விராயி மக்கள் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ராம, செந்தில் குமாரி, ஜெரால்ட் மில்டன், பாண்டி அக்கா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நாகராஜ் கருப்பையா.
ஒளிப்பதிவாளர் :- எம்.சீனிவாசன்.
படத்தொகுப்பாளர் :- முகன் வேல்.
இசையமைப்பாளர் :- தீபன் சக்ரவர்த்தி.
தயாரிப்பு நிறுவனம் :- ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- சுரேஷ் நந்தா.
ரேட்டிங் :- 3.5/5.
விராயிக்கு முன்று மகன்கள் ஒரு மகள் வீட்டுக்கு மூத்த மகன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் இளைய தம்பி ஜெரால்டு மில்டன் மகள் தீபா சங்கர் சொத்து பிரச்சனை காரணமாக நால்வரும் புரிந்து விடுகிறார்கள்.
வேலராமூர்த்தி ரமா சுரேஷ் நந்தா ஒரு குடும்பமாகவும் மாரிமுத்து செந்தி இவர்கள் ஒரு குடும்பமாகவும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டில் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதோடு, பகை வளர்த்துக் கொண்டும் வாழ்கிறார்கள்.
அது ஒரு பக்கம் இருக்க தனது அத்தை தீபா சங்கர் மகளை காதலிக்கிறார் கதாநாயகன் சுரேஷ் நந்தா.
இவர்களின் தாய் தந்தை போலவே இவர்களுடைய பிள்ளைகளும் பகை உணர்வோடு இருக்க, இந்த நிலையை மாற்றி அனைத்து சொந்தங்களும் தனது திருமணத்திலாவது அனைத்து குடும்பங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என வேல ராமமூர்த்தியின் இளைய மகன் கதாநாயகன் சுரேஷ் நந்தா முயற்சி செய்கிறார்.
கதாநாயகன் சுரேஷ் நந்தாவின் முயற்சியினால் பிரிந்த அண்ணன் தம்பி தங்கை அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா?, ஒன்று சேரவில்லையா ?, என்பதுதான் ‘வீராயி மக்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும் கரகரப்பான குரலிலும் நடித்திருந்தாலும், உடன் பிறந்த சகோதரன் சகோதரிக்காக வாழும் பாசக்கார அண்ணன் என்ற மற்றொரு பரிணாமத்தில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை வென்று விடுகிறார்.
வேல ராமமூர்த்தியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை நடிப்பின் மூலம் நிலை நிறுத்தியிருக்கிறார்.
கோபத்தை வெளிக்காட்டுவதாக இருந்தாலும் சரி,தன் சொந்தங்களை உதறி தள்ளும் காட்சிகளாக இருந்தாலும் சரி, அத்தனை இடங்களையும் தனது இயல்பான நடிப்பு மூலம் சர்வசாதாரணமாக நடித்திருக்கிறார்.
இந்த விராயி மக்கள் திரைப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் நந்தா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, கதையின் நாயகனாக காட்சிகளுக்கு எது தேவையோ அதை மட்டுமே நடிப்பின் மூலம் மிகவும் அளவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த வீராயி மக்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக நந்தனா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிராமத்து கதைக்கு ஏற்ற முகமாக அமைந்துள்ளது.
காதல் காட்சிகளில் கதாநாயகன் சுரேஷ் நந்தாவிற்க்கு இணையாக நடிப்பில் போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்.
அண்ணன் குடும்ப பாசத்திற்காக ஏங்கும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம் போல் அதிக அளவில் நடித்துள்ளார்.
மாரிமுத்துவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தி குமாரி, தன் கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக வாழவே கூடாது ஒற்றுமையாக இருக்கவே கூடாது, என சபதம் எடுக்கும் செந்தி குமாரி த னது
நடிப்பின் மூலம் கொடுத்த கதாபாத்திரத்தை மிக அருமையாக கதாபாத்திரமாகவே பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு அளவாக இருந்தாலும், மேக்கப் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள், ஊர் மக்களாக வருபவர்களும் மண்ணின் மனிதர்களாக மிக அருமையாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு மூலம் எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையையும், அம்மக்களின் உணர்வுகளையும் மிக அருமையாக படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்களில் அனைத்து மண் மணம் மாறாமல் அனைத்து பாடல்களும் புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும் வகையில் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இயக்குநர் நாகராஜ் கருப்பையா, பிரிந்த அண்ணன் தம்பி தங்கை உறவுகளை படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களையும் நினைத்து பார்க்க வைத்திருக்கிறார்.
குடும்பங்கள் என்றால் பிரச்சனைகளும், பிரிவுகளும் இருப்பது சகஜம் என்றாலும், உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியும் எத்தகையது, என்பதை மக்கள் மனங்களுக்கு மண் மனம் மாறாமல் புரிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘வீராயி மக்கள்’ திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள்.











