நந்திவர்மன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5/5.

நடிகர் & நடிகைகள் :- சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜி.வி. பெருமாள் வரதன்.

ஒளிப்பதிவாளர் :- ஆர. வி.சேயோன் முத்து.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- ஜெரார்ட் பெலிக்ஸ்.

தயாரிப்பு நிறுவனம்:- ஏகே பிலிம் பேக்டரி.

தயாரிப்பாளர் :- அருண்குமார் தனசேகரன்.

ரேட்டிங் :- 3.5/ 5.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், என்ற மன்னன் செஞ்சி பகுதியில் உள்ள அனுமந்தபுரம் என்னும் கிராமத்தில் நந்திவர்மன் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் மிகப்பெரிய அளவில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது.

அதன்படி, தொல்லியல் துறையை சேர்ந்த பேராசிரியர் நிழல்கள் ரவி, மற்றும் தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அனுமந்தபுரம் என்னும் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள கிளம்புகிறார்கள்.

ஆனால், அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்கும் அந்த ஊர் மக்கள் தடையாக
நிற்கிறார்கள்.

பிறகு ஊர் கிராமத்து மக்களை எப்படியோ சமாதானப்படுத்தி அந்த இடத்தில் தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞரும் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் உள்ள இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார்.

இந்த இரண்டு கொலைகள் பற்றி விசாரிக்க காவல்துறை அதிகாரியான கதாநாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மமான முறையில் கொலை நடப்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இறுதியில் காவல்துறை அதிகாரி கதாநாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் கொலைகளை கண்டுப் பிடித்தாரா? கண்டுப் பிடிக்கவில்லையா? மண்ணில் புதைந்து கிடக்கும் நந்திவர்மன் கட்டிய சிவன் கோவிலையும், புதையலையும் தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஆய்வு மேற்கொண்ட குழுவினர் கண்டுப்பிடித்தார்களா? கண்டுப்பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நந்திவர்மன் திரைப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் ரவி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு காவல்துறை காக்கி உடையும் அவருடைய கம்பீரமான நடையும் மிகவும் அருமையாக கன கச்சிதமாகவும் பொருந்தி இருக்கிறார்.

காதல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் மிக மிக யதார்த்தமாக நடித்து உள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் ஒவ்வொரு திரைப்படத்திற்கான கதை களத்தையும் தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

அப்படிப்பட்ட வகையில், கதைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த நந்திவர்மன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, மிரட்டலாகவும் நடித்திருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து, தன்னை முழுமையான கதாநாயகன் என தமிழ் திரைப்பட உலகில் நிரூபித்திருக்கிறார்.

இந்த நந்திவர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆஷா வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷுக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ், ஒரு சில காட்சிகளில் முகபாவங்கள் மூலமாகவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விடுகிறார்.

போஸ் வெங்கட்டின் கதாபாத்திரமும் அவரது அனுபவ நடிப்பும் திரைப்படத்திற்கு பெரிய மிகப்பெரிய பலம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

தொல்லியல் துறையை சேர்ந்த பேராசிரியர் வரும் நிழல்கள் ரவி, மற்றும் ஊர் தலைவராக வரும் கஜராஜ், காவல்துறை அதிகாரியாக வரும் மீசை ராஜேந்திரன், ஜேசிபி இயந்திரம் ஓட்டும் ஓட்டுனராக வரும் ஆடுகளம் முருகதாஸ், ஜேசிபி இயந்திரம் ஓட்டும் உதவியாளராக வரும் அம்பானி சங்கர், அந்த ஊரில் மிகப்பெரிய குடிகாரனாக வரும் கோதண்டம், காவல்துறை ஆணையராக வரும் ஜே.எஸ்.கே.கோபி, அனைவரும் மிகவும் சிறப்பாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து எளிமையான லொக்கேஷன்களை கூட மிகப்பெரிய அளவில் பயங்கரமாக ஒளிப்பதிவு மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து பழங்காலத்து கோவில்களையும், மலைப் பகுதிகளையும் காட்சிப்படுத்திய விதமும் சாதாரண இடங்களை கூட மிகவும் அழகாக காண்பித்து இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் படத்தொகுப்பு மிகவும் சிறப்பு.

இசையமைப்பாளர் ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.

இசையமைப்பாளர் ஜெரால்டு ஃபிலிக்ஸ் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் புதைந்து கிடக்கும் வரலாற்றை சொல்லும் பல ஆதாரங்கள் இன்னமும் தமிழ்நாட்டில் புதைந்திருக்கிறது, என்ற உண்மையை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பெருமாள் வரதன், அதை வசனங்களாக மட்டும் இல்லாமல் காட்சி மூலம் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.

பல அறிய தகவல்களுடன், கதையை மிக நேர்த்தியாக சொல்லி இரண்டு மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போடும் மாயாஜாலத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன் மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘நந்திவர்மன்’ திரைப்படம் கண்டிப்பாக திரைப்பட ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்.