போகுமிடம் வெகுதூரமில்லை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார், மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் :- மைக்கேல் கே ராஜா.
ஒளிப்பதிவாளர் :- டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்.
படத்தொகுப்பாளர் :- எம். தியாகராஜன்.
இசையமைப்பாளர் :– என்.ஆர். ரகுநந்தன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஷார்க் 9 பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் :- சிவா கில்லாரி.
ரேட்டிங் :- 3.5../5.
ஓட்டுனரான கதாநாயகன் விமல் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக பணம் தேவைப்படுவதால் தனது அமரர் ஊர்தியில் சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு செல்வதற்கு ஒத்துக் கொண்டு தன்னந்தனியாக பயணிக்கிறார்.
தன்னந்தனியாக பயணிக்கும் கதாநாயகன் விமல் திருநெல்வேலி செல்லும் வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் லிப்ட் கேட்டு தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் அந்த அமரர் ஊர்தியில் பயணிக்க நடு வழியில் ஒரு காதல் ஜோடியும் இந்த வண்டியில் கூத்து கலைஞர் கருணாஸ் வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அந்த வண்டியின் பயணிக்கும் குத்து கலைஞரான கருணாஸினால் வந்த பிரச்சனை என்ன? இந்த பல பிரச்சினைகளை கதாநாயகன் விமல் சமாளித்தாரா? சமாளிக்க வில்லையா? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை திருநெல்வேலியில் உள்ள சொந்தங்களிடம் ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் இந்த போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படத்தில் கதையின் நாயகனாக விமல் நடித்திருக்கிறார்.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக சென்னை மொழி பேசி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
நடிகர் விமல் இந்த கதையை கேட்டு நடிப்பதற்கு நான்கு சண்டைக் காட்சிகள் இரண்டு பாடல்கள் தேவை என்று சொல்லாமல் மிக அருமையான கதையை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நடிகர் விமல் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
இந்த போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
கதாநாயகன் விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு வேன் ஓட்டுநர் கதையை அமைத்து துணைக்கு ஒருவரை பயணிக்க வைத்து பல சுவாரசியமான காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்கள், வசனங்கள், சொந்த பந்தத்தில் வாழ்க்கை அனுபவங்கள் என, வாழ்வியலை சிறந்த ஒரு படைப்பாக படைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா.
அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும் கதையை யோசித்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் தமிழ் திரைப்பட உலகில் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கும்.
ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா கிளாரி தயாரித்த முதல் திரைப்படம் ஆர் கே சுரேஷ் நடிப்பில் விசித்திரன் கலையான விமர்சனங்களில் வெற்றி பெற்றது அதன் பின் விமல் கருணாஸ் நடிப்பில் போகுமிடம் வெகு தூரமில்லை மிக அருமையான திரைப்படத்தை சிவா கிளாரி கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் போகுமிடம் வெகு தூரமில்லை தமிழ் திரைப்பட ரசிகர்களால் கண்டிப்பாக கொண்டாட வேண்டிய திரைப்படம்.











