ஹரா திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- மோகன், அனு மோல், யோகி பாபு, சாருக்ஹாசன், சுரேஷ் மேனன், பழ கருப்பையா, வனிதா விஜயகுமார், அனிதா நாயர், சாமஸ், கவுஷிக் ராம், ஸ்வாதி , விஸ்வநாதன், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, தீபா, மைம் கோபி, சந்தோஷ் பிரபாகர், சாய் தீனா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விஜய் ஶ்ரீ. ஜி

ஒளிப்பதிவாளர்கள் :- பிரகாத் முனுசாமி, மனோ தினகரன்,
மற்றும் மோகன் குமார்.

படத்தொகுப்பாளர் :- குணா.

இசையமைப்பாளர் :- இரசாந்த் ஆர்வின்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜே.எம் புரோடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- கோவை S P மோகன் ராஜ், ஜெயஶ்ரீ விஜய்.

ரேட்டிங் :- 1.75/5.

கதாநாயகன் மோகன், மற்றும் மனைவி அனுமோல் மகள் ஸ்வாதி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் மோகன் தனது மகள் ஸ்வாதி மீது அதிகளவில் மிகவும் அன்போடு இருக்கிறார்.

கதாநாயகன் மோகன் மகள் ஸ்வாதி கல்லூரியில் படித்து வரும் ஒரு நாள் இரவு தன் தந்தை கதாநாயகன் மோகனுக்கு போன் செய்து விட்டு நான் தப்பு செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

தன் மகள் இறந்த காரணத்தால் மனதளவில் பாதிக்கப்படும் கதாநாயகன் மோகன் தன் மகளின் இறப்புக்கான காரணத்தை தேடும் இந்த தேடுதலில் பல திடுக்கிடும் தகவல்கள் கதாநாயகன் மோகனுக்கு கிடைக்கிறது.

இறுதியில் தன் மகள் ஸ்வாதி இறப்புக்கான காரணத்தை கதாநாயகன் மோகன் கண்டு பிடித்தாரா? கண்டுப் பிடிக்க்வில்லையா? என்பதுதான் இந்த ஹரா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஹரா திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன் நடித்திருக்கிறார்.

இந்த ஹரா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் மோகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவரது எதார்த்தமாக அனுபவ நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

கதாநாயகன் மோகனுக்கு மனைவியாக வரும் அனுமோல் மகளை இழந்து தவிக்கும் தாயாக நடித்து உருகவைத்து விட்டார்.

குறிப்பாக அனு மோல் தன் மகளுக்காக ஏங்கும் காட்சிகளில் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகன் மோகன் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வாதி கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்.

கதாநாயகன் மோகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிதா நாயர் நடிப்பை விட ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து செய்து இருக்கிறார்.

அனிதா நாயர் காதலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவுஷிக் ராமும்  சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் மோகனின் மகளின் காதலனாக வரும் சந்தோஷ் பிரபாகரனுக்கும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

வக்கீலாக வரும் யோகி பாபு, மற்றும் தாதாவாக வரும்ஸசாருக்ஹாசன், வில்லன் நாக வரும் சுரேஷ் மேனன், அரசியல்வாதியாக வரும் பழ கருப்பையா, வனிதா விஜயகுமார், கல்லூரி வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் வரும் சாமஸ், விஸ்வநாதன், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, தீபா, மைம் கோபி, சாய் தீனா, அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பிரகாத் முனுசாமி மனோ தினகரன், மோகன் குமார், ஆகியோரின் ஒளிப்பதிவு மூலம் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் இரசாந்த் ஆர்வின் இசையில் தந்தை மகள் பாடல் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் இரசாந்த் ஆர்வின் பின்னணி இசை காட்சிக்கு ஏற்றவாறு பயணித்து இருந்தாலும், ஒரு சில காட்சிகளில் இரைச்சல் ஆன பின்னணி இசையை கொடுத்து இருக்கிறார்.

தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை தேடி பழிவாங்கும் தந்தையின் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி.

ஆனால், இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி தேவையில்லாமல் கதை திரைக்கதையில் போலி மருந்து, கலப்படம் மருந்து என்று திசை மாறி சொல்லாமல் தந்தை மகள் கதையில் நேர்கோட்டில் சென்று இருந்தால் மிகவும் அருமையாக அமைந்திருக்கும்.

இயக்குனர் கதை மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம் அப்படி கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி திரைப்படம் ஆக அமைந்திருக்கும்.

சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் மேனன், மைம் கோபி, வனிதா விஜயகுமார், சிங்கம் புலி ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பை இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி வீணடித்து இருக்கிறார்.

இந்த ஹரா திரைப்படத்தில் வரும் எந்த ஒரு காட்சியும் மனதில் பதியாதது வருத்தம்.

மொத்தத்தில், இந்த ‘ஹரா’ திரைப்படம் சுமாராக உள்ளது.