‘வருணன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ‘டத்தோ’ ராதரவி, சரன்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியலா, ஹரிப்ரியா, சங்கர்நக் விஜயன், பிரியதர்சன், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுன்னா கீர்த்திவாசன், ஹைட் கார்டி, க aus லி, கிரான்மாய், டும்கன் மாரி, பேபி ஜாய்ஸ், ஐஸ்வர்யா,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெயவேல் முருகன்.

ஒளிப்பதிவாளர் :- எஸ். ஸ்ரீராம் சந்தோஷ்.

படத்தொகுப்பாளர் :- முத்தயன் DFT.

இசையமைப்பாளர் :- போபோ ஷாஷி.

தயாரிப்பு நிறுவனம்:- யக்காய் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- கார்த்திக் ஸ்ரீதரன்.

ரேட்டிங் :- 2.75./5.

வடசென்னை, உள்ள ராயபுரம் பகுதியில் வாட்டர் கேன் விற்பனை செய்து கொண்டிருக்கும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி ஏற்படுகிறது.

வாட்டர் கேன் விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தங்களது தொழில் செய்து வந்தாலும், இரண்டு தரப்பில் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி சண்டை சச்சரவு என ஈடுபடுகிறார்கள்.

அது ஒரு‌ப்பக்கம் இருக்க காவல்துறை அதிகாரிகள் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.

இந்த நிலையில், வாட்டர் கேன் விற்பனை செய்யும் இரண்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் இடையே தொழில் ரீதியான போட்டி, மிகப்பெரிய அளவில் பகையாக உருவெடுக்க, அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த ‘வருணன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வருணன் திரைப்படத்தில் கதாநாயகனாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார்

கதாநாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மிக அருமையான கதாபத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்

இந்த வருணன் திரைப்படத்தில் கதாநாயகியாக கேப்ரில்லா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கனகச்சிதமாக நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் ஹரிபிரியா இவர்கள் ஜோடி வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கும்படி வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார்கள்.

ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைவரும் பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை வேகமாக பயணிக்க் வைகையில் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சியை திரைப்படமாக்கிய விதம் மிகச்சிறப்பு.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

வாட்டர் கேன் தொழிலை மையமாக வைத்து கதை மற்றும் திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்லிவிட்டு, அதைப்பற்றி எந்த ஒரு தகவலையும் திரைப்படத்தில் வைக்காமல், தண்ணீர் கேன் போடும் இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் காதல், திருமணம், அதைப் பற்றியே வரும் மோதல் என்று வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் மசாலா படத்தை தான் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயவேல் முருகன்.

மொத்தத்தில், ‘வருணன்’ திரைப்படம் மக்களின் தாகத்தை தணிக்கவில்லை.

error: Content is protected !!