கொட்டுக் காளி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சூரி, அன்னா பென், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பி.எஸ். வினோத்ராஜ்.

ஒளிப்பதிவாளர் :- சக்தி

படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா

இசையமைப்பாளர் :- No

தயாரிப்பு நிறுவனம் :- எஸ் கே புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- சிவகார்த்திகேயன்.

ரேட்டிங் :- 4./5.

தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி தற்போது தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய முக்கிய நாயகனாக உயர்ந்துள்ள நிலையில் தமிழக மக்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை முதல் பாகம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரி  கதாநாயகனாக தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அதன்ப்பிறகு விடுதலை முதல் பாகம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் திரைப்படத்தில் மக்கள் கொண்டாடும் கதாநாயகனாக  அசத்தியிருந்தார்.

மக்கள் மனதை தொடும் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி.

உலக திரைப்பட விழாவான பெர்லின் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் பார்வைக்கு வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்த உள்ளூர் சினிமாவை உலக தர சினிமாவுக்கு கொண்டு சென்ற திரைப்படம் கொட்டுக்காளி திரைப்பட குழுவினருக்கும் இதில் நடித்த சூரி அன்னாபெல்  நடிகர்களுக்கும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் மூவி விங்ஸ் இணையத்தளம் சார்பில் மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கதாநாயகி அன்னாபென் ஆசைக்காக குடும்பத்தின் ஆட்சேபனையையும் மீறி அவரை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்க அனுமதிக்கிறார் கதாநாயகன் சூரி .

கதாநாயகி அன்னாபென் பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட நிலையில் கதாநாயகன் சூரிக்கும் கதாநாயகி அன்னாபென் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஆசைப்படுகிறார்கள்,

கதாநாயகன் சூரி கதாநாயகி அன்னாபென் மீது அளவுக்கடந்த காதலும் வைத்திருக்கிறார்.

கதாநாயகி அன்னாபென் படிக்க சென்ற இடத்தில் வேறு சாதி பையன் ஒருவரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் கதாநாயகி அன்னாபென்  பேய் பிடித்து விடுகிறது.

இந்நிலையில் கதாநாயகி அன்னாபென் மீது பிடித்திருக்கும் பேய்யை விரட்டுவதற்கு குலசாமி கோவிலுக்கும் பேய் விரட்டும் சாமியாரை தேடி செல்ல அவள் உடனே கதாநாயகன் சூரியன் செல்கிறார்.

முதலில் குல சாமி கோவிலுக்கு சென்று விட்டு பேய் விரட்டும் சாமியாரிடம் கதாநாயகி அன்னாபென் அழைத்துச் செல்கிறார்கள்.

விடியற்காலை கோவிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு கதாநாயகி அன்னாபென் நெற்றியில் விபூதியை வைத்து ஆட்டோவில் ஏறி சாமியாரிடம் செல்லும் இந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? கதாநாயகி அண்ணா பென் பேய் விரட்டினர்களா? விரட்ட வில்லையா? என்பதுதான் இந்த கொட்டு காளி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கொட்டுக்காளி திரைப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

இந்த கொட்டுக்காளி திரைப்படத்தில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி இந்த கிராமத்தில் உள்ள பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார்.

கதையின் நாயகனாக ’விடுதலை’, ’கருடன்’ திரைப்படங்களில் நடித்த சூரிக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் நடித்த சூரிக்கும் மலையளவு வித்தியாசம். நடிப்பில் அடுத்த பாய்ச்சலைக் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த கொட்டு காளி திரைப்படத்தில் கதையின் நாயகியாக அன்னாபென் நடித்துள்ளார்.

இந்த கொட்டுக்காளி திரைப்படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகிஅன்னாபென் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மீனாவாக கதாபாத்திரத்தில் அன்னா பென் பேசாமலேயே தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்திருக்கிறார்.

அன்னாபென் தவிர்த்து திரைப்படத்தில் சூரியின் தங்கைகள், அப்பா, மாமா, அத்தை மட்டும் சூரியன் நண்பர்கள் என அனைவரின் கதாபாத்திரங்களும் மிகவும் பொருத்தமாக பொருந்திப் போகிறது.

ஒளிப்பதிவாளர் சக்திவேலின் ஒளிப்பதிவு மூலம் கவிதையாக ஒவ்வொரு காட்சியிலும் ஒரு விஷயத்தை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு உணர்த்துகிறது.

இந்த கொட்டுக்காளி திரைப்படத்தில் இசை என்பதே இல்லை என்ற அந்தக் குறை தெரியாத அளவிற்கு சுரேன்.ஜி, அழகிய கூத்தனுடைய ஒலி வடிவமைப்பு கதையோடு பொருந்தி உள்ளது..

இந்த நவீன யுகத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, மக்களின் மூடநம்பிக்கைகள், பக்தி என்ற பெயரில் போலி சாமியார்களின் உண்மை முகத்தை தோலுரித்தது காட்டியிருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்.

சிங்கிள் ஷாட்டில் வரும் சில காட்சிகள், குறிப்பாக ஜனரஞ்சக திரைப்படங்களில் இருந்து விலகிய கிளைமாக்ஸ் என வசனங்களே இல்லாமல் காட்சிகள் மூலம் அழுத்தமாக பதிய வைத்ததில் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

கொட்டுக்காளி போன்ற ஒரு திரைப்படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனை அவர்களுக்கு எங்களது மூவி விங்ஸ் இணையதளம் சார்பாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மொத்தத்தில் இந்த கொட்டுக்காளி திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத ஒரு பொக்கிஷமாக  கொட்டுக்காளி திரைப்படம் அமைந்துள்ளது.

error: Content is protected !!