எப்போதும் ராஜா பாகம் 1 திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- வின் ஸ்டார் விஜய், டெப்லினா, கும்தாஷ், ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன் குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எச் முருகன்.

ஒளிப்பதிவாளர் :- பகவதி பாலா.

படத்தொகுப்பாளர் :- ஜிபின்

இசையமைப்பாளர் :- கபிலேஷ்வர் – ராம்ஜி.

தயாரிப்பு நிறுவனம் :- கிரீன் சேனல் மூவிஸ்.

தயாரிப்பாளர் :- எச் முருகன்.

 

தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார், குளோபல் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார், பவர் ஸ்டார் பப்ளிக் ஸ்டார், என பலவிதமான ஸ்டார்கள் மத்தியில் தற்போது இந்த எப்போதும் ராஜா திரைப்படத்தின் மூலம், வின் ஸ்டார் என்ற பட்டத்துடன் கதாநாயாகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வின் ஸ்டார் விஜய் தமிழ் திரைப்பட உலகில் தற்போது அறிமுகம் ஆகி இருக்கிறார்.

தன் முதல் திரைப்படத்திலேயே கதாநாயகன் வின் ஸ்டார் விஜய் இரட்டை சகோதரர்களாக அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அண்ணன் காவல்துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையான காவல்துறை ஆய்வாளரான அண்ணனுக்கு காவல்துறையில் நேர்மையாக இருப்பதால் ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள்.

தம்பி வாலிபால் விளையாட்டு வீரராக விளையாட்டில் சாதிக்க துடிக்கும் தம்பிக்கும் பல எதிரிகள் இருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியான வின்ஸ்டார் விஜய்க்கும் தம்பி கால் பந்து விளையாட்டு வீரர் இருவரும் தங்களுடைய எதிரிகளால், அவர்களால் வரும் பிரச்சனைகள் மற்றும் சோதனைகளையும் எதிர்த்து தங்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார்களா? சாதிக்க வில்லையா?, என்பதுதான் இந்த ‘எப்போதும் ராஜா – பாகம் 1’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த எப்போதும் ராஜா பாகம் 01 திரைப்படத்தில் கதாநாயகனாக வின்ஸ்டார் விஜய் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

கதாநாயகன் வின்ஸ்டார் விஜய் தனது முதல் திரைப்படத்திலேயே காவல்துறை அதிகாரியாகவும் மற்றும் விளையாட்டு வீரராகவும் இரண்டு விதமான கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கிறார்.

வின்ஸ்டார் விஜயின், நடிப்பில் காதல், கோபம், சோகம், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் அசால்டாக நடிப்பை வெளிப்படுத்தி அதகளப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகன் வின்ஸ்டார் விஜய் நடிப்பது தான் நடிப்பு, என அவர் இஷ்ட்டத்துக்கு நடித்திருந்தாலும், ரசிகர்களை கவுண்டமணி செந்தில் வடிவேலு சந்தானம் யோகி பாபு நடித்த திரைப்படங்களில் பார்த்து வராத சிரிப்பு இந்த எப்போதும் ராஜா திரைப்படத்தில் இரண்டு மணி நேரம் தங்களது கவலைகளை மறந்து வின்ஸ்டார் விஜய் தனது நடிப்பின் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் டெப்ளினா, வில்லியாக நடித்திருக்கும் கும்தாஸ், மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா மற்றும் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பகவதி பாலா ஒளிப்பதிவு மிகவும் மட்டமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பகவதி பாலா கேமரா மட்டும் இன்றி தன் கையில் உள்ள செல்போனில் கூட சில காட்சிகளை படமாக்கியிருப்பார் போல, அந்த அளவுக்கு காட்சிகளின் தரம் மிகவும் மட்டமாக இருக்கிறது.

இசையமைப்பாளர்கள் கபிலேஷ்வர் – ராம்ஜி கதைக்கு ஏற்றவாறு பயணிக்காமல் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை போல் மிகவும் கேவலமாக வாசித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் வின் ஸ்டார் விஜய், திரைப்பட ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக வஞ்சனை இல்லாமல் செய்து ரசிகர்களை வயிறு வலிக்கு சிரிக்க வைத்திருக்கிறார்..

அதே சமயம், சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பல துடிப்பான வசனங்களை பேசி கைதட்டலும் பெறுகிறார்.

மொத்தத்தில் எப்போதும் ராஜா பாகம் 1 திரைப்படம் இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து ஜாலியாக இருக்க வேண்டுமானால் தாராளமாக பார்க்கலாம்.

error: Content is protected !!