வா வரலாம் வா திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./5

நடிகர் & நடிகைகள் :- பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம்” கோபி ரெடின் கிங்ஸ்லீ, சரவண சுப்பையா, தீபா சங்கர், வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத் , கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர், மற்றும் பலர்,

எழுத்து & இயக்கம் :- எல்.ஜி. ரவிசந்தர் –எஸ்.பி.ஆர்

ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் ராஜா.

படத்தொகுப்பாளர் :- ராஜா முகமது.

இசையமைப்பாளர் :- தேனிசை தென்றல் தேவா.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ். ஜி. எஸ். கிரியேட்டிவ் மீடியா.

தயாரிப்பாளர்கள் :- எஸ்.பி. ஆர்.

ரேட்டிங் :- 3./ 5.

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளைச் சந்தித்தபோது ஆகிய திரைப்படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் வா வரலாம் வா திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

வறுமையின் சூழ்நிலையால் தாய் தந்தையை இழந்து சிறுவயதிலேயே கதாநாயகன் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர் ரெடின் கிங்ஸ்லீ, சிறைக்கு சென்று இருவரும் இளைஞர்களாக சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாகவும் ஆடம்பரமாகவும் வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருட்டு கொள்ளை ஆகிய செயல்களையும் சர்வ சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள்.

வெகுவிரைவில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என ஆசையில் பேருந்து ஒன்றை கடத்துகிறார்கள்.

அந்த பேருந்தில் நற்பது குழந்தைகளும் இரண்டு இரண்டு கதாநாயகிகள் மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, இருக்க, பேருந்தில் உள்ள குழந்தைகளை வைத்து எப்படியாவது பணம் பறிக்க இருவரும் பெரும் திட்டம் தீட்டுகிறார்கள்.

இதனிடையே காதல், பாசம், பரிவு
கதாநாயகன் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர் ரெடின் கிங்ஸ்லீ, கதாநாயகிகள் மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா இரண்டு கதாநாயகிகள் மீது காதல் அழிப்பது போல் ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு கதாநாயகிகளை குறி வைக்கும் வில்லன் மைம் கோபியின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன? இந்த இரண்டு கதாநாயகிகள் மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா யார்? அந்தப் பேருந்தில் இருக்கும் 40 குழந்தைகள் யார்? பேருந்தை கடத்தி கதாநாயகன் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர் ரெடின் கிங்ஸ்லீ, பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? கதாநாயகன் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர் ரெடின் கிங்ஸ்லீ, கதாநாயகிகள் மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா இவர்களின் காதல் நிறைவேறியதா? நிறைவேற வில்லையா? காணாமல் போன பேருந்தையும் ன அதில் உள்ள நற்பது குழந்தைகள் காவல்துறையினர் காப்பாற்றினார்களா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த வரலாம் வா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வா வரலாம் வா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் நடிப்பு ஆக்சன் நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகன் பாலாஜி முருகதாஸை தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.

இத வா வரலாம் வா திரைப்படத்தில் கதாநாயகியாக
மஹானா சஞ்சீவி எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் கதாநாயகி மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார்.

கதாநாயகி மஹானா சஞ்சீவி நடிப்பு நடனம் அனைத்திலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக காயத்ரி ரேமா மிக அருமையாக நடத்தி இருக்கிறார்.

வில்லனாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “மைம்” கோபி , கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லீ காவல்துறை இன்வெஸ்டிகேஷன் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ,சரவண சுப்பையா, கடத்தப்பட்ட குழந்தைகளின் ஆயாவாக தீபா சங்கர், வையாபுரி, வாசு விக்ரம், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், மயில் கோபி உதவியாளராக வரும் யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் இப்படத்தில் நற்பது குழந்தை அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவின் மூலம் திரைக்கதைக்கு ஏற்றவாறு படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா.

படத்தொகுப்பாளர் ராஜா முகமது படத்தொகுப்பு காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

சாதாரணமா ஒரு கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அருமையான திரைக்கதையின் மூலம் இவ்வளவு நட்சத்திர பட்டாளங்களை வைத்து கொண்டு காமெடி திரைப்படம் ஆக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் எல்.ஜி. ரவிசந்தர்.

மொத்தத்தில் இந்த வா வரலாம் வா திரைப்படம் ரசிகர்களை குடும்பத்தோடு வந்து சிரித்து மகிழலாம்.

error: Content is protected !!