சபாநாயகன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.
நடிகர் & நடிகைகள் :- அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம், விவ்யாசாந்த், ஷெர்லின்சேத், அனீஷ், மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அக்ஷயா ஹரிஹரன், பிக்பாஸ் பாலா, ராஸ், மனோகர், துளசி, பாலமுருகன், ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார், பாஸ்கரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சி.எஸ். கார்த்திகேயன்.
ஒளிப்பதிவாளர்கள் :- பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ்.
படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா.
இசையமைப்பாளர் :- லியோன் ஜேம்ஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- கிளியர் வாட்டர் ஃபிலிம்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கேப்டன் மேகவாணன் இசைவாணன்.
ரேட்டிங் :- 3.5/ 5.
காவல்துறை ஆய்வாளர் மைக்கேல் தங்கதுரை தனது காவலர்களுடன் சேர்ந்து நம் கதாநாயகன் அசோக் செல்வன் மீது குடிபோதையில் & பொதுத் தொல்லை வழக்கில் குற்றம் சுமத்தி கைது செய்கிறார்.
.அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் மேலும் ஒரு பையனை கைது செய்கிறார்கள்.
அதன் பின்பு அந்த பையன் தனது காதல் தோல்வியால் மனம் உடைந்திருப்பதைக் பற்றி கூற அந்த பையனை விட்டுவிடுகிறார்கள்.
கதாநாயகன் அசோக் செல்வன் தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வியை பற்றி காவலர்களிடமும் கூறுகிறார்.
பள்ளி, கல்லூரி என படிக்கும் இடங்களில் ஏதாவது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் சபா எனும் கதாநாயகன் அசோக் செல்வன் எந்த ஒரு காதலும் கை கூடாமல் போகிறது.
இருந்தாலும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் இடத்தில் காதலிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
கதாநாயகன் அசோக் செல்வன் காதல் வெற்றி பெற்றதா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த சபாநாயகன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சபாநாயகன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகன் அசோக் செல்வன் இது வரை நடித்த அனைத்து திரைப்படங்களில் இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக சபாநாயகன் அமைந்துள்ளது.
பள்ளி பருவத்தில் மீசை தாடி இல்லாமல் டீன் ஏஜ் காதலில் அவருடைய நடிப்பு பெரும்பாலான ரசிகர்களின் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மலரும் நினைவுகளை நியாபகப்படுத்துகிறது.
திரைப்படம் ஆரம்பம் காட்சிமுதல் இறுதி காட்சி வரை காதல், காதல் என பிளேபாயாக காமெடி கலந்து கதாநாயகன் அசோக் செல்வன் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டார்.
இந்த சபாநாயகர் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளாக கார்த்திகா முரளி தரன், சாந்தினி, மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகிகள் கார்த்திகா முரளி தரன், சாந்தினி, மேகா ஆகாஷ் மூன்று கதாநாயகிகளும் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் அருமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
கதாநாயகன் அசோக் செல்வன் நண்பர்களாக வரும் அருண், ஜெய்சீலன் ,ஸ்ரீராம்
ஆகியோர் வரும் அனைத்து காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.
கதாநாயகன் அசோக் செல்வனிடம் கதை கேட்கும் காவலராக மறைந்த நடிகர் மயில்சாமியின் அனுபவ நடிப்பு ரசிக்க வைக்கிறது.
காவலராக நடித்திருக்கும் உடுமலை ரவி அருமையாக நடித்திருக்கிறார்.
அதுபோல் காவல்துறை அதிகாரியாக வரும் மைக்கேல் தங்கதுரை கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு கதைக்கு கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்து அருமையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் பேபிமா பேபிமா பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
படத்தொகுப்பாளர்கணேஷ் சிவா படத்தொகுப்பு ரசிக்க வைத்து இருக்கிறது.
பள்ளி, பருவத்தில் நடந்த காதல் கல்லூரி பருவத்தில் நடந்த காதலை யதார்த்தத்துடனும் காமெடி கலந்து சுவாரஸ்யத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் சி.எஸ்
காட்சிகள் ஒவ்வொன்றும் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஒரு சில காட்சிகளில் மட்டும் குறைகள் இருந்தாலும் அருமையான திரைக்கதை அமைத்தால் சுவாரஸ்யமாக இருப்பதால் பெரியதாக தெரியவில்லை.
நல்ல ஒரு அருமையான திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திகேயன் சி எஸ் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் சபாநாயகன் திரைப்படம் காமெடி கலந்த காதல் கதை.











