அயலான் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5./5.
நடிகர் & நடிகைகள் :- சிவகார்த்திகேயன், ராகுல் பிரீத் சிங், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், முனீஸ் காந்த், வெங்கட் செங்குட்டுவன், கோதண்டம், ஜார்ஜ் மரியான், செம்மலர் அன்னம், சரத் கேல்கர், இஷா கோப்பிகர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர் ரவிகுமார்
ஒளிப்பதிவாளர் :- நீரவ் ஷா
படத்தொகுப்பாளர் :- ரூபன்.
இசையமைப்பாளர் :- ஏ.ஆர். ரகுமான்.
தயாரிப்பு நிறுவனம் :- கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- கோட்டபாடி ஜே. ராஜேஷ்.
ரேட்டிங் :- 3.5/ 5.
இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இந்த அய்லான் திரைப்படத்தை ஏக்கி இருக்கிறார்.
‘ET உட்பட சில ஹாலிவுட் திரைப்படங்கள்,தமிழிலும், பிற மொழிகளிலும் வந்த சில பல நாவல்களின் தழுவல்களை மைய்யமாக வைத்து வந்துள்ளது அயலான்.
கொடைக்கானல் அருகில் உள்ள
பூம்பாறை கிராமத்தில் தாய் பாணுபிரியாவுடன் கதாநாயகன் சிவகார்த்திகேயன் கிராமத்தில் ஒரு புழு, பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத நல்ல மனிதராக வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான வயலில் சூரியகாந்தி பூ செடி விளைச்சலில் எங்கிருந்தோ வந்த வெட்டுக்கிளிகள் செடிகள் முழுவதையும் நாசமாக்கி விடுகிறது.
தனது வயலில் உள்ள செடிகள் அனைத்தும் நாசமாகி விட்டதால் தன் வாழ்க்கை வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை தேடி கதாநாயகன் சிவகார்த்திகேயன் சென்னை வந்து யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் இணைந்து வேலை பார்க்கிறார்.
இது ஒருபுறம் இருக்க வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த ஒரு சிறிய கல்லை வைத்து வில்லன் பூமியில் அதிக துளையிட்டு கேஸ் ஒன்றை எடுக்க முயற்சி செய்கிறான்.
இதனை அறிந்த ஏலியன் அந்த கல்லை மீட்பதற்காக கல் இருக்கும் இடத்தை தேடி ஏலியன் வருகிறது.
அந்த கல் வில்லனிடம் இருப்பதை அறிந்த ஏலியன் அதை மீட்பதற்காக அந்தக் கல் இருக்கும் இடத்திற்கு செல்கிறது.
அந்த ஏலியன் கல்லை மீட்டு கொண்டு வரும் பொழுது அடிப்பட்டு மயங்கிய நிலையில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் அந்த வில்லன் குழுவிடம் மாட்டிக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் ஏலியனின் பிரச்சனையை தெரிந்து கொண்ட கதாநாயகன் சிவகார்த்திகேயன் அந்த ஏரியனுக்கு எப்படியாவது உதவி செய்தே ஆக வேண்டும் என களத்தில் இறங்குகிறார்.
இறுதியில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இதனால் என்ன பிரச்சனைகளை சந்தித்தார்? வேற்றுகிரக வாசியான ஏலியன் கல்லை எடுத்துக் கொண்டு தன் கிரகத்திற்கு சென்றதா? செல்லவில்லையா? என்பதுதான் இந்த அய்லான் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அயலான் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் இன்று குழந்தைகளின் பேவரட் நாயகன், அதனாலேயே குழந்தைகள் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை தந்துள்ளார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும் அனைத்திலும் கலக்கியிருக்கிறார்.
ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் அருமையாக மிரட்டியிருக்கிறார்.
இந்த அயலான் திரைப்படத்தில் கதாநாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.
கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங் அழகாக வந்து அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் மட்டும் இருந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது ஆனால் யோகிபாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடி மிகப்பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
கதாநாயகன் சிவகார்த்திகேயன் தாயாக வரும் பானுப்பிரியா ஒரு சில காட்சிகள் வந்தால் மனதில் பதிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஏலியனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் பின்னணியில் இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ரூபன் படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.
இந்த அயலான் திரைப்படத்தில் வரும் அனைத்து கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் வடிவியமைக்கப்பட்டுள்ளது.
செடிகளை அழிக்கும் வெட்டுகிளிகள் வரும் காட்சிகள், மற்றும் ஏலியன் வரும் காட்சிகள் என திரைப்படம் முழுவதும் கிராபிக்ஸால் மிரட்டியுள்ளார்.
அயலான் திரைப்படத்தின் முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதிரடி காட்டியுள்ளார் இயக்குனர் ஆர்.ரவிகுமார்.
மொத்தத்தில் இந்த அயலான் திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் அருமையான குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு திரைப்படம் குடும்பத்துடன் சென்று கண்டிப்பாக கண்டு களிக்கலாம்.











