“பிளாக் மெயில்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜி.வி. பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி,
ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மு. மாறன்.
ஒளிப்பதிவாளர் :- கோகுல் பெனாய்.
படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.
இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- JDS ஃபிலிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர்கள் :- ஜெயக்கொடி அமல்ராஜ், தெய்வக்கனி அமல்ராஜ்.
ரேட்டிங் :- 3.5/5.
கோயம்புத்தூரில் கூரியர் நிறுவனத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பார்சல் கொண்டு செல்லும் குட்டி யானை வண்டியின் ஓட்டுனர் இல்லாத காரணத்தினால் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் டெலிவரி செய்வதற்காக குட்டி யானை வண்டியை கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் ஓட்டி செல்ல கொரியர் கம்பெனியின் முதலாளி முத்துக்குமார் முக்கியமான பார்சல் ஒன்றை டெலிவரி செய்யுமாறு கூறுகிறார்.
கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் ஓட்டி வந்த பார்சல் ஏற்றி கொண்டு வந்த குட்டியானை வண்டி காணாமல் போகிறது.
அதனால் கொரியர் கம்பெனி முதலாளி முத்துக்குமார் கொடுத்த பார்சல் டெலிவரி செய்யாததால் வந்து திருடு போய்விட்டதாக கதாநாயகி என்று பிரகாஷ் குமார் கூற
அவருடைய காதலி கதாநாயகி தேஜு அஸ்வினியை ஜி.வி. பிரகாஷ் குமாரின் முதலாளியான முத்துக்குமார் கடத்தி செல்கிறார்.
.
மற்றொரு பக்கம், கோவையின் மிகப்பெரிய பெரிய தொழிலதிபரான மற்றொரு கதாநாயகன் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றொரு கதாநாயகி பிந்துமாதவியின் ஒரே செல்ல மகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் காணாமல் போகிறார்.
இந்த நிலையில் கொரியர் கம்பெனி முதலாளி முத்துக்குமார் கடத்தி செல்லப்பட்ட, கதாநாயகி தேஜு அஸ்வினி கோவையின் மிகப்பெரிய பெரிய தொழிலதிபரான மற்றொரு கதாநாயகன் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றொரு கதாநாயகி பிந்துமாதவியின் ஒரே செல்ல மகள் காணாமல் போன சிறுமியும் எப்படி கண்டுபிடித்தார்கள்.
கொரியர் கம்பெனி முதலாளி முத்துக்குமாரால் கடத்தப்பட்ட கதாநாயகி தேஜு அஸ்வினியை கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா?
கோவையின் மிகப்பெரிய பெரிய தொழிலதிபரான மற்றொரு கதாநாயகன் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றொரு கதாநாயகி பிந்துமாதவியின் காணாமல் போன செல்ல மகளைக் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த “பிளாக் மெயில்” திரைப்படத்தின்
மீதிக்கதை.
இந்த “பிளாக் மெயில்” திரைப்படத்தில் கதாநாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.
ஒரு சாதாரண இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார் காதலியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற தவிப்பிலும், அதற்காக போடும் திட்டங்களிலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த “பிளாக் மெயில்” திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், உணர்ச்சிபூர்வமான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
இந்த “பிளாக் மெயில்” திரைப்படத்தில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தேஜு அஸ்வினிக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும் அதுவும் காதல் காட்சிகள் மட்டுமேதான் உள்ளது.
இந்த “பிளாக் மெயில்” திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக பிந்து மாதவி நடித்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் பிந்து மாதவி எனது மகன் காணாமல் போன சோகமும் தனது முன்னாள் காதலனிடம் கெஞ்சுவதும் தனது கணவரிடம் முன்னாள் காதலனை பற்றி மறைத்து சமாளிப்பதும் தன்னுடைய நடிப்பு மூலம் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
லிங்கா, மற்றும் முத்துக்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகன் ஜி.வி பிரகாஷ் குமாரின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக். கதாபாத்திரத்தை வாழ்ந்து நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரி பிரியா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவு மூலம் உழைப்பு திரைப்படம் முழுக்க தெரிகிறது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் த்ரில்லர் கதைக்கேற்ற பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார்.
பிளாக் மெயில் என்ற எதிர்மறை விஷயத்தை கொஞ்சம் புதுசாக சொல்லியிருக்கும் இயக்குநர் கதை, திரைக்கதை, மேக்கிங் இதில் அனைத்தும் ‘சூப்பர்’ டிக் வாங்கி இருக்கிறது.
மொத்தத்தில், “பிளாக் மெயில்” திரைப்படம் ஏகப்பட்ட திடீர் ட்விஸ்டுகள் நம்மை பிளாக்மெயில் செய்கின்றனர்.











