36 ஆண்டுகளுக்குப் பின்பு  ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ஆறாவது திரைப்படம் “கூலி” இதற்கு முன் எத்தனை திரைப்படம் தெரியுமா?

36 ஆண்டுகளுக்குப் பின்பு  ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ஆறாவது திரைப்படம் “கூலி” இதற்கு முன் எத்தனை திரைப்படம் தெரியுமா?

சென்னை 06 ஆகஸ்ட் 2024 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவங நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம், ‘கூலி’.

இந்த ‘கூலி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஜந்து திரைப்படங்களுக்கு தணிக்கை குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் 171-வது திரைப்படமான கூலி-யில், சத்யராஜ், நாகர்ஜுனா அக்கினனி, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர், மகேந்திரன், கிஷோர், மோனிஷா பிளஸ்ஸி, என பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஆமிர் கான், கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இந்தத் திரைப்படத்துக்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார்.

இந்த கூலி திரைப்படத்தில் ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன்
படத்தொகுப்பை பிலோமின் ராஜ்
கவனித்துள்ளார்கள்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் இந்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் .14ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும்  இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் உள்ளது.

இந்த நிலையில், இந்த கூலி  திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளார்கள்.

அதிகளவில் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படமாக ‘கூலி’ திரைப்படம் அமைந்துள்ளது.

கூலி’ திரைப்படத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில்  ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ஜந்து திரைப்படங்கள் விபரம்.

நெற்றிக்கண் (1981) –

கவிதாலயா புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் இயக்குனர் விசு வசனம் எழுத, கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுதி இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் சரிதா மற்றும் லட்சுமி ஜோடியாக   இரண்டு விதமான தோற்றத்தில் தந்தை, மகன் கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் 1981  ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

புதுக்கவிதை (1982)

இந்த  புதுக்கவிதை திரைப்படம்  கன்னட திரையுலகில் 1976 ஆம் ஆண்டில் வெளியான “நா நின்ன மரேயலரே” (Na Ninna Mareyalare) திரைப்படத்தின் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கவிதாலயா புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் இயக்குனர் விசு வசனம் திரைக்கதை எழுதி இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் ஜோதி சரிதா சுகுமாரி இவர்கள் நடிப்பில் ரொமான்டிக் டிராமா பாணியில் வெளியான இந்த புதுக்கவிதை திரைப்படம் 1982  ஜூன் 11 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாஙகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில்  வரவேற்பை பெற்ற நிலையில்  இந்த புதுக்கவிதை திரைப்படத்தில் வெள்ளை புறா ஒன்று’ பாடல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மகான் அல்ல (1984)

கவிதாலயா புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் இயக்குனர் சுபாஷ் காய் கதை வசனம் எழுத, ஏ.எல். நாராயணன் திரைக்கதை எழுதி இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்  மற்றும் ராதா எம் எல் நம்பியார் ஆகியோர் நடிப்பில் இந்த  திரைப்படம் 1984  ஜனவரி 14 ஆம் தேதி உங்கள் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

நான் சிகப்பு மனிதன் (1985)

இந்த  நான் சிகப்பு மனிதன் திரைப்படம்  இந்தி திரையுலகில் 1984 ஆம் ஆண்டில் வெளியான “ஆஜ் கி ஆவாஸ்”  திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு லட்சுமி புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் சந்த் குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதில் ‘விஜய்’ என்ற கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசிரியர் ராபின்ஹுட் கதாபாத்திரத்தில் மற்றும் கே பாக்யராஜ் அம்பிகா ஆகியோர் நடிப்பில் இந்த  திரைப்படம் 1985 ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று  திரையரங்குகளில் வெளிவந்தது.

சிவா (1989)

இந்த  சிவா திரைப்படம்  இந்தி திரையுலகில் 1977 ஆம் ஆண்டில் வெளியான கூன்பசினா”  திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கவிதாலயா புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில்  ராகேஷ் குமார்  கதை எழுத, வசனத்தை வேதம் புரியுது கண்ணன் எழுத திரைக்கதை ஆனந்து எழுதி இயக்குனர் அமீர்ஜான்  இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் ரகுவரன், சௌகார் ஜானகி, ஷோபனா ஆகியோர் நடிப்பில் இந்த  திரைப்படம் 1989 மே 05 ஆம் தேதி   திரையரங்குகளில் வெளியானது. 

error: Content is protected !!