’கூலி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரெபா மோனிகா ஜான், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸி, காளி வெங்கட், சார்லி, ஐயப்ப பி சர்மா, ரசிதா ராம், லொள்ளு சபா மாறன், திலீபன், தமிழ், ரிஷிகாந்த், ஜூனியர் எம்.ஜி.ஆர், பூஜா ஹெக்டே, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- லோகேஷ் கனகராஜ்.
ஒளிப்பதிவாளர் :- கிரிஷ் கங்காதரன்.
படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.
இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- சன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- கலாநிதி மாறன்.
ரேட்டிங் :- 3.5/5.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மாஃபியா தலைவனான நாகார்ஜுனா சட்டவிரோதமாக தங்கம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மனித உறுப்புகள் என பல தொழில்களை செய்து வருகிறார்.
மாஃபியா தலைவனான நாகார்ஜுனாவிடம் சௌபின் ஷாஹிர் நம்பிக்கையானவனாக பணியாற்றி வருகிறார்.
மாஃபியா தலைவனான நாகார்ஜுனா செய்யும் சட்டவிரோத செயல்களை வியாபாரத்தைத் தெரிந்து கொள்ள காவல்துறையினர் ரகசியமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
காவல்துறையினருக்கு தகவல் சொல்லும் நபர்களை கண்டுபிடித்து கொலை செய்வது சௌபின் ஷாஹிர் வேலையாக இருக்கிறது.
இதேபோல், சத்யராஜ் சௌபின் ஷாஹிர் அடித்து கொலை செய்கிறார்.
கதாநாயகன் ரஜினிகாந்த் சென்னையில் தேவா மேன்சன் ஒன்றை நடத்தி வருகிறார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய உயிர் நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் கிடைக்க உடனடியாக விசாகப்பட்டினத்திற்கு கிளம்பி செல்கிறார்.
ஆனால் சத்யராஜ் மகள் ஸ்ருதி ஹாசன் தந்தை சத்யராஜ் பார்க்க அனுமதிக்காமல் கதாநாயகன் ரஜினிகாந்த் தடுக்கிறார்.
சத்யராஜ் மகள் ஸ்ருதி ஹாசனிடம் உனது தந்தை சத்யராஜ் இயற்கை மரணம் இல்லை யாரோ ஒருவர் சத்யராஜை அடித்து கொலை செய்து இருப்பதாகவும் கதாநாயகன் ரஜினிகாந்த் தெரிந்துக் கொள்கிறார்கள்.
தனது உயிர் நண்பன் சத்யராஜ் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க கதாநாயகன் ரஜினிகாந்த் நினைக்கிறார்.
இறுதியில் தனது உயிர் நண்பன் சத்யராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக சத்யராஜ் கொலை செய்தார்கள்? கொலை செய்தவர்களை கண்டுபிடித்து கதாநாயகன் ரஜினிகாந்த் பழிவாங்கினாரா? பழிவாங்கவில்லையா? என்பதுதான் கூலி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் கூலி திரைப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
கூலி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனக்கே உரிய பாணியில் நடித்து அட்டகாசம் படுத்தி இருக்கிறார்.
தனது உயிர் நண்பனுக்காக பழிவாங்க துடிப்பது, நண்பனை கொன்றதுக்கான காரணத்தை தேடி அலைவது என நடிப்பில் ஸ்கோர் செய்து குறிப்பாக சண்டை காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகார்ஜுனா. வில்லத்தனத்தில் மிரட்டி உடை, நடை அனைத்தும் நடிப்பின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.
வில்லன் நாகார்ஜுனாவிற்க்கு அடியாளாகவும், நல்லவன் போல் நடித்து வில்லனாக மாறும் சௌபின் ஷாஹிர் அவர் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
சத்யராஜ் யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
சத்யராஜ் மகளாக வரும் ஸ்ருதி ஹாசன் சிறப்பான நடிப்பை கொடுத்து சென்டிமென்ட் காட்சிகளில் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
கதாநாயகன் ரஜினிகாந்த் நனபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உபேந்திரா, சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
டான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமீர் கான், அருமையாக நடித்திருக்கிறார்.
ரெபா மோனிகா ஜான், கண்ணா ரவி, மோனிஷா பிளெஸி, காளி வெங்கட், சார்லி, ஐயப்ப பி சர்மா, ரசிதா ராம், லொள்ளு சபா மாறன், திலீபன், தமிழ், ரிஷிகாந்த், ஜூனியர் எம்.ஜி.ஆர், பூஜா ஹெக்டே என அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து இருப்பது சிறப்பு.
இசையமைப்பாளர் அனிருத்தின்
பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் மிரட்டி இருக்கிறார்.
நண்பனை கொலை செய்தவனை பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த கூலி திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து காலி செய்துவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
நடிகர் கமல்ஹாசன் ரசிகர் என்பதை இந்த கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தை வைத்து நிரூபித்து விட்டார்.
மொத்தத்தில் கூலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காலி ஆக்கும் திரைப்படம்.










