அரிமாபட்டி சக்திவேல் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- சார்லி, பவன் கே, மேகனா எலென், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி, சேதுபதி ஜெயசந்திரன், தவசி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரமேஷ் கந்தசாமி.
ஒளிப்பதிவாளர் :- JP மேன்.
படத்தொகுப்பாளர் :- RS. சதிஸ்குமார்.
இசையமைப்பாளர் :- மணி அமுதவன்.
தயாரிப்பு நிறுவனம் :- லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- அஜிஷ் P, பவன் K.
திருச்சிராப்பள்ளி அருகே உள்ள அரிமாபட்டி என்கிற கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்களது கிராமத்துக்கென்று காலாகாலமாக ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த அரிமாபட்டி கிராமத்தில் வசித்து வரும் கதாநயாகன் சக்திவேல் வேறு ஜாதியை சேர்ந்த பள்ளியில் ஆசிரியர் பணியில் இருக்கும் கதாநாயகி மேகனா எலெனை சிறு வயது முதல் காதலித்து வருகிறார்.
கதாநாயகி மேகனா எலெனின் குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புக் தெரிவிக்கின்றனர்.
அரிமாபட்டி என்கிற கிராமத்தில் தங்களது கிராமத்துக்கென்று காலாகாலமாக இருக்கும் கட்டுப்பாட்டையும் மீறி கதாநாயகன் சக்திவேல் கதாநாயகி மேகனா எலெனை நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து செல்கிறார்.
இதன்பின் அரிமாபட்டி கிராமத்தில் கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்த கிராமத்து மக்கள் தங்களது கிராமத்துக்கென்று காலாகாலமாக இருக்கும் கட்டுப்பாட்டையும் மீறி கதாநாயகன் சக்திவேல் கதாநாயகி மேகனா எலெனை காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதலை கிராமத்து மக்கள் ஏற்று கொண்டார்களா? ஏற்றுக்கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த அரிமாபட்டி சக்திவேல் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த அரிமாபட்டி சக்திவேல் திரைப்படத்தில் கதாநாயகனாக பவன் கே நடித்திருக்கிறார்.
கதாநாயகன் பவன் கே தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயற்ச்சித்துள்ளார்.
கதாநாயகன் பவன் கே ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
இந்த அரிமாபட்டி சக்திவேல் திரைப்படத்தில் கதாநாயகியாக மேகனா எலென் நடித்துள்ளார்.
கதாநாயகி மேகனா எலென் தனது விழிகளாலும், புன்னகையாலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வசீகரித்துள்ளார்
கதாநாயகன் பவனு கே தந்தையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி தனது அனுபவ நடிப்பை கொடுத்து சிறப்பாக நடித்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
கதாநாயகன் பவனு கே தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகு அவர்களும் தனது அனுபவ நடிப்பை கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகி மேகனா எலெனின் அண்ணனாக நடித்திருக்கும் பிர்லா போஸ் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றார் போல் குறைவில்லாமல் நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார்.
அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் சிரிப்பு வரவில்லை என்பதுதான் உண்மை.
இந்த அரிமாபட்டி சக்திவேல் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ பி மேன் கிராமத்தின் இயற்கையை அழகையும் ஒளிப்பதிவு மூலம் அருமையாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மணி அமுதவன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்தின் ஓட்டத்திற்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
உண்மை சம்பவம் அடிப்படையில் நடந்த கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.
மொத்தத்தில் “அரிமாபட்டி சத்திவேல்” படம் உண்மை சம்பவத்தில் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.











