“டியூட்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, ஆர்.சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகினி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கீர்த்தீஸ்வரன்.
ஒளிப்பதிவாளர் :- நிகேத் பொம்மி.
படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- சாய் அபியங்கர்.
தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர்.
ரேட்டிங் :- 2.5/5.
கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் இணைந்து பலருக்கு பிறந்தநாள் வாழ்த்து மற்றும் திருமணநாள் வாழ்த்து சர்ப்ரைஸ் செய்து வரும் “சர்ப்ரைஸ் டியூட்” என்ற பெயரில் ஈவண்ட் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு உறுதுணையாக மாமன் மகள் கதாநாயகி மமிதா பைஜு உடன் இருக்கிறார்.
கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கதாநாயகி மமிதா பைஜு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கதாநாயகி மமிதா பைஜுக்கு கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் மீது காதல் கொள்கிறாள்.
ஆனால், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு, கதாநாயகி மமிதா பைஜு மீது கொஞ்சம் கூட காதல் வரவில்லை என கூற நான் உன்னை தோழியாக தான் பார்க்கிறேன் என கூறி கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன்
காதலை மறுத்து விடுகிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு கதாநாயகி மமிதா பைஜு மீது காதல் வர அந்த காதலை கதாநாயகி, மமிதா பைஜுயிடம் கூற நான் வேறொருவரை காதலிப்பதாக சொல்லி காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.
இந்த நிலையில் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகி மமிதா பைஜுவை அவருடைய காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்.
அதற்குள் கதாநாயகி மமிதா பைஜு மற்றும் பிரதீப் ரங்கநாதனுக்கும் கதாநாயகி மமிதா பைஜுயின் தந்தை அமைச்சர் சரத்குமார் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக ஏற்பாடு செய்து வருகிறார்.
இறுதியில் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு, கதாநாயகி மமிதா பைஜுவை திருமணம் செய்து கொண்டார்களா? கதாநாயகி மமிதா பைஜுவை அவருடைய காதலருடன் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் சேர்த்து வைத்தாரா? சேர்த்து வைக்கவில்லையா? என்பதுதான் இந்த “டியூட்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “டியூட்” திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்து இருக்கும் பிரதீப் ரங்கநாதன், தனக்கே உரிய பாணியில் நடித்து காதல், சோகம், காமெடி சண்டை காட்சிகள் என குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாத்ரூமில் அழும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
இந்த “டியூட்” திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுடன் செல்லமாக சண்டை, போடுவது கோபப்படுவது, என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
இந்த “டியூட்” திரைப்படத்தில் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமாரின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமாரின் காமெடி, வில்லன், ஜாதி வெறியன் என அனைத்திலும் அனுபவ நடிப்பை கொடுத்து மிகப்பெரிய அளவில் திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்.
இந்த டியூட் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
ஜாதி என்ற ஒரு ஒன்லைன் ஆக இருந்தாலும் திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை காதல், நட்பு, காமெடி, என சுவாரசியம் என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்த்திருக்கிறார் இயக்குனர்
கீர்த்தீஸ்வரன்.
தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையிலும் ஜாதி வெறியுடன் அழைத்து கொண்டு இருக்கும் ஜாதிதலைகளுக்கு எழுதிய வசனம் ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள், ஏன் அடுத்தவனை சாக்கடிக்கிறீர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு கூறி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.
“டியூட்” திரைப்படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு நன்றாக இருப்பதாகவும், மந்தமான இரண்டாம் பாதி சோதிப்பதாகவும், இடைவேளை காட்சி சிறப்பு என்றும், இரண்டாம் பாதியின் தொடக்கம் நன்றாக இருந்தாலும் போக போக மந்தமாக மாறியுள்ளது.
மொத்தத்தில், “டியூட்” திரைப்படம் முதல் இரண்டு படங்கள் போல் இல்லை.











