‘ஃ’ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.75./5.

நடிகர் & நடிகைகள் :- பிரஜின், ஜெய் ஆகாஷ், ஸ்டாலின், காயத்திரி ரேமா, பருத்திவீரன் வெங்கடேஷ், சரத்ராஜ், வினோத், ராமநாதன், நைரா நிஹார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஸ்டாலின்.வி.

ஒளிப்பதிவாளர் :- தேவ சூர்யா.

படத்தொகுப்பு :- அரவிந்தன் ஆறுமுகம்.

இசையமைப்பாளர் :- சதீஷ் செல்வம்.

தயாரிப்பு நிறுவனம்:- .அம்பிகபதி மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர் :- பொன் செல்வராஜ்.

ரேட்டிங் :- 1.75./ 5.

மாடலிங் துறையில் பல விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கும் கதாநாயகி காயத்திரி ரேமா திரைப்படத்துறையில் திரைப்பட தொகுப்பாளராக இருக்கும் கதாநாயகன் பிரஜினும் காதலித்து வருகிறார்கள்.

பிரபல இயக்குநர் ஸ்டாலினிடம் பஇரஜனின் நண்பர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் தனது காதலி கதாநாயகி காயத்திரி ரேமாவுக்கு உங்களது இயக்குனரிடம் வாய்ப்பு வாய்ப்பு வாங்கித் தருமாறு கதாநாயகன் பிரஜின் தனது நண்பர்களிடம் கேட்கிறார்.

பிரபல இயக்குநர் ஸ்டாலினிடம் அலுவலகத்தில் ஆடிஷனுக்கு கதாநாயகி காயத்ரி ரெமாவை வரவழைத்து இயக்குநர் ஸ்டாலின் கதாநாயகி காயத்ரி ரெமாவை ஆடிஷன் என்ற பெயரில் அலுவலகத்திற்கு வரவைத்து கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்து விடுகிறார் இயக்குநர் ஸ்டாலின்.

பிரபல இயக்குநர் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்த உதவி இயக்குநர்கள் நான்கு பேரும் அந்த சம்பவத்திற்குப் பார்த்த பிறகு தலைமறைவாகி விடுகிறார்கள்.

கதாநாயகி காயத்ரி ரெமாவின் காதலனான கதாநாயகன் நாயகன் பிரஜின், தனது காதலி கற்பழிக்கப்பட்டு கொலை செய்த இயக்குநர் ஸ்டாலினை தேடி பழிவாங்குவதற்கு செல்லும் போது, இயக்குனர் ஸ்டாலின் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

தலைமறைவாக இருக்கும் உதவி இயக்குநர்களை கதாநாயகன் பிரஜின் தேடி செல்லும் போது அவர்களும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அந்த கொலைக்கான பழி அனைத்தும் கதாநாயகன் பிரஜின் மீது சுமத்தப்படுகிறது.

இதனால் அவரை போலீஸ் தேடுகிறது. பிரஜின் சந்திக்க செல்பவர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவதற்கான பின்னணி என்ன? அவர்களை கொலை செய்வது யார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இந்த ஃ திரைப்படத்தில் பஇரஜனின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் பிரஜின் ஒரு சில காட்சிகள் தலை காட்டுவதோடு, கொடுத்த வேலை குறைவாக இருந்தாலும் அதை மனதுக்கு நிறைவாக கொடுத்திருக்கிறார்

இந்த ஃ திரைப்படத்தில் வில்லனாக இயக்குநர் ருத்ரன் கதாபாத்திரத்தில் இயக்குநர் ஸ்டாலின், மிகவும் அருமையாக சைக்கோ வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்த ஃ திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி ரெமா, நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, கம்மியான காட்சிகள் வந்தாலும் தனது பணியை மிக சரியாக செய்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பருத்திவீரன் வெங்கடேஷின் நடிப்பு கம்பீரமாக இருக்கிறது.

K.P.Y வினோத், ஏழாம் அறிவு இராமநாதன், தயாளன், K.P.Y. சரத்ராஜ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தேவசூர்யாவின் ஒளிப்பதிவும், சிறப்பு.

இசையமைப்பாளர் சதீஷ் செல்வத்தின் இசையும் மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

க்ரைம் திரில்லர் ஜானர் கதையை திகில் கலந்து கொடுத்திருக்கும் இயக்குநர் ஸ்டாலின், திரைக்கதையில் அதிகளவில் கவனம் செலுத்தி இருந்தால் மிகவும் அருமையான திரைப்படமாக அமைந்திருக்கும்.

க்ரைம் த்ரில்லருடன் திகிலை சேர்த்து கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கிய முறை படு மட்டமாகவும் பல குறைகள் நிறைந்தவையாகவும் இந்த ஃ திரைப்படம் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், ‘ஃ’ திரைப்படம் மக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது.

error: Content is protected !!