அதோமுகம் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- எஸ்.பி சித்தார்த், சைதன்ய பிரதாப், அருண் பாண்டியன், அனந்த் நாக், சரித்திரன், ஜே.எஸ்.கவி, வர்கீஸ், பிபின், மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் :- சுனில் தேவ்.
ஒளிப்பதிவாளர் :- அருண் விஜய்குமார்.
படத்தொகுப்பாளர் :- விஷ்ணு விஜயன்.
இசையமைப்பாளர் :- மணிகண்டன் முரளி – சரண் ராகவன்.
தயாரிப்பு நிறுவனம் :- ரீல் பெட்டி புரெடக்ஷனஸ. தரிகோ பிலிம் ஃபிலிம் ஒர்க்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ரீல் பெட்டி புரெடக்ஷனஸ. தரிகோ பிலிம் ஃபிலிம் ஒர்க்ஸ். ஆண்டோ சுஜான் டி.பிரான்சிஸ், வெங்கி நானி.
கதாநாயகன் எஸ்.பி.சித்தார்த், ஊட்டியில் உள்ள டீ எஸ்டேட்டில் மேலாளராக பணியாற்றிக் கொண்டு தன் அன்பு மனைவி கதாநாயகி சைதன்யா பிரதாப்புடன் ஊட்டியில் வசித்து வருகிறார்.
தனது அன்பு மனைவி கதாநாயகி சைதன்யா பிரதாப்க்கு சர்ப்ரைஸ் ஆக ஒரு கிப்ட் கொடுக்க வேண்டும் என அன்பு மனைவி கதாநாயகி சைதன்யா பிரதாப்க்கு தெரியாமல் அவருடைய செல்போனில் ப்ளே ஸ்டோரில் இருந்து ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அவரது அன்பு மனைவி கதாநாயகி சைதன்யா பிரதாப்பின் அழகிய நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை வீடியோவாக உருவாக்கி தனது அன்பு மனைவிக்கு பரிசளிக்க கொடுக்க முடிவு செய்கிறார்.
அதன்பின் கதாநாயகன் எஸ்.பி. சித்தார்த், மனைவியின் செல்போனில் பொருத்தும் ஆப் மூலம் செல்போனை ஹேக் செய்து அவரது நடவடிகைகளை பதிவு செய்யும் போது, அவருடைய அன்பு மனைவியின் நடவடிக்கைகள் அனைத்தும் கதாநாயகன் எஸ்.பி. சித்தார்த்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அதன் பின்னர் எதுவுமே புரியாமல் அன்பு மனைவி கதாநாயகி சைதன்யா பிரதாப்பை பின் தொடரும் கதாநாயகன் எஸ்.பி. சித்தார்த் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கிறது.
அன்பு மனைவி சைதன்யா பிரதாப்பை வைத்து தன்னை சுற்றி பின்னப்பட்டுள்ள சதிவலைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் கதாநாயகன் எஸ்.பி.சித்தார்த், அதில் இருந்து எப்படி தன்னையும், தனது அன்பு மனைவியையும் காப்பாற்றிக் கொள்வதற்கு எப்படி எல்லாம் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
கதாநாயகன் எஸ்.பி.சித்தார்த் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை அடுத்தடுத்த மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது.
இறுதியாக நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய ஆபத்தில் கதாநாயகன் எஸ்.பி.சித்தார்த் சிக்கி கொள்கிறார் அந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து மீண்டாரா? மீளவில்லையா? என்பதுதான் இந்த ‘அதோமுகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அதோமுகம் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக எஸ்.பி. சித்தார்த் நடித்திருக்கிறார்
அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி. சித்தார்த் தமிழ் திரைப்பட துறைக்கு புதுமுக நடிகர் என்றாலும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பலமான பளிச்சிடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
குழந்தை குணம் மாறாத மிக அப்பாவியான கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கதாநாயகன் எஸ்.பி.சித்தார்த்.
மிக குழப்பமான மன நிலையில் கோபமடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பது, அனைத்தும் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல் எதுவும் செய்ய முடியாமல் நிற்பது, என்று கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பின் மூலம் வேறுபாட்டைக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.
இந்த அதோமுகம் திரைப்படத்தில் கதாநாயகியாக சைதன்யா பிரதாப், நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், ஆரம்பத்தில் அப்பாவித்தனமாக நடிப்பு இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார்.
அனைத்துமே தனது அன்பு கணவருக்காகதான் செய்கிறார், என அவர் மீது இறக்கம் ஏற்பட்டாலும், திடீரென அவர் விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகள்
எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது.
கதாநாயகன் எஸ்.பி. சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவருடைய தந்தையாகஸ நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்பு மூலம் அசத்தி இருக்கிறார்கள்.
திரைப்படத்தின் இறுதியில் சிறைச்சாலையில் வரும் அருண்பாண்டியனின் நடிப்பும் கதாபாத்திரமும், அருமையாக வந்து கதாநாயகனுக்கு அதிரடியாக உதவி செய்யும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக பொருந்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார், வழக்கமான ஊட்டி அழகை தவிர்த்துவிட்டு, கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பது கதைக்களத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், அனைத்து அருமையாக உள்ளது.
இசையமைப்பாளர் சரண் ராகவனின் பின்னணி இசையும் நேர்த்தியாக இருக்கிறது.
மிகவும் குறைவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த ஒரு கதைக்களத்தை மிகவும் சுவாரஸ்யமான கதையை எடுத்து கொண்டு திரைக்கதை மூலம் அழகான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ்.
திரைக்கதையின் வேகம் சில இடங்களில் தொய்வடைந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளோடு விவரித்து, திரைப்படத்தை முழுவதையும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கும் இயக்குநர் சுனில் தேவ்க்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில், இந்த ‘அதோமுகம்’ அழகான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த திரைப்படமாக அமைந்துள்ளது.
RATING 4/5.











