பயமறியா பிரம்மை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- ஜே டி ஜெகதீஷ் குருசோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ருத், விஷ்வாந்த், ஹரிஷ் ராஜூ, ஜாக் ராபின், வினோத் சாகர் ஏ.கே, திவ்யா கணேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராகுல் கபாலி.
ஒளிப்பதிவாளர்கள் :- பிரவின் & நந்தா.
படத்தொகுப்பாளர் :- அகிள்.
இசையமைப்பாளர் :- கே.
தயாரிப்பு நிறுவனம் :- 69 எம்.எம்.ஃபிலிம்.
தயாரிப்பாளர்கள் :- ஜெகதீஷ் & ராகுல் கபாலி.
ரேட்டிங் :- 3./5.
சிறை சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக பத்திரிக்கையாளர் வினோத் சாகர் சிறை சாலையில் அவரை சந்தித்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி உரையாடுகிறார்.
சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ்க்கும் பத்திரிக்கையாளர் வினோத் சாகர் இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என பத்திரிக்கையாளர் வினோத் சாகர் கூறுகிறார்.
அது எப்படி நடக்கும்? என கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ் கேட்க ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக மாறி இருப்பது தான் இந்த ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் மீதி கதை.
இந்த பயமறியா பிரம்மை திரைப்படத்தில் ஜே.டி ஜெகதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஜே.டி.ஜெகதீஷ் என்றாலும், ஜே.டி.ஜெகதீஷ் மற்றும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜே.டி ஜெகதீஷ் கதாபாத்திரமாக உருமாறி நடித்திருக்கிறார்கள்.
மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராட்சசன் வினோத் சாகர், ஜே.டி.ஜெகதீஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என இந்த பயமறியா பிரம்மை திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது வேலை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் பிரவின் மற்றும் நந்தா ஒளிப்பதிவின் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் பிரவின் மற்றும் நந்தா இருவருடைய ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் கலர் கரெக்ஷன் அனைத்தும் ஒரிஜினலாக மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே -வின் இசையும் பாடல்களும் பிண்ணனி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
ஒரு கதையை புத்தகமாக பதிவு செய்வார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு புத்தகத்தை கதையாக வித்தியாசமான திரைக்கதையை அமைத்து, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைத்தவர் அதை புரியும் படியாக பதிவு செய்திருக்கலாம் இயக்குனர் ராகுல் கபாலி அவர்களே.
மொத்தத்தில் – இந்த ‘பயமறியா பிரம்மை’ திரைப்படம் புதிய அனுபவமாக இருக்கும்.