ரூபன் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விஜய் பிரசாத், காயத்ரி ரேமா, சார்லி, ராமர், கரூர் இளங் கார்த்தியன், ஆறுமுகம் காளியப்பன், ராஜா மனோகரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அய்யப்பன்.

ஒளிப்பதிவாளர் :-  ராஜீவ் ராஜேந்திரன்.

படத்தொகுப்பாளர் :- ராம்நாத்.

இசையமைப்பாளர் :- அரவிந்த் பாபு.

தயாரிப்பு நிறுவனம் :- ஏகேஆர் பியூச்சர் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கே.ஆறுமுகம், இளங்கார்த்திகேயன், எம்.ராஜா.

வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் தேன் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்டு இருக்கிறார்கள்.

கதாநாயகன் விஜய் பிரசாத், கதாநாயகி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை இல்லாததால் ஊர் மக்கள் அனைவரும் அவர்களை அவமதிப்பதோடு, அவர்களை கிராமத்து விட்டு எந்த ஒரு நல்லது கெட்டது விஷயத்திற்கும் அழைக்காமல் அவர்களை ஒதுக்கியும் வைக்கிறார்கள்.

கதாநாயகன் விஜய் பிரசாத், தேன் எடுப்பதற்காக நடுகாட்டுக்கு செல்லும் போது அங்கு ஒரு பச்சிளம் குழந்தையை காட்டில் கிடப்பதை காண்கிறார்.

நடுக்காட்டிற்கு இந்த குழந்தை எப்படி வந்தது!, என்று ஆச்சரியப்படும், அவர் அந்த குழந்தையை நமது வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க்க ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையே, காட்டுக்குள் சென்று யானை, புலி போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும் வில்லன் கோஷ்ட்டியினர் குற்ற செயல்கள் பற்றி அறிந்து கொள்ளும் கதாநாயகன் விஜய் பிரசாத், அவர்கள் செய்யும் குற்ற செயல்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆனால், வில்லன் கோஷ்டியினர் தாங்கள் செய்யும் காட்டுக்குள் விலங்குகளை வேட்டையாடும் தவறுகளை கதாநாயகன் விஜய் பிரசாத் மீது போட, அந்த கிராமத்து மக்களும் இத்தகைய குற்றங்களை விஜய் பிரசாத் தான் செய்கிறார் என நம்புகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலைப்போடும் கார்த்திகை மாதம் வர, அந்த கிராமத்தில் உள்ள மக்களுடன் கதாநாயகன் விஜய் பிரசாத் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார்.

கதாநாயகன் விஜய் பிரசாத் சபரிமலைக்கு மாலை போடுவதை கிராமத்து மக்கள் மாலை போடக்கூடாது என தடுக்க, கதாநாயகன் விஜய் பிரசாத் மற்றும் அவரது மகனும் தனியாக மாலை போட்டு சபரிமலை செல்ல முடிவு செய்கிறார்கள்.

கிராமத்துக்குள் புலி நடமாட்டம் இருப்பதாக கூறி, கிராம மக்களின் சபரி மலை செல்வதற்கு வனத்துறை அதிகாரிகள் தடை விதிக்கிறார்கள்.

இந்த நேரத்தில், நடுகாட்டுக்குள் வில்லன் கோஷ்டியை சேர்ந்த சிலர் மர்மமான முறையில் இறந்துக்கிடக்க, அவர்களை புலி தான் கொன்றுவிட்டதாக நம்பும் வனத்துறை அதிகாரிகள் மர்ம மரணங்களுக்கு கதாநாயகன் விஜய் பிரசாத் தான் காரணம் என்று கிராமத்து மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கிராம மக்களின் குற்றச்சாட்டில் இருந்து கதாநாயகன் விஜய் பிரசாத் விடுபட்டாரா? விடுபடவில்லையா?, காட்டுக்குள் வில்லன் கொஸ்டின் சேர்ந்த சிலர் மர்மமான முறையில் இறந்த கிடந்ததற்கு பின்னணி என்ன? என்பதுதான் இந்த ரூபன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ரூபன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக விஜய் பிரசாத் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் பிரசாத் ஆக்சன் செண்டிமெண்ட் பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அவர் சபரிமலைக்கு மாலைபோட்டு ஐயப்ப கடவுளை பிரார்த்திக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

இந்த ரூபன் திரைப்படத்தில் கதையின் நாயகியாக காயத்ரி ரெமா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார்.

உனக்கு குழந்தை இல்லை என்ற பிரச்சனையால் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படும்  காட்சிகளில் அவர் கலங்குவது, ரசிகர்களையும் கண் கலங்க வைத்துவிடுகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லியின் அனுபவமான நடிப்பு திரைப்படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

கஞ்சா கருப்பு உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு பசுமையின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு மட்டுமே மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படத்தை வாழ வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் படியாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் அரவிந்த் பாபுவின் பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு வீடு கொடுத்திருக்கிறார்.

கிராபிக்ஸ் காட்சிகளின் மிகப்பெரிய அளவில் கதைக்கு உயிர் கொடுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

ஒரு கதையை கமர்ஷியலாகவும், ஃபேண்டஸியாகவும் சொல்லியிருப்பதோடு, அதில் சிறிதளவு ஆன்மீகத்தையும் சேர்த்து சொல்லி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கான ரசிக்கும்படியான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன்.

எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்திருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி சுமார் 20 நிமிட காட்சிகள் வருகிறது.

அந்த 20 நிமிட காட்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் இந்த ‘ரூபன்’ திரைப்படம் விஸ்வரூப வெற்றி.

ரேட்டிங் 3.25./5.

error: Content is protected !!