலையை கண்டு பிடிப்பதற்காக பலவிதமான முயற்சியில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அந்த கும்பலையும் கடத்தப்பட்ட சிலையையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிலை கடத்தப்பட்டவரிடம் இருந்து ராஜராஜ சோழன் பழங்காலத்தில் உள்ள சிலையை கடத்தல் கும்பல் என்ன செய்வது என்று தெரியாமல் வேறு ஒரு கடத்தல் கும்பலிடம் கொடுத்து கைமாற்றி தரும்படி கேட்கிறது.

அந்த கும்பல் சரி என்று சொல்ல ராஜராஜ சோழன் பழங்காலத்தில் உள்ள சிலையை மாற்றும் வேறு ஒரு கடத்தல் கும்பல் கடத்தி விடுகிறது.

கடத்தல் கும்பல் சிலையை கடத்திக்கொண்டு வரும்போது கார் விபத்துக்குள்ளாகி நடந்து காரில் வந்த இருவரும் மரணம் அடைந்து விடுகிறார்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரி கஜராஜ் அந்த சிலை அவர் கண்ணில் பட அந்த சிலையை அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்துகிறார்.

அந்த ராஜராஜ சோழன் பழங்காலத்து சிலையை காவல்துறை அதிகாரி கஜராஜ் சிலையை விற்பனை செய்து பணமாக்கி விடலாம் என நினைக்கிறார்.

இப்படியாக, ராஜராஜ சோழன் பழங்காலத்து சிலையை பலர் அடைய நினைக்கிறார்கள்.

கடைசியாக அந்த சிலை என்ன ஆனது என்பதுதான் இந்த மால் திரைப்படத்தின் மீதிக் கதை.

திருடர்களாக நடித்திருக்கும் அஸ்ரப் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கூட்டணி பரபரப்பான நகரும் திரைப்படத்தில் அவ்வபோது நம்மை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் செய்கிறார்கள்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜின் அனுபவமான நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை கெளரி நந்தாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லாதது திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

கஜராஜ் மற்றும் சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் கெளரி நந்தா இருவர் மட்டுமே தெரிந்த முகங்களாக இருக்கிறார்கள்.

மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சிவராஜ்.இரா ஒளிப்பதிவில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் பல இடங்களில் லைட்டிங் சீன்ஸ் கம்மியாக உள்ளது.

இசையமைப்பாளர் பத்மயன் சிவானந்தத்தின் இசையில் பின்னணி இசை கதைக்கு ஏற்ப மிகப்பெரிய அளவில் பயணித்திருக்கிறது.

வழக்கமான சிலை கடத்தல் கதை தானே என்று கடந்து செல்ல முடியாத அளவிற்கு திரைப்படத்திற்குள் நம்மை ஈர்த்து விடுகிறார் இயக்குனர் தினேஷ் குமரன்.

சிலையை யார் கடத்தியிருப்பார் என்று அடுத்துடுத்து யூகித்துக் கொண்டிருக்கும்படியாகவே காட்சிகளை அமைத்து மிக அருமையாக ஏகியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் குமரன்.

மொத்தத்தில் மாள் திரைப்படம் புதியவர்களின் புதுமையான படைப்பு கண்டிப்பாக பார்க்கலாம் ஆஹா ஓ டி டி தளத்தில்.

error: Content is protected !!