ஜிகிரி தோஸ்த் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75/5.
நடிகர் & நடிகைகள் :- ஷாரிக் ஹாசன், அரண் வி, வி.ஜே.ஆஷிக், அம்மா அபிராமி, பவித்ரா லட்சுமி, சிவம் கே.பி.ஒய்.சரத், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அரண் வி.
ஒளிப்பதிவாளர் :- ஆர்.வி. சரண்.
படத்தொகுப்பாளர் :- அருள் மொழி வர்மன்.
இசையமைப்பாளர் :- அஸ்வின் விநாயகமூர்த்தி.
தயாரிப்பு நிறுவனம்:- லார்ட்ஸ் பி இன்டர்நேஷனல் & விவிகே என்டர்டெயி்ன்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- பிரதீப் ஜோஸ்.கே – அரண்.வி.
ரேட்டிங் :- 2.75/ 5.
கதாநாயகன் ஷாரிக் ஹாசன், அரண் வி, ஆஷிக் வி.ஜே ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்.
புதிய தொழில்நுட்பத்தை புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வம் கொண்ட அரண்.வி கல்லூரிமில் மாணவர்கள் புதிதாக கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது பேராசிரியர் ஜார்ஜ் மரியான் அரணை அவமானப் படுத்தி விடுகிறார்.
இதனால் அரண்.வி மனதளவில் பாதிக்கப்படுகிறார்.
அரணை கதாநாயகன் ஷாரிக் ஹாசன், ஆஷிக் நண்பர்கள் இருவரும் கடலுக்கு நடுவில் சென்று போர்டில் சரக்கடிக்கலாம் என அழைத்து செல்கிறார்கள்.
அப்போது வில்லன் சிவன் பவித்ரா லட்சுமியை காரில் கடத்தப்படுவதை நண்பர்கள் காரில் செல்லும் வழியில்
பார்த்து விடுகிறார்கள்.
கதாநாயகன் ஷாரிக் ஹாசன், அரண் வி, வி.ஜே.ஆஷிக், மூவரும் பவித்ரா லட்சுமியை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
கஞ்சா விற்பது மற்றும் சமூக விரோதமான செயல்களில் ஈடுபடும் சமுக விரோதிகளின் கூடாரத்தை கண்டுபிடிப்பதற்கு அரண் கண்டுபிடித்த டெரரிஸ்ட் ஹேக்கர் எனற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பவித்ரா லட்சுமியை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.
இறுதியில் பவித்ரா லட்சுமியை கடத்திய வில்லன் சிவனிடம் இருந்து காப்பாற்றினார்களா? காப்பாற்றவில்லையா? பவித்ரா லட்சுமியை வில்லன் சிவன் கடத்த காரணம் என்ன? என்பதுதான் இந்த ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் கதாநாயகனாக
ஷாரிக் ஹாசன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகள் நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதாநாயகன் ஷாரிக் ஹாசன் வேறு யாரும் இல்லை நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக் ஹாசன் ஏற்கனவே இவர் ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் அரண் அருமையாக நடித்துள்ளார்.
நண்பராக வரும் வி ஜே ஆஷிக் திரைப்படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்.
இருவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த ஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார்.
கதாநாயகி அம்மு அபிராமி சில காட்சிகளே வந்தாலும் கண்களுக்கு விருந்தாக உள்ளார்.
திரைப்படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை கடத்தப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் பவித்ரா லட்சுமி பரிதாபத்தை வரவழைப்பது மட்டுமல்லாமல் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
வில்லனாக வரும் சிவனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டியே வேண்டும்
ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரண் ஒளிப்பதிவில் காட்சிகள் தெள்ள தெளிவாக அமைந்து உள்ளது.
படத்தொகுப்பாளர் அருள் மொழி வர்மன் படத்தொகுப்பு அருமையாக உள்ளது.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்தி இசையில் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் சூப்பர்.
வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு மிகவும் அருமையான திரைக்கதை மூலம் சுவாரஸ்யத்துடன் ஜிகிரி தோஸ்து திரைப்படத்தை மிக அருமையாக ஏக்கி இருக்கிறார் இயக்குனர் அரண் வி.
இயக்குனர் அரண் வி முதல் திரைப்படம் என்றாலும் இயக்கத்திலும், நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ஜிகிரி தோஸ்த் திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.











