புது வேதம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.75./ 5.
நடிகர் & நடிகைகள் :- ஜெய் விக்னேஷ், ரமேஷ் வருணிகா, சஞ்சனா, இமான் அண்ணாச்சி , சிசர் மனோகர் 2 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :– ராசா விக்ரம்.
ஒளிப்பதிவாளர் :- கே.வி.ராஜன்.
படத்தொகுப்பு :- நவீன் குமார்.
இசையமைப்பாளர் :- ரபி தேவேந்திரன்.
தயாரிப்பு நிறுவனம்:- விட்டல் மூவிஸ் நிறுவனம்.
தயாரிப்பாளர் :- மஞ்சுநாத் புகழ்.
ரேட்டிங் :- 1.75./ 5.
கதாநாயகன் ஜெய் விக்னேஷ் சிறு வயதிலேயே அவருடைய தந்தையை இழந்து தன் தாய் தன்னை பிச்சை எடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் பேருந்து நிலையத்தில் கதாநாயகன் ஜெய் விக்னேஷ் தன் தாயுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது இரண்டு பேரு தான் தாயிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
அந்த நேரத்தில் அங்கு வந்த பேருந்து ஓட்டுனர் ஒருவர் கதாநாயகன் ஜெய விக்னேஷ் அவருடைய தாய் மீது ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.
கதாநாயகன் ஜெய விக்னேஷ் தாய் தன்னை மட்டுமல்லாமல் தனது மகனையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கிறார்.
இதற்கு அந்த ஓட்டுனர் உன் மகனை விட்டுவிட்டு நீ மட்டும் என்னோடு வந்தால் வா இல்லை என்றால் நீ வர வேண்டாம் என கூறுகிறார் ஓட்டுனர்.
தனது மகன் கதாநாயகன் ஜெய விக்னேஷ் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பேருந்து நிலையத்திலேயே அனாதையாக விட்டுட்டு தாய் அந்த ஓட்டுனருடன் சென்று விடுகிறார்.
தாய் அனாதையாக விட்ட அன்று முதல் இருந்து அனாதையக திரியும் கதாநாயகன் ஜெய் விக்னேஷுக்கு சிறுவயதில் குப்பை பொறுக்கும் ரமேஷின் நட்பு கிடைக்க இருவரும் இணை பிரியாத நண்பனாக இருக்கிறார்
இருவரும் குப்பை மேட்டில் கிடைக்கும் விற்பதற்கான குப்பைகளை எடுத்து விற்று அதில் வரும் பணத்தில் இருவரும் வாழ்த்து வருகின்றனர்.
அப்போது தன்னுடன் குப்பை பொறுக்கும் கதாநாயகன் ஜெய் விக்னேஷ் கதாநாயகி வருணிகா காதலிக்கிறார்.
ஆனால், கதாநாயகி வருணிகா குப்பை வாகனம் ஓட்டும் ஓட்டுனரை காதலிக்கிறாள்.
இறுதியில் கதாநாயகன் ஜெய் விக்னேஷ் காதல் என்ன ஆனது கதாநாயகி வருணிகா மற்றும் கதாநாயகன் ஜெய் விக்னேஷ் இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா? என்பதுதான் இந்த புது வேதம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த புது வேதம் திரைப்படத்தில் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் விக்னேஷ் நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகனாக ரமேஷ் நடித்திருக்கிறார்.
ஜெய் விக்னேஷ் மற்றும் ரமேஷ் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.
இமான் அண்ணாச்சி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சிசர் மனோகர் அவருடைய கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக வரும் வருணிகா லாவண்யா எப்படியாவது நடித்து விட வேண்டும் என நடிக்க முயற்சித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கே.வி.ராஜன் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் அதிக அளவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ரபி தேவேந்திரன் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் சூப்பர்.
படத்தொகுப்பாளர் நவீன் குமார் படத்தொகுப்பு ஓரளவுக்கு பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குப்பைமேடு பகுதியில் வாழும் மக்களை மையமாகவும் மற்றும் போலியான மருந்து கம்பெனிகள் பற்றியும் தேவையான கதையை யோசித்த இயக்குனர் ராசா விக்ரம் திரைக்கதையை சரியாக கொடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நல்ல நல்ல காட்சிகளை வைத்துக்கொண்டு திரைப்படம் விறுவிறுப்பு இல்லாமல் செல்வது திரைப்படம் பார்க்கும் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் புது வேதம் திரைப்படம் திரைப்பட ரசிகர்களுக்கு புதிய வேதமாக அமைந்திருக்க வேண்டும் பார்க்கலாம் ஒரு முறை.











